கவிதை: ‘அழகு’ – கவிஞர் பாங்கைத் தமிழன்

கவிதை: ‘அழகு’ – கவிஞர் பாங்கைத் தமிழன்

 

 

 

இது
ஓர் அழகான உலகம்!

இது
யாரோ ஒருவரால்
படைக்கப்பட்டதா?

இது
தானாகவே
உருவானதா?

உலகம்
அழகானதே!

அறிவியலைத் தாண்டி
அஞ்ஞானமும்
கோலோச்சுகிறது?

இது
ஒரு முடிவற்ற கதை!

இப்போது
உலகத்திற்கு வருவோம்;

உலகம்
ஓர் ஒப்பற்ற அழகு!

எந்த ஒரு மனிதனும்
இவ்வுலகத்தை
அழகாக்கியதில்லை;
மாறாக….
அசிங்கப்படுத்தியே
வந்தான், வருகிறான்;
வருவான்?

அந்த
அசிங்கப் படுத்தல்
வேறொன்றும் இல்லை;
சாதி செய்து….
சமயம் செய்து….
சாக்கடையாய் ஓட விட்டதுதான்!
********

… கவிஞர் பாங்கைத் தமிழன்…

 

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *