கா. பாபுசசிதரன் எழுதிய "ஆணியை நம்பும் கடவுள்" கவிதைகள் தொகுப்பு – நூல் அறிமுகம் எழுதியவர்: வெறுத்தா

கா. பாபுசசிதரன் எழுதிய “ஆணியை நம்பும் கடவுள்” கவிதைகள் தொகுப்பு – நூல் அறிமுகம்

 “ஆணியை நம்பும் கடவுள்” கவிதைகள் தொகுப்பு – நூல் அறிமுகம்

பயணத்தில் பூத்த நெறுப்(பூ)பு
_______________________________________

இந்த உலகத்தில் பெரும்பாலானவர்கள் கடவுளை நம்பிக் கொண்டிருக்கும்போது கவிஞர் தோழர் க. பாபு சசிதரன் அவர்களின் பார்வையில் கடவுள் ஆணியை நம்பிக் கொண்டிருந்தார்

ஆம் ஆணியை நம்பும் கடவுள்
என்ற தலைப்பில் அவர் எழுதி இருக்கின்ற இந்த கவிதை தொகுப்பில்
உள்ளடக்கத்தில் இருக்கின்ற ஒவ்வொரு தலைப்பின் கீழ் ஐந்திலிருந்து ஏழு குறுங்கவிதைகளை வெவ்வேறு கோணங்களில் படைத்திருப்பது கவிஞரின் புதிய சிந்தனையும் பெரும் திறமையும் என சொல்லலாம்

எல்லோரும் மரணத்தை மௌனம் என்று சொல்ல நம்முடைய கவிஞர் மரணத்தை பூரணம் என்று ஒரு கவிதையில் சொல்கிறார்

பேராசான் புத்தருடைய போதனைகளையும் அவருடைய ஞானத்தையும் பேச வேண்டிய மக்கள் அவருடைய மௌனத்தைப் பற்றி மட்டுமே பேசிக் கொண்டிருக்கின்றனர் என்கிறார்

கொஞ்ச நேரம் பழகிய விலங்குகள் கூட நம்முடன் அன்பையும் உறவையும் விட்டு விலகுவதில்லை ஆனால் மனிதர்கள் மட்டும் எப்படித்தான் துரோகிகள் ஆகி விடுகிறார்கள் என்று மனிதர்களின் செயல்பாடுகளை குறித்து பேசுகிறார்

மனிதர்கள் அவிழ்த்து போடும் அழுக்குத் துணிகள் பேசிக் கொள்வதைப் போல ஒரு கவிதை அந்தக் கவிதை அதை அணிந்தவர்களின் அந்தரங்க ரகசியங்களை பற்றி பேசிக்கொண்டால் எப்படி இருக்கும் என்று அந்த கவிதையை வாசிக்கும் ஒவ்வொரு வாசகனும் சிந்தித்துக் கொள்ளும் ஒரு திறனை எழுத்தாளர் தூண்டுகிறார் அந்தக் கூடைகளில் பேசிக்கொண்ட அழுக்கு துணிகள் புதிதாய் பூப்பெய்த ஒரு பெண்ணின் முதல் மாதவிடாயில் ஏற்பட்ட உதிரப்போக்கின் வலிகளை
ஒரு தாய் முதல் பிரசவத்தின் போது அலறிய அலறல்களை
இருட்டில் யாருக்கும் தெரியாமல் நிகழ்ந்து முடிந்த ஒன்றுக்கும் மேற்பட்ட பாலியல் உறவுகளை
மனிதத் தன்மை மீறிய வன்புணர்வுகளை
ஆணவ படுகொலைகள் செய்த அழுக்கு கரைகளை
பெரும் உழைப்பு சுரண்டலை நிகழ்த்தும் இந்த முதலாளித்துவ உலகில் உழைத்துக் கலைத்த ஒரு தொழிலாளி தன் வியர்வை சொட்ட சொட்ட அவிழ்த்து போட்டது கதையை என இப்படி ஒவ்வொருவரும் அந்தந்த சம்பவங்கள் முடிந்து தன்னுடைய ஆடைகளை அவிழ்த்து போட்டு இருப்பதாக அந்த அழுக்குத் துணிகள் பேசிக் கொள்வதாக ஒரு வாசகனால் தன் வாழ்த்துகளுக்கு தகுந்து புரிந்து கொள்ள முடியும் வகையில் அந்த கவிதை முடிகிறது

ஒரு பெண் தன் குடும்பத்தாரால் குலசாமியாக மகாலட்சுமி ஆக புகழப்பட்டு கொண்டிருப்பதெல்லாம் அந்தப் பெண் அந்த வீட்டில் சுதந்திரமாக முடிவெடுக்காமல் அடிமையாக இருக்கும் வரை தான் என்று ஓர் இடத்தில் பெண்ணியம் பேசுகிறது

உலகத்தில் முதல் முதல் பிறந்த உறவான காதலை துரத்துகின்ற ஒரு வாள் என்பது சாதிய பட்டறையில் மட்டுமே தயாரிக்கப்படுகிறது ஆனால் அந்த சாதியை உலகிற்கு அறிமுகப்படுத்தியவர்கள் குருதி வழியும் அந்த வாளை பயன்படுத்துவதில்லை என்று சாதியவாத ஏவலர்களை சவுக்கில் அடிக்கிறது

குடும்பத்திற்காக வறுமையைப் போக்க உழைக்கின்ற நபர்கள் இங்கே பொதுவாக மக்கள் வாழ்கின்ற ஓரளவிற்கு இயல்பான வாழ்க்கையை வாழ துவங்குவதற்குள் இளமை தீர்ந்து விடுகிறது என்ற இந்த சமூகத்தின் அவலத்தை சொல்லும் ஒரு கவிதை

இப்படி பல இடங்களில் ஆபத்தான சொற்களைப் பற்றியும்
அவமான சொற்களை பற்றியும்
காதலைப் பற்றியும் பல கவிதைகள் பேசுகின்றன

கடவுளைக் குறித்து அதன் செயல்பாடுகளை இடித்து பல கவிதைகள் பேசுகின்றன

ஒரு கவிதையில் புரட்சியாளனாக இருந்த இயேசுவை சிலுவையில் அறைவதற்கு ஆனியால் அடித்தனர் ஆனால் அதே இயேசுவை இங்கு உள்ள மனிதர்கள் சுவற்றில் அறைவதற்காக ஆணி அடிக்கின்றனர் என்று கடவுளர்களின் இருப்பு எத்தகையது என்பது குறித்து தெள்ளத் தெளிவாக பேசுகிறது

இப்படி பிறப்பு இறப்பு காதல் கடவுள் இவைகளுக்கு இடையில் இழையோடுகின்ற இந்த வாழ்வின் சமூக அவலங்களையும் இன்பத் துன்பங்களையும் எடுத்துரைத்து நூலாசிரியர் தன் பயணத்தின் போது எழுதிய அனுபவங்களாக வந்து கொட்டுகிறது இந்த ஆணியை நம்பும் கடவுள்

அனைவரும் வாங்கி வாசிக்க வேண்டிய ஒரு அற்புதமான புத்தகம் கவிஞர் எழுத்தாளர் தோழர் க. பாபு சசிதரன் அவர்களுக்கு எனது பேரன்பின் வாழ்த்துக்கள்.

📚 நூலின் விவரங்கள்:

தலைப்புவிவரம்
நூலின் பெயர்:“ஆணியை நம்பும் கடவுள்” கவிதைகள் தொகுப்பு
ஆசிரியர்:கா. பாபுசசிதரன்
வெளியீடு:
நிமிர் புத்தகப் பட்டறை வெளியீடு,
சென்னை.
தொடர்புக்கு: 9444009730
விலை: 
அறிமுகம் எழுதியவர்:  

✍🏻 வெறுத்தா

புத்தகம் வாங்க: https://thamizhbooks.com/

******************************************************************************

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1

Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது, எங்கும் வெளியிடப்படாத நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *