பக்தி என்னும் போதையில்
பரிதவித்து நிற்கிறது ‘ பாரத்’
ஐந்நூறு ஆண்டு வரலாறாம்
ஆளுக்கொரு கதையோடு
அலைபாய்கிறது கூட்டம்
நரை திரை நட்சத்திரங்கள்
நல்கிய கொடையில்
நாலாபுறமும் வண்ணங்கள்
கொள்கை குன்றாய் குமுறியவர்கள் குழைந்து
கும்பிடு போடுகிறார்கள்.
நல்கிய கொடையில்
நாலாபுறமும் வண்ணங்கள்
கொள்கை குன்றாய் குமுறியவர்கள் குழைந்து
கும்பிடு போடுகிறார்கள்.
மாற்று மதத்தின் மேல் இந்
மரணயாகம் நடக்கிறதே என்று
எவருக்கும் நினைவில்லை
ஏனிந்த இழி நிலையில்
மக்கள் கூட்டம்?
மரணயாகம் நடக்கிறதே என்று
எவருக்கும் நினைவில்லை
ஏனிந்த இழி நிலையில்
மக்கள் கூட்டம்?
பால ராமனின் பேரில் செய்த
பாவங்களின் பட்டியலில்
பிரதிஷ்டை பெரும் பாவம்
பாவம் இந்த பாலராமனுக்கு
இது புரியவாப் போகிறது?
பாவங்களின் பட்டியலில்
பிரதிஷ்டை பெரும் பாவம்
பாவம் இந்த பாலராமனுக்கு
இது புரியவாப் போகிறது?
வாக்கு வங்கியின் நோக்கம்
இங்கே வடிவமைக்கப் பட்டிருக்கிறது.
மக்களைஅதை செல்லாததாக்கி
‘பழி தீர்க்க’ வர வேண்டும்
இங்கே வடிவமைக்கப் பட்டிருக்கிறது.
மக்களைஅதை செல்லாததாக்கி
‘பழி தீர்க்க’ வர வேண்டும்
எழுதியவர்
ச.லிங்கராசு
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

![தேவிபாரதியின் “நீர்வழிப் படூஉம்” [நாவல்]](https://bookday.in/wp-content/uploads/2024/01/Neervazhi-Paduvum-நீர்வழிப்-படூஉம்-150x150.jpeg)