பாலா கவிதைநேற்று நள்ளிரவில்
ஒரு நீலக் கடலில்
நீந்திக் கொண்டிருந்தேன்.

கருப்பு இரவில்
நீலக் கடலில்
ஆழத்தின் அந்தகாரத்தில் அமிழ்ந்துகொண்டிருக்கும் பொழுது

கடலுக்கு மேலிருந்து
அவசர உதவியாய் மின்னிக்கொண்டிருந்தது உன் முகம் மட்டுமே.

நட்சத்திர பின்னணியில்
மேலே தெரியும்
உன் முகத்தை
இந்த கடலின் ஆழத்திலிருந்து பார்க்கிறேன்.
இப்போது
நட்சத்திரங்கள் தெரியவில்லை.

ஆழம் மட்டும் கூடிக் கொண்டே போகிறது.

மேலிருந்து நீ கேட்கும்
“இருக்கிறாயா இருக்கிறாயா”
மட்டும் கிசுகிசுப்பாய் கேட்கிறது.

நீ இன்னும்
எவ்வளவு ஆழம் ?

– பாலா