Subscribe

Thamizhbooks ad

பால சாகித்ய விருதாளர் உதயசங்கருக்கு பாராட்டு விழா

சாகித்ய அகாடமியின் ஆதனின் பொம்மை சிறார் இலக்கியத்திற்கான பால சாகித்ய விருது பெற்ற தோழர் உதயசங்கர் அவர்களுக்கு ஞாயிறன்று(ஜூலை 2) பாரதி புத்தகாலயம் அரும்பு நூலகத்தில் பாராட்டு விழா பெருமகிழ்ச்சியோடு நடைபெற்றது.

சிறார் இலக்கிய ஆளுமைகள் பாராட்டி சிறப்பித்த நிகழ்வில் பிள்ளைக்கலைஞர் கனியமுதனின் இன்னிசையுடன் விழா துவங்கியது‌.எழுத்தாளர் சைதை ஜெ வரவேற்புரையுடன் நிகழ்வு இனிதே துவங்கியது.

இடைக்கால சிறார் இலக்கியம் துவண்டுப்போன காலத்தில் மீண்டும் ஆயிஷா நூல் மூலம் சிறார் இலக்கியத்திற்கு புத்துணர்வு தந்து அனைவரையும் சிறார் இலக்கியத்தை திரும்பிப் பார்க்கச் செய்த தோழர் ஆயிஷா இரா. நடராசன் அவர்கள் சிறார் இலக்கியத்தில் சமீபமாக இந்துத்வா ஆதிக்கத்தை உயர்த்திப் பிடிக்கும் நூல்கள் வெளிவந்துள்ளதைப் பற்றி விளக்கமாகப் பேசினார். பல வண்ணங்களுடன் ஆகர்ஷனமான படங்களுடன் ராமர், கிருஷ்ணர் உருவ படங்களைக் கொண்டு பிள்ளைகளைக் கவரும் வகையிலும் இந்து தர்மத்தில் ஈர்ப்பு ஏற்படுத்தும் வகையிலும் நூல்கள் அச்சாகி வருவதும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட நூல்களை இப்படியான வடிவமைப்பில் சிறார் இலக்கியத்தில் பிரசன்னமாகப் போவதைப் பற்றிய தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.

அடுத்ததாக தனது தீக்கணையான உரையில் தோழர் கே. பாலகிருஷ்ணன் அவர்கள் தோழர் உதயசங்கருக்கு வழங்கப்பட்ட பாலசாகித்ய விருதிற்கான தனது பாராட்டுதலையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொண்டு களமிறங்கினார். பல ஆண்டுகளின் போராட்டத்திற்குப் பிறகு தேர்வு செய்வதின் பின்புலமாக பல அரசியல் சூட்சமங்கள் இருக்கும் பட்சம் அதையும் தாண்டி இன்று தோழருக்கு விருது கிடைத்ததில் தனது மட்டற்ற மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். ஆளுநர் ரவியின் சனாதனத்தை உயர்த்திப் பிடிக்கும் சமீபகால உரைகளுக்கான தனது கண்டனத்தை பதிவு செய்தார்.
சனாதனம் உலகை ஆளப் போகிறது என்றும் சனாதனத்தின் உச்சமே வள்ளலார் என்றும் சனாதன கோட்பாட்டில் தீண்டாமை என்கிற ஒன்று இல்லவே இல்லை என்கிற ஆளுநரின் உரையை சுட்டிக்காட்டி சனாதனத்தின் மறைமுக அரசியலை தோலுரித்தார்.. மேலும் யாதும் ஊரே யாவரும் கேளீர் என்கிற கனியன் பூங்குன்றனாரின் பாடல் தெரிவிக்கும் கருத்தும் வேதத்தின் வர்ணாசிரமத்தை தூக்கிப் பிடிக்கும் சனாதனமும் ஒன்று என்பது எப்படி சரியா இருக்கும் என்கிற கேள்வியை முன்வைத்தார்.

அலகாபாத் நீதிமன்றத்தில் காதலிக்கு செவ்வாய் தோஷம் இருப்பதால் மணமுடிக்க முடியாது என்று தொடுத்த வழக்கை கையாண்ட நீதிபதி காதலியின் ஜாதகத்தை பரிசோதித்து காதலன் அவளை நிராகரித்ததற்கான காரணமாக அசலில் காதலியின் சாதகத்தில் செவ்வாய் தோஷத்தை கண்டறிந்து பதிவு செய்யுமாறு வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதியின் மடமை தனத்தை சாடிப் பேசினார். அரசும் அதிகாரமும் எதை நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறது என்பதற்கு இந்த வழக்கே சாட்சி என்று அழுத்தமாக அடிகோடிட்டார்.

இந்தியாவின் பன்முகத்தன்மை காப்பாற்றப்பட சனாதன தத்துவார்த்தப் போர் துவங்க வேண்டி இருக்கிறது.. என்றும் நமது தமிழ் மண்ணிலிருந்து முதல் விதை விதைக்கப்பட வேண்டும் என்பதையும் ஊன்றி உரைத்தார்.

ஆனந்தவல்லி நாவல் பற்றி பேசிய கே.பாலகிருஷ்ணன் மராட்டியர் ஆட்சியிலிருந்து வந்த நமது இந்திய வரலாறு வெவ்வேறு ஆட்சியாளர்களிடம் கைமாறி இறுதியாக இஸ்லாமியர்கள் ஆட்சியில் நிறைவு பேற்ற மன்னராட்சியை பற்றி விரிவாகப் பேசுவதை பதிவிட்டார்‌.

தமிழ்ச் சமூகம் அமைதியான சமூகம் என்பது உண்மையல்ல வர்க்கப் போராட்டங்கள் நடந்த வண்ணம் தான் இன்றும் உள்ளன. பிராமணியத்தையும் பிராமண தத்துவத்தையும் அரங்கேற்றி உள்ளார்கள். அரசர்களின் வசதிக்காக பிராமணியம் உயர்த்திப் பிடிக்கப்படுகிறது என்பதையும் வலியுறுத்தினார்.

கூடுதலாக டெல்டா பகுதிகளில் ஏன் அதிகமான கோயில்கள் காலங்களாக கட்டப்பட்டு வருகின்றன என்பதையும் விளக்கினார். இந்திய வரலாறுகள் அனைத்தும் வடக்கே இருந்து தான் உருவாகின என்கின்ற நம்பிக்கையை சமீபத்திய கீழடி அகழ்வாராய்ச்சி உடைத்ததை சுட்டிக்காட்டினார். இந்த ஆராய்ச்சியின் வழியாக தெற்கே இருந்து தான் வரலாறுகள் தொடங்கப்பட்டன என்பதையும் தமது உரையில் விளக்கிக் அது மட்டுமின்றி சமீபமாக முதல்வரை சந்தித்து பேசும் வாய்ப்பு ஏற்பட்ட தருணத்தில் தமிழ்நாட்டில் சாகித்ய அகடமி அமைக்க வேண்டும் என்கிற வேண்டுகோளையும் முதல்வரிடம் தான் முன் வைத்ததாகத் தெரிவித்தார் தோழர் கே. பால கிருஷ்ணன்.

மீண்டும் எழுத்தாளர் ஆயிஷா நடராசன் தனது உரையை தொடர்ந்தார். அகழ்வாராய்ச்சி என்றால் என்ன என்கிற பிள்ளைகளின் கேள்விகளுக்கு கீழடி அகழ்வாராய்ச்சியை பற்றிய போதிய தகவல்கள் அவர்களை தெளிவுபடுத்தும். அதற்கு பல மொழிகளில் வெளிவந்த நூல்கள் கொண்டு விளக்கமளித்தார்.

1994 இல் வெளிவந்த Back of soldiers, 2014 இல் பால் சாகித்ய விருது பெற்ற அஸ்ஸாம் எழுத்தாளர் தினேஷ் கோசாமியின் நூல்கள், எழுத்தாளர் பிருந்தா எழுதிய Crystal brave character போன்ற நூல்கள் archeology சம்பந்தப்பட்ட நூல்கள். இவையனைத்தும் பிள்ளைகளுக்கு அறிமுகப்படுத்த வேண்டும். அறம் ஒழுக்கம் சார்ந்த விழுமியங்கள் மட்டுமே நூல்களாக பிள்ளைகளுக்கு அறிமுகப்படுத்திய இலக்கிய தளத்தை இது போன்ற மூத்த இலக்கியங்கள் முன்வைக்கும் தளங்களைக் கொண்ட பன்மொழி சிறார் இலக்கியங்கள் சிறார் இலக்கியத்தின் மீதான பார்வையை தகர்த்து மாறுபட்ட கோணங்களை க் கொண்ட விஷயங்களை அரசியல் போன்ற பெரித்தன தளங்களை பிள்ளைகளுக்குக் கடத்திடும் பெரும் முனைப்பை காட்டி வருகின்றன என்றும் பொத்தாம் பசலித்தனமான சிறார் படைப்புகளை மடைமாற்றியதில் அயல்நாட்டு எழுத்துக்கள் மட்டுமின்றி யூமா வாசுகி, உதயசங்கர் போன்ற எழுத்தாளர்கள் சிறார் இலக்கியங்கள் பேசாத தளங்களையும் படைப்பாக்கபடுத்தியுள்ளனர் என்று சிலாகித்துப் பேசினார்.

பிள்ளைகளின் கல்வியில் அகழ்வாய்வுகள் பற்றிய பாடங்கள் இடம்பெறவேண்டும். தமிழக வரலாறுகளும் இந்திய வரலாறுகளும் பிள்ளைகள் அறிந்திருக்க வேண்டும் அதற்கு ஆதனின் பொம்மை நூலின் ஒரு பகுதியாவது பாடநூலில் இடம் பெற வேண்டும் என்கிற தனது வேண்டுகோளை முன்வைத்து உரையை நிறைவு செய்தார்.

அடுத்து ஒரு சிறார் கதைசொல்லியாக ரமணி .. ஆதனின் பொம்மை கதையை அவரை விட இத்தனை முதிர்ச்சிராகவும் நேர்த்தியாகவும் சுவாரஸ்யமாகவும் யாராலும் எடுத்துக் கூற முடியாது.. அரங்கமே வியக்கும் வண்ணம் தங்குதடையற்ற நடையில் மிக எளிமையாக கதையை விளங்கச்செய்துள்ளார். ரமணியின் கதைப்பிற்குப் பின் ஆதனின் பொம்மை ஆகாயமாக விரிந்தது. வாசிக்கும் ஆர்வத்தை தூண்டச் செய்த பாங்கு ரமணியின் மொழியில் மிளிர்ந்ததைக் காண முடிந்தது… கதையை பயிற்சிப்படுத்திக் கொள்ளாமல் ஆழமாகவும் ஆர்வமாகவும் ரசித்து உள்வாங்கியுள்ளார் என்பதே அவரின் கதைப்பின் உயிரோட்டம் நமக்கு உணர்த்துகிறது.

70 சிறார் எழுத்தாளர்கள் கொண்டு படைப்புகள் வெளிவந்துக்கொண்டிருந்த காலங்களில் கடந்த பத்து ஆண்டுகளாக சிறார் எழுத்தாளர்கள் மிக அதிகமாகக் கூடியுள்ளதை உருவாகியுள்ளதை மேற்கோலிட்ட  விழியன், தனது உரையில்  உதயசங்கர் 1950 இல் கோவில்பட்டியில் பிறந்தவர் என்றும் ஸ்டேஷன் மாஸ்டராகப் பணிபுரிந்து விருப்ப ஓய்வு பெற்றுக்கொண்டு 40 ஆண்டுகளுக்கும் மேலாகத் தன்னை முழுமையாக இலக்கியத்திற்கு ஒப்புக்கொடுத்தார் என்றும் நாவல் நாடகங்கள் குறுநாவல்கள் என்று நீளுகிற இவரது  இலக்கியத் தொண்டு மலையாள ஆங்கில இலக்கியங்களை மொழிபெயர்ப்பதிலிருந்து தனது ஆகப்பெரும் இலக்கியார்வத்தை வெளிப்படுத்தியுள்ளார். இவை அத்தனையிலும் திருப்தி ஏற்படாமல் சிறார்களுக்கான குழந்தைகளுக்கான இலக்கியங்கள் படைத்து அவர்களை வாசிப்புத் தளத்திற்கு கரம் பற்றி அழைத்து வர வேண்டும் என்கிற தீவிர முயற்சியில் தனது ஒவ்வொரு படைப்பையும் வெறும் எழுத்துக்காக மட்டுமே படைக்காமல் பிள்ளைகளின் நலன் கருதி யதார்த்த விழுமியங்களிலிருந்து சமூகத்தால் பிள்ளைக்காவியங்களில் புறக்கணிக்கப்பட்ட தளங்களிலிலெல்லாம் படைப்புகளை எழுதி சிறார் இலக்கியத்தில் புரட்சியை ஏற்படுத்தினார். அதேபோல ஒவ்வொரு சிறார் இலக்கியத்தில் அவர் கைக்கொண்ட தளங்களை சாதாரணமாக எடுத்துக் கொண்டு படைக்காமல் அதற்கான முழு விவரங்களைத் தேடி தமது ஆய்வை மேற்கொண்டு அதற்கு தகுந்தவாறு பாத்திரப் பெயர் முதற்கொண்டு சூழல் நில அமைவிடங்கள் தளங்கள் வரலாற்று குறிப்புகள் என அனைத்தையும் மாறுபட்ட அணுகுமுறையுடன் படைத்துள்ளார்.

ஆதனின் பொம்மை நூலும் அப்படியான வகைமைக்குள் பிள்ளைகள் எளிமையாக தொல்லியல் வரலாறுகளை அறிந்துக் கொள்ளும் கருவூலமாகத் திகழ்வதை எடுத்துக் கூறினார். இந்த நூலின் வழியாக தமிழ் நாட்டின் பல ஆயிர ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த நமது மண்ணின் மனிதர்களை பிள்ளைகள் அறிந்துக் கொள்ள உதவும் நூலாக வலம் வருவதை அனைத்து சிறப்புரையாளர்களும் வியந்துப் பாராட்டினர்.

தோழர் பாலபாரதி தனது உரையில், சிறார் இலக்கியங்கள் என்றாலே சமகாலத்தில் ஹ்யுமா வாசுகியும் உதயசங்கர் மட்டுமே பேசப்படும் ஆளுமைகளாக திகழ்கின்றனர். பன்மொழி பிரபல சிறார் எழுத்தாளர்கள் பற்றியும் அவர்கள் பிள்ளைகளின் இலக்கியத்தை கையாண்ட முறையையும், சமூகத்திலிருந்து விலக்கப்பட்ட அனைத்தையும் பிள்ளைகளின் இலக்கியத்திற்குள் புகுத்தி சாதித்துள்ளதை பல நூல்களைக் குறிப்பிட்டும் எழுத்தாளர்கள் பலரை சான்றாகச் சுட்டிக்காட்டியும் பேசினார். அதே போல் உதயசங்கரின் நூல்களில் ஒருசில நூல்களை உதாரணப்படுத்தினார்.

ஆதனின் பொம்மையில் கேப்டன் பாலுவின் மாமன்மகள் மதுமிதா பெரிய மனுஷி ஆனதால் முன்பைப் போல அவனால் இயல்பாகப் பேசிப் பழக முடியாததைப் பற்றி ஒரே வரியில் தோழர் குறிப்பிட்டதையும் மதுமிதா கிராமத்து பிள்ளையாக இருந்தாலும் அறிவிலும் வாசிப்பிலும் தேர்ந்தவளாக இருப்பதாகவும் வீட்டிற்குள்ளேயே நூலகம் அளவு புத்தகங்கள் வைத்திருப்பதும் தனக்கு கிரிக்கெட் தவிர வேறெதுவும் தெரியாது இருக்கும் குற்றவுணர்வில் அவளுடன் சகஜமாகப் பழக சங்கடப்படுவதையும் பிள்ளமைகளுக்கான நடையில் எளிமையான மொழியில் எழுத்தின் வழியாக கதைத்திருப்பது பற்றி சிலாகித்து பாலபாரதி பேசியது நெகிழ்ச்சாயாகவும் நூலை வாசிக்கும் ஆர்வம் மிகைப்பட்டது.

நவீன சிறார் இலக்கியகர்தா என்றே தோழர் உதயசங்கரை போற்றலாம் என்கிற பாணியில் மெய்சிலிர்த்து பேசிய விஷ்ணுபுரம் சரவணன்,  தோழரின் சிறார் இலக்கிய நூல்கள் சிலவற்றின் மீதான தனது பார்வையை வெளிப்படுத்தினார். குறிப்பாக கட்டை விரலின் கதை நூல் பல கோணங்களில் அணுகக் கூடிய நூலாக சிறார் இலக்கிரத்தில் உச்சம் பெற்ற ஒன்று என்று கொண்டாடினார். அந்தக் கதையின் ஏகலைவன் இறுதியில் கூறுவதாகத் தோழரின் வரிகள் “இன்னமும் துரோணர்கள் இருக்கிறார்கள்” என்கிற அதிகார மேலாதிக்கத்தை பல பரிணாங்களில் வாசகரை சிந்திக்க வைக்கிறது என்பதையும் கோடிட்டார்.சாதி சார்ந்தும் பிராமணியத்தை உயர்த்திப் பிடிப்பதாகவும் சனாதன பார்வையில் அணுகக் கூடியதாகவும் பிரிவினைவாதத்தைப் பேசுவதாகவும் அந்த ஒற்றை வரிகள் புரையோடிய மடமைச் சமூகத்தில் வளர்க்கப்படும் பிள்ளைகளை சமத்துவ பார்வையை நோக்கித் திருப்பும் வகையில் இந்த வரிகள் அமைந்திருப்பது நூலின் பலம்‌ என்பதை தனது பாங்கில் விளக்கிக் கூறிய தோழர் மனிதகுல வரலாற்றைப் பேசிய பீபேகா குகையில் நூல் முன் வைத்த கருத்துக்களை பகிர்ந்தார்.
உலகளாவிய சிறார் இலக்கியங்கள் சிலவற்றை முன்னுதாரணமாகக் கொண்டு தோழரின் நூல்களை ஆய்ந்து பேசினார்.

தொடர்ந்து உரையாடல்களில் அடுத்ததாக பத்திரிகையாளர் ஆதி வள்ளியப்பா,  தோழர் உதயசங்கர் அவர்களின் நூல்கள் ஆறு ஏழு எட்டு வயதிற்குட்ட குழந்தைகளுக்கான படைப்புகளாக விரிந்து வருவதை குறிப்பிட்டுக் கூறினார். சிறார் இலக்கியங்கள் பெரும்பாலும் பத்து வயதிற்கு மேற்பட்ட மொழிச் செறிவும், நன்கு வாசிக்கத் தெரிந்த பிள்ளைகளுக்கானதாக இருந்த காலங்கள் அதிகம். சமீபமாக பத்து வயதிற்குட்பட்ட பிள்ளைகள் வாசிக்கத் தக்க நூல்கள் அதிகமாக படைக்கப்படுவதைச் சுட்டிக்காட்டி சாகித்ய புரஸ்கார் விருதுகள் மக்களின் வரிப்பணத்தில் வழங்கப்படும் விருதுகள் என்றும் குழந்தைகளுக்கு நமது வரலாற்றையும் பண்பாட்டின் சிறப்பம்சங்களையும் இலக்கியங்கள் வழியாகக் கடத்த வேண்டும் என்பதை ஒரு சிறார் இலக்கிய செயல்பாட்டாளராக உரத்தே கூறினார்.

அகழ்வாய்வுத் துறையில் பிள்ளைகளுக்கு எளிமையான புரிதலை ஏற்படுத்தும் நூலான ஆதனின் பொம்மைக்கு இதுவரை எந்தவொரு விருதும் வழங்கப்படவில்லை சாகித்ய அகாடமியின் பால புரஸ்கார் விருது மட்டுமே இந்நூலிற்க்ன தனித்த முதல் அங்கீகாரம் என்பதை மிகுந்த வருத்தத்துடன் பதிவிட்டார்.

அதேபோல தோழர் உதயசங்கர் அவர்களின் முதல்வருடனான சந்திப்பில் சிறார் இலக்கியத்தில் அரசின் பங்கு என்ன என்பதைப் பற்றிய தனது ஆலோசனைகளை முன்வைத்ததை ஆதி வள்ளியப்பன் தோழர் தனது உரையில் பகிர்ந்தார். தனி ஆளாக எதுவும் செயல்படுத்த முடியாது. கூட்டாகத் தான் சமூகத்திற்கு தொண்டாற்றிட முடியும் என்பதையும் வலியுறுத்தினார்.

சிறார் இலக்கிய சக்கரவர்த்தியாக எழுத்தாளர் அழவள்ளியப்பன் சில பத்தாண்டுகளுக்கு முன் இருந்தார். அதற்குப் பிறகு அவரது இடத்தை தோழர் உதயசங்கர் கூடுதலாகவே சிறார் இலக்கியத்திற்கு தனது பங்கை செம்மையாக செய்து வருவதை விதந்து போற்றினார்.

அடுத்து சிறார் இலக்கிய செயல்பாட்டில் தீவிர முனைப்பு காட்டி வரும் தோழர் இனியன் தமிழ்நாடு சிறார் இலக்கிய கிளைச் செயல்பாடுகளை பல்வேறு பகுதிகளில் நடத்தி வந்த அனுபவங்களைப் பகிர்ந்தார். சின்னமனூர் பள்ளியில் நிகழ்ந்த சம்பவம் ஒன்றைப் பகிர்ந்த தோழர் பிள்ளைகளின் வாசிப்புத் தளத்தை விரிவுபடுத்த உதயசங்கர் தோழரின் சிறார் படைப்புகளை பரப்பி வைக்க எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர் ஆதனின் பொம்மை நூலை வாசித்து 55 நிமிடங்கள் அந்நூலைப் பற்றி மேடையில் பேசியதை சிலாகித்துக் கூறினார் தோழர்.

இலக்கிய கூட்டமொன்றில் கலந்துக் கொண்டதால் நிகழ்விற்கு தாமதமாக வர நேர்ந்த தோழர் மு.முருகேஷ் , இறுதியாக தோழரின் ஆதனின் பொம்மை கதாபாத்திரங்களின் பெயர்கள் ஒவ்வொன்றும் ஆதிகால ஆரிய வரலாற்றிற்கு மிகப் பொருத்தமாக சூட்டியுள்ளதையும்,ஏதோ போகிறபோக்கில் எழுதப்பட்ட புனைவு வரலாற்றுக் காவியமல்ல.அதற்குப் பின்பாக தோழரின் தீவிர உழைப்பு மறைந்துள்ளது அதற்கான வெகுமதியாகவே இந்த விருதும் அங்கீகாரமும் என்கிற பாணியில் நெகிழ்ச்சியாகத் தனது உரையை துவக்கினார். தோழரின் ஒவ்வொரு படைப்பிற்குப் பின்பாகவும் வெறும் கதையாகவோ புனைவாகவோ மட்டும் உருவாகவில்லை அவரின் ஈடுபாடும் பிள்ளைகளுக்கு அகழ்வாய்வைப் பற்றிய அடிப்படை புரிதல் மற்றும் இதர அவர்களின் வயதைத் தாண்டிய சிந்தனைகளை விஸ்தாரப்படுத்தும் விதமாக அனைத்து படைப்புகளும் இருப்பதையும் சுட்டிக்காட்டி தோழரின் இன்னபிற படைப்புகளையும் குறிப்பிட்டு பேசி நிகழ்வில் இறுதி சிறப்புரையை நிறைவு செய்தார்.

நிகழ்வின் நிறைவுப் பகுதியாக  உதயசங்கர்  தமது ஏற்புரையில் நவீன சிறார் இலக்கியத்தின் தொடக்கப்புள்ளியாக ஆயிஷா நூலையே குறிப்பிட வேண்டும் என்றும் அந்த நூல் வெளிவந்த தாக்கமே சிறார் இலக்கியங்கள் மிளிரத் துவங்கின என்பதையும் சுட்டிக்காட்டினார்.

மாயக்கண்ணாடி நூல் பற்றி பேசிய அவர், அதன் அட்டைப்பட வடிவமைப்பு வானம் பதிப்பகத்தின் உரிமையாளர் மணிகண்டன் அவர்களின் ஆக்கப்பூர்வமான அமைப்பு பிள்ளைகளை வெகுவாகக் கவர்ந்ததை புத்தக அட்டைப்படத்தில் கவர்ந்த பிள்ளையொன்றுடன் நிகழ்த்திய சம்பவமொன்றை கூறி பாராட்டினார்.

அந்த நூலிற்கான ஆனந்த விகடன் விருது 2017 இல் கிடைத்ததையும் அடிக்கோலிட்டார். தனது 40 ஆண்டுகளுக்கும் மேலான இலக்கிய பணியில் 150க்கும் மேற்பட்ட படைப்புகள் வெளிவந்தும் இன்றே தனக்கான அங்கீகாரம் வழங்கப்பட்டத்தையும், அதற்கான காரணமாக இடதுசாரி அமைப்பில் இருப்பதால் ஒவ்வொரு முறையும் தனது படைப்புகள் நிராகரிக்கப்பட்டு வந்ததையும் சிறார் இலக்கியம் அல்லாது இன்னபிற தளங்களைத் தொட்டிருந்தும் தனது படைப்புகள் பெரும்பாலும் அங்கீகரிக்கப்படவில்லை வெகுகாலத்திற்குப் பின்பு சிறார் இலக்கியத்திற்காக மட்டுமே சாகித்ய அகாடமியின் விருது கிடைத்துள்ளதை வருத்தத்துடனும் ஆதங்கத்துடனும் பகிர்ந்துக் கொண்டார்.

நூல்கள் முன்பு போல் வாசக விற்பனை பெரிதாக இருப்பதில்லை என்பதையும் கொஞ்சம் வருத்தமாகவே பகிர்ந்தார். குழந்தை இலக்கிய கவிஞர் முகுந்த் நாகராஜனின் மழலைக்கவிதையொன்றை சுட்டிக்காட்டிப் பேசினார். சிறார் இலக்கியத்தில் தனக்கு ஏற்பட்ட ஈர்ப்புக்கு அவரின் கவிதைகளும் ஒரு காரணம் என்றும், அதுவரை இதர இலக்கியத் தளங்களில் எழுதி வந்த தோழர் குழந்தைகள் பிறந்த பின்பே சிறார் இலக்கியத்தில் கவனம் செலுத்தத் துவங்கி குழந்தைகளுக்கான படைப்புகளை எழுதக் தொடங்கியதாகக் கூறுகிறார்.

2013 இல் வெளிவந்த மாயா பஜார் கதைகளைத் தொடர்ந்து இதுவரை 51 நூல்கள் வெளிவந்துள்ளதை பகிர்ந்தார்.. மேலும் கொரோனா காலங்களே சிறார் இலக்கியக்கதைகள் பரவலான கதைக்காலமாகப் பெருமிதித்துக் கூறுகிறார். அதுவரை கடிவாளக் குதிரையாய் பள்ளிக் கல்வியில் மட்டுமே கவனம் செலுத்திய பிள்ளைகளிடம் கதைகள் போய்ச் சேர்ந்தது இந்த பேரிடர் காலங்களே. கதைசொல்லிகளும் குழந்தை எழுத்தாளர்களும் உருவான பொற் காலமாக கொரோனா காலங்களைப் போற்றலாம் என்கிறார் தோழர்.

1943 காலகட்டத்தில் வெளிவந்த குட்டி இளவரசன் கதை குழந்தைகளுக்கான அரசியலை கடத்திச் சென்ற படைப்பாக சிறார் இலக்கியத்தின் பத்தாம் பசிலித்தனமான கட்டமைப்பை உடைத்து பிள்ளைகளிடம் பாரபட்சமின்றி பெரியவர்களுக்கான அனைத்து தளங்களையும் அவர்களிடம் கொண்டு சேர்க்கும் படைப்புகள் பிறந்ததற்கான வித்தாக இந்தக் கதை தமிழிலக்கியத்திற்குள் அறிமுகமானதை கூறினார்.தனது ஒவ்வொரு படைப்பையும்  எழுத்தாளர் கமலாலயனிடம்  வாசிக்க அனுப்பி கருத்து கேட்டதையும் கொஞ்சமும் சலிக்காமல் அவர் அத்தனையும் வாசித்து கருத்துக் கூறுவதையும் பெருமையோடு பகிர்ந்தார்.

மேலும் தனக்கு எடிட் செய்து தந்த தோழர்கள் பற்றியும் தனது தீவிர ரசிகையாக  சரிதா ஜோ ஒவ்வொரு இடத்திலும் தனது நூல்களைப் பற்றி பரவலாக்க பேசிவருவதையும் பரவசமாகப் பகிர்ந்து நிகழ்வை சுவாரஸ்யமான விஷயங்களுடன் தனது மேலான உரையில் தனது நூல்களின் அனுபவங்களைப் பகிர்ந்தார்.

நிகழ்வை தனது ஆகர்ஷனமான நடையில் சிறப்பாக ஒருங்கிணைத்த நர்மதாவின் இடையிடையான தகவல்களும் பகிர்வுகளும் நிகழ்வை மேலும் இனிதாக்கியது.

=   நன்றி பரமேஸ்வரி

Latest

நூல் அறிமுகம்: டா வின்சி கோட்- இரா.இயேசுதாஸ்

"டா வின்சி கோட் " ஆசிரியர்: டான் பிரவுன் (இங்கிலாந்து) வெளியீடு :சான்போர்ட் ஜெ...

நூல் அறிமுகம்: காரான் – இரா.செந்தில் குமார்

தோழர் காமுத்துரை அவர்களின் புதிய சிறுகதை தொகுப்பான காரான் வாசித்தேன். காரான்...

நூல் அறிமுகம்: கோரக்பூர் மருத்துவமனை துயரச் சம்பவம் – சு.பொ.அகத்தியலிங்கம்

இது நெடிய பதிவுதான் .ஆனால் கட்டாயம் நீங்கள் வாசித்தாக வேண்டிய பதிவு...

நூல் அறிமுகம்: கொடிவழி – இரா.செந்தில் குமார்

சமீபத்தில் வெளியான காமுத்துரை தோழரின் புதிய நாவலான கொடிவழி நாவல் வாசித்தேன்....

Newsletter

Don't miss

சிறுகதை: கால்கள் – அய்.தமிழ்மணி

  கதைக்கு கால் இருக்கிறதா..?!  அப்பொழுது நான் ஆறாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். எங்கள்...

பேசும் புத்தகம் |எழுத்தாளர் தாமிராவின் சிறுகதை *செங்கோட்டை பாசஞ்சர்* | வாசித்தவர்: பொன்.சொர்ணம் கந்தசாமி

  சிறுகதையின் பெயர்: செங்கோட்டை பாசஞ்சர் புத்தகம் :  ஆசிரியர் : எழுத்தாளர் தாமிரா வாசித்தவர்:  பொன்.சொர்ணம்...

பேசும் புத்தகம் | எழுத்தாளர் புதுமைப்பித்தனின் சிறுகதை *பயம் * | வாசித்தவர்: முனைவர் ஆரூர் எஸ் சுந்தரராமன். Ss34

  சிறுகதையின் பெயர்: பயம் புத்தகம் : புதுமைப்பித்தன் சிறுகதைகள் ஆசிரியர் : புதுமைப்பித்தன் வாசித்தவர்: முனைவர்...

பேசும் புத்தகம் | அறிஞர் அண்ணா *செவ்வாழை* | வாசித்தவர்: கி.ப்ரியா மகேசுவரி (ss 48)

சிறுகதையின் பெயர்: செவ்வாழை புத்தகம் : செவ்வாழை ஆசிரியர் : அறிஞர் அண்ணா வாசித்தவர்: கி.ப்ரியா...
spot_imgspot_img

நூல் அறிமுகம்: டா வின்சி கோட்- இரா.இயேசுதாஸ்

"டா வின்சி கோட் " ஆசிரியர்: டான் பிரவுன் (இங்கிலாந்து) வெளியீடு :சான்போர்ட் ஜெ கிரீன் பர்கர் அசோசியேட்ஸ் ஐஎன்சி ,யுஎஸ்ஏ  தமிழில் :எதிர் வெளியீடு முதல் பதிப்பு 2016 -நான்காம் பதிப்பு 2021 600 பக்கங்கள்- ரூபாய் 699 தமிழாக்கம்...

நூல் அறிமுகம்: காரான் – இரா.செந்தில் குமார்

தோழர் காமுத்துரை அவர்களின் புதிய சிறுகதை தொகுப்பான காரான் வாசித்தேன். காரான் கதையில் வரும் குருவம்மா என்கிற எருமை தான் கதாநாயகி என்றாலும் அதில் மிக முக்கியமான செய்தியான கவனக்குறைவு பற்றி சூசகமாக...

நூல் அறிமுகம்: கோரக்பூர் மருத்துவமனை துயரச் சம்பவம் – சு.பொ.அகத்தியலிங்கம்

இது நெடிய பதிவுதான் .ஆனால் கட்டாயம் நீங்கள் வாசித்தாக வேண்டிய பதிவு . சற்று பொறுமையாய் நேரம் மெனக்கெட்டு வாசிக்க ; இதயம் உள்ள ஒவ்வொருவரையும் வேண்டுகிறேன். தூங்கவிடாமல் துரத்தும் குழந்தைகளின் மரண ஓலம்...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here