தாழ்வாரம்
___________
(1)
தாழ்வாரத்தின் குளிர்ந்த தரையில்
உலர்ந்து போய் இரத்தம் போல
கவிதைகள் கறுத்துறைந்து கிடக்கின்றன
சளியும் ரத்தமும் கறைபடிந்த பிம்பங்களை
எறும்புகள் கூட்டம் கூட்டமாய் வந்து
எடுத்துப் போகின்றன __
சொப்பனங்கள் கிட்டாத குளிர் காலங்களுக்கு
சாப்பிட வேண்டுமென எண்ணி வைக்கின்றன.
(2)
அவ்வப்போது
தளர்ந்த நடையின் சத்தம்
மாடிப்படிகள்
ஏறி
வருகிறது
அப்போது தாழ்வாரத்தில்
இருட்டும் துக்கமும் நிறைந்து இருக்கின்றன.
(3)
உள்ளே எங்கோ
சுயநலவாதியின் இதயம் முறிந்து கசிகிறது
கலக்கமடைந்த ஸைகல்
மதுவில் குதிரைப் பாடலின் சிறகுகளில்
காய்ச்சலாய்
ஒரு கனவு போல
தாழ்வாரத்தினூடே பறந்து செல்கிறான்
குளிப்பறையில்
ஷவரிலிருந்து
வயலின்
சத்தம்
நீல நதியாய் நிரம்பி வழிகிறது
அதனூடே
குளிர்காலத்தில் அனாதரவாய் உடல்
பாய்ந்து போகிறது.
(4)
குடிபோதையில்
ஒரு நிழல்
தாழ்வாரத்தினூடாக
பதுங்கி
பதுங்கி
நடந்து
வந்து ஒவ்வொரு கதவையும் தட்டிக் கூப்பிடுகிறது
சொந்தக் கதவிலிருந்து , அவனை வெளியேற்றி
மரணத்தின் ஒரு கண்ணிமை போல
நிரந்தரமாக மூடுகிறது
(5)
ஒரு மென்மையான இதயம் கொண்ட குடியிருப்பாளர்,
தாழ்வாரத்தின் இருளில்
தொலைந்து போன பிறை நிலவை
வன்புணர்ந்தார்.
இன்றைய அவரது டைரி குறிப்பில்
ஒரு வெள்ளைப் புள்ளி விழும் வரை.
(6)
எதிர்பாராத வேளையில் மின்சாரம் தடைப்படும் போது
குடும்ப உறவுகளும்
இதயங்களும்
நின்று போகின்றன.
ஆதரவற்ற வாழ்வின்
கடைசி வரிகள் கூடி நஷ்டமாகின.
ஓ!
நஷ்டமாகின.
📚 எழுதியவர் :
✍🏻 மலையாளத்தில் : பாலச்சந்திரன் சுள்ளிக்காடு
தமிழில் : வசந்ததீபன்
******************************************************************************

நூல் அறிமுகம் செய்வோம் ரூ.10000 பரிசு வெல்வோம்! போட்டி
2025 வெளியான புத்தகத்தை வாசிக்க அவகாசம் கேட்ட வாசகர்களின் வேண்டுகொளுக்கு இணங்க இப்போட்டியானது மார்ச் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. வரும் உலகப் புத்தக தினத்தன்று (ஏப்ரல் 23, 2026) சென்னையில் நடைபெறும் விழாவில் பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும். தாங்கள் எழுதும் நூல் அறிமுக கட்டுரையை bookday24@gmail.com மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். இதில் பங்கேற்க விரும்பும் தோழர்கள் அனைவரும் தங்கள் விருப்பத்தை https://forms.gle/XJodwyZc42PRv93Y8 இந்த கூகுள் பார்ம்-ல் நிரப்பி தெரிவித்தால் நன்றாக இருக்கும்.
கூகுள் பார்ம்: https://forms.gle/XJodwyZc42PRv93Y8
தோழமையுடன்
புக் டே இணையதளம்
பாரதி புத்தகாலயம்
9444567935
******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join Facebook: https://www.facebook.com/Book Day – Bharathi Puthakalayam
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.
