இந்தியா இப்போது இளைஞர்களின் தேசம். இது குறித்து பெருமை கொள்கிறோம். இது நமக்கு மிகப் பெரிய வாய்ப்பை வழங்கியுள்ளது. இளைஞர்களுக்குத் தேவை வேலை மட்டுமல்ல; வாழ்க்கை சமநிலையும்(life balance)தேவை.இன்று, கூட்டுக் குடும்பங்கள் காணாமல் போய் விட்டன.ஒரே குழந்தை நடைமுறை வந்து விட்டது.கணவன், மனைவி இருவருமே வேலைக்குப் போயாக வேண்டியுள்ளது.அவர்களுக்கு ஓய்வு தேவை. உடல் நலம் குறித்த அறிவியல் பூர்வமான ஆய்வுகள் வாரம் இரண்டு நாட்கள் ஓய்வு அளிப்பது ஊழியர்களின் ஆரோக்கியத்தையும், உற்பத்தி திறனையும் அதிகரிக்குமெனத் தெரிவிக்கின்றன.
எனவே, உற்பத்தி திறனை அதிகரிக்க வாரத்திற்கு ஐந்து நாள் வேலை தேவையாக உள்ளது.
வரலாற்றைத் திரும்பிப் பார்ப்போம்
இங்கிலாந்தில், தொழிலாளர்கள் சூரிய உதயம் முதல் சூரியன் மறைவது வரை வேலை செய்ய நிர்ப்பந்திக்கப் பட்டனர்.முதலாளியும், தொழிற் சங்கத் தலைவருமான ராபர்ட் ஓவன் என்பவர் 1817 இல் எட்டு மணி நேர வேலை எனும் கோரிக்கையை முதன் முதலாக முன்வைத்தார்.
எட்டு மணி நேர வேலை, எட்டு மணி நேரம் பொழுதுபோக்கு, எட்டு மணி நேரம் ஓய்வு என்பது அவரது முழக்கமாக இருந்தது.
Labour Day In New Zealand History - Blenheim - Eventfinda
இந்தியாவில் எட்டு மணி நேர வேலை வங்காள ரயில்வே தொழிலாளர்களால் வந்தது.1866 இல் ஜெனிவாவில் நடந்த சர்வதேச தொழிலாளர் அமைப்பின் மாநாட்டில் எட்டு மணி நேர வேலை கோரிக்கையை கையிலெடுக்கப் பட்டது.முதன் முதலாக (1906, ஜீன் 23) எட்டு மணி நேர வேலையை அமல் படுத்திய நிறுவனம் ஜெர்மனி ஸ்டர்ட்கார்ட் Bosh எனும் நிறுவனமாகும்.
இந்தியாவில்,டாட்டா ஸ்டீல் நிறுவனம்தான் முதலாவதாக (1912) எட்டு மணி நேர வேலை மற்றும் ஷிஃப்ட்  முறையைக் கொண்டு வந்தது.அமெரிக்காவில் ஹென்றி ஃபோர்ட் 1912 இல் நாளைக்கு மூன்று ஷிஃப்ட் முறையை அறிமுகப்படுத்தினார்.
இப்போது சர்வதேச தொழிலாளர் அமைப்பின் ,1935  ஆம் ஆண்டில் நடைபெற்ற வாரம் 40 மணி நேர மாநாட்டிற்கு பின்னர் வாரம் ஐந்து நாள் பணி என்பது உலகம் முழுவதும் உள்ள நடைமுறையாக உள்ளது. இந்தியாவும் இதை ஏற்றுக் கொண்டுள்ளது. வாரம் ஐந்து நாள் வேலையை ஃபோர்டு நிறுவனம்தான் முதலாவதாக (1926) அறிமுகப் படுத்தியது.
இது உற்பத்தி திறனையும், தனது நிறுவனத்தின் கார்களுக்கான தேவையையும் அதிகரிக்கும் என்பதை ஃபோர்டு உணர்ந்தார். எனவே, ஐந்து நாள் வேலை வாரம் என்பதை முதன் முதலாக விரும்பியது ஒரு முதலாளிதான்.சீனா, அமெரிக்கா, ஹாங்காங் கில் வாரம் ஐந்து நாள் வேலை சட்டப்பூர்வமாக உள்ளது.மற்ற நாடுகளில் அதுவே நடைமுறையாகி விட்டது.அமெரிக்க Amalgamated Clothing நிறுவனத் தொழிலாளர்கள் வாரம் ஐந்து நாள் கோரிக்கையை வென்றெடுத்தனர்.
உலக பெரு மந்தத்தின் போது அமெரிக்க அதிபர் ஹெர்பர்ட் ஹீலர் தொழிலாளர்களுக்கு லே ஆஃப் அழிப்பதற்கு பதிலாக வேலை நேரத்தை குறைக்கச் சொன்னார். அமெரிக்க அதிபர் ஃப்ராங்க்லின் ரூஸ்வெல்ட் Fair Labor Standards, 1938 சட்டத்தின் படி பல்வேறு தொழிலாளர்களுக்கும் வாரம் 40 மணி நேர வேலை என்பதை நிறுவினார்.
வாரம் நான்கு நாள் வேலை
அதீதமான கரிம வாயு வெளியேற்றம், மோசமான வாழ்க்கை நிலைமை, சமத்துவமின்மை, குடும்ப பராமரிப்பு, குறைவான ஓய்வு நேரம்  ஆகிய பிரச்சினைகளுக்கான தீர்வாக வாரம்  நான்கு நாள் பணி/ வாரத்திற்கு 21 மணி நேர வேலை என்பதை  The New Economic Foundation என்ற அமைப்பு பரிந்துரைத்துள்ளது.
இது எவ்வளவு அருமையான யோசனை!
The Centre For Economics And Policy  Research States வாரத்தில் பணி நாட்களை குறைத்தால் மோசமாகும் பருவ நிலை மாற்றத்தை மட்டுப்படுத்தி சூழலியல் ரீதியாக பலனளிக்கும் என்கிறது.நமது பிரதமரும் இத்தகைய சூழலியல் நலன்களுக்கு தனது ஆதரவை பிரகடனப் படுத்தியுள்ளார்.எனவே, இந்த ஆலோசனையை அவர் கவனத்தில்  கொள்ள வேண்டும்.
மேற்கண்ட ஆய்வுகளின் அடிப்படையில், பல்வேறு நாடுகளும், நிறுவனங்களும் வாரம் நான்கு நாள் வேலை யைத் துவக்கி உள்ளன. பின்லாந்து பிரதமர் சன்னா மெரின் வாரம் நான்கு நாள் வேலை/ நாளில் ஆறு மணி நேர வேலை என்பதை அமல்படுத்தியுள்ளார்.
Andrew Barnes and 4 Day Week Global - YouTube
அமெரிக்காவில் 2017 இல் Work Logic HR ஆய்வுகள் அந் நாட்டில் பல்வேறு நிறுவனங்க ளிலும் வாரம் ஐந்து நாள் வேலையில் 34.4 மணி நேர உழைப்பே நடைமுறையில் உள்ளதாக தெரிவிக்கின்றன. நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையில் வாரம் ஐந்து நாள் வேலை என்பது முடிவுக்கு வந்து விட்டதா (02.07.2020) என ஒரு  கட்டுரை அலசுகிறது. ஸ்வீடனில் வாரம் நான்கு நாள் வேலை/ தினமும் ஆறு மணி நேர வேலை பரிசோதனை முறையில் அமல் படுத்தி ஆய்வு செய்தது. இதனால் ஊழியர்களின் உற்பத்தி திறன் அதிகரிப்பது உறுதி செய்யப் பட்டுள்ளது.
nbcnews.com  தலைப்பு செய்தி அமெரிக்க பொருளாதாரத்திற்கு வாரம் நான்கு நாள் வேலை என்பதே உடனடித் தீர்வு என்கிறது. நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா வாரம் நான்கு நாள் வேலை யை செயல்படுத்தி  உள்ளார். Four Day Week Global என்ற புத்தக எழுத்தாளர் ஆண்ட்ரூ பால்ன்ஸ் என்பவர் வாரம் நான்கு நாள் வேலை என்பதை உலகம் முழுவதும் பிரச்சாரம் செய்து வருகிறார். அமேசான் வாரம் நான்கு நாள் வேலை யை சோதனை முறையில் நடத்தி அது வெற்றிகரமாகி உள்ளது.மைக்ரோ சாஃப்ட் ஜப்பானில் இதை செயல்படுத்திய தில் சாதகமான முடிவுகள் வந்துள்ளன.
உடல் நலம் மற்றும் உற்பத்தி திறன்
அமெரிக்காவில் வெளிவரும் தொற்று நோயியல் இதழ் வாரம் ஐந்து நாள்/ 40 மணி நேரம் வேலை செய்பவர்கள் குறைவான சொல்வளம் (vocabulary) , பகுத்தறிவு திறன் குறைபாடு கொண்டவர்களாக இருப்பதாக தெரிவிக்கிறது.
Business Round Table ஆய்வானது வேலை நேரம் அதிகரிப்பதால் உற்பத்தி திறன் வீழ்ச்சி அடைவதாக கூறுகிறது. பிரான்சில் சோதனை முறையில் வாரம் 35 மணி நேர வேலையை அமல்படுத்தி பார்த்ததில் மக்கள் ஆரோக்கியமிக்கவர் களாகவும், மகிழ்ச்சி யுடன் இருப்பதையும் கண்டறியப்பட்டுள்ளது.
அமெரிக்க தொழிலாளர் துறை தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வாரம் ஐந்து நாள் வேலையின் சாதக அம்சங்களை கீழ்க்கண்டவாறு பட்டியலிட்டுள்ளது.
1.பணித் திறன் அதிகரிப்பு
2.பணிக்கு வராமை குறைதல்
3.அதிகரிக்கும்  தொழில் திறன் போட்டி உணர்வு
4.திறன்கள் தக்கவைப்பு
5. நிறுவனத்தின் இமேஜ் உயர்வு
தொழிலார்கள் அடையும் பயன்கள்
1.போதிய ஓய்வு- அர்ப்பணிப்புடன் பணிபுரிவதற்கான மீட்சி
2.குடும்பத்திற்கு அதிகமான நேரம் ஒதுக்குதல்
3.அலுவலகப் பயணம் குறைதல்
4.உயர் கல்வி கற்பதற்கு நேரம் கிடைத்தல்
வேலை மற்றும் வாழ்க்கைக்கு இடையில் சமநிலை பராமரிக்க படுவதை இன்றைய சமூகம் கவனத்தில் கொள்கிறது.தனது வேலையுடன் குடும்ப பொறுப்புகளை நிறைவேற்றிக் கொள்வதற்கான வாய்ப்பு அதிகரிக்கிறது. பணித் தளம்- குடும்ப வாழ்க்கை சமநிலை பராமரிப்பு என்பது இன்று உலகம் முழுவதும் பேசு பொருளாக உள்ளது.
நமது நாடு
Banks geared up for last day for receiving banned notes | Deccan ...
இந்தியாவில், மத்திய அரசு அலுவலகங்கள்,  ரிசர்வ் வங்கி,அன்னிய செலவாணித் துறை, நாடாளுமன்றம், மாநில சட்டமன்றங்கள்,கருவூலகங்கள் ஆகியவற்றில் வாரம் ஐந்து நாள் வேலை முறை கடைப்பிடிக்க படுகின்றன.விப்ரோவும் இன்ஃபோசிசும் முன்னோடியாக தகவல் தொழில்நுட்ப துறையில் வாரம் ஐந்து நாள் பணியினை அமல் படுத்திய பின்னர் அனைத்து தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களும் அதையே முறையைப் பின்பற்றின. பெரும்பான்மையான மாநில அரசின் அலுவலகங்கள் சனிக்கிழமைகளில் செயல்படுவதில்லை. இந்தியாவில் செயல்படும் வெளிநாட்டு வங்கிகளில் வாரம் ஐந்து நாள் பணிதான் உள்ளது.சமீபத்தில், மகாராட்டிர மாநில அரசு  அலுவலகங்களுக்கு சனிக்கிழமை விடுமுறை அறிவிக்கப் பட்டுள்ளது.எனவே,  வங்கித்துறையிலும் வாரம் ஐந்து நாள் வேலையைக் கொண்டு வருவதால் இயல்பான பணிகள் எந்த விதத்திலும் பாதிக்கப் படாது.இதனால் செலவினம் கணிசமாகக் குறையும். ஊழியர்கள் மகிழ்ச்சி அடைவார்கள்.
எனவே, ரிசர்வ் வங்கியில் வாரம் ஐந்து நாள் பணி/ 8 மணி நேர வேலைமுறையை அனைத்து வங்கிக ளிலும் செயல்படுத்த முழுமையான நியாயமான காரணங்கள் உண்டு. இதைத் தொடர்ந்து ஆயுள் காப்பீட்டு நிறுவனத்திலும் இதே வேலை முறையைக் கொண்டு வர வேண்டும்.
தொழில்நுட்ப மேம்பாடு
Core Banking Solution, Tele Banking, Internet Banking, Kiosk Banking, Mobile Banking, Cash Deposit Banking, Anytime Anywhere Banking போன்ற வங்கி நிறுவனங்களில் ஏற்பட்டுள்ள புரட்சிகர தொழில்நுட்ப முன்னெடுப்புகள்- மற்றும் வங்கிகளின் விரிவடைந்து வரும் ஏடிஎம் வசதிகளாலும் (2,21,703 ஏடிஎம்கள்/ மார்ச் 2019)  , 40.25 லட்சம் மைக்ரோ ஏடிஎம் கள், 5.3 கோடி கிரடிட் அட்டவணைகள், 84.6 கோடி  டெபிட் அட்டைகள், 62.70 கோடி இணைய பயன்பாட்டாளர்கள், 600 கோடி கைபேசி பயன்பாட்டாளர்கள்,  போன்ற வங்கிப் பணிகள் விரிவாக்கத் தின் விளைவாகவும் சனிக்கிழமைகளிலும் வங்கிகள் செயல்பட வேண்டிய அவசியம் இல்லை.
வங்கிகளில் ஐந்து நாள் பணிமுறை- பலன்கள்
1.வாரம் ஐந்து நாள் பணியால் எரிபொருள் செலவினம் குறையும்.
2.ஒரு நாள் கூடுதல் விடுமுறையால் ஊழியர்கள் தங்களின் சொந்த வேலைகள், சமூக விழாக்கள், விளையாட்டுகள் ஆகிய காரணங்களுக்காக விடுப்பு எடுக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படாது. வாரம் ஒரே நாள் விடுமுறையால், ஊழியர்கள் ஓய்வெடுக்க வழியில்லாமல் திங்கள் கிழமை சோர்வுடன் பணிக்கு வருகின்றனர். வாரம் இரண்டு நாட்கள் விடுமுறையில் வங்கிக்கு வெளியே செய்ய வேண்டிய காரியங்களைச் செய்ய அவகாசம் உள்ளதால் விடுப்பு கோரிக்கை எழாது.
3.காலக்கெடுவின்றி ஊழியர்கள் வேலை செய்யும் போது ஊழியர்களின் உற்பத்தி திறன் குறையும் என்பது நிரூபனமான உண்மையாகும்.
4.பணித் தளத்தில் ஊழியர் அடையும் திருப்தி பணித் தளத்திற்கு வெளியேயும் தொடரும்.
5.குடும்ப உறுப்பினர்கள், நண்பர்களிடம் கூடுதல் நேரம் செலவழிப்பதால் ஊழியர்கள் புத்துணர்வுடன் பணிக்கு வருவர். முழுமையான ஈடுபாட்டுடன் பணி செய்வார்கள்.
6. வங்கிகளிலும் மின் நுகர்வு போன்ற செலவினங்கள் குறையும்.
7.சனிக்கிழமை  விடுமுறை என்பதால் போக்குவரத்து நெரிசல் குறையும்.
8.வேலை – வாழ்க்கை சமநிலை (work- life balance) நன்கு பராமரிக்கப் படும்.
9. கேரளா, க.நா., மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களில் நிதித் துறைகளுக்கு வாரம் ஐந்து நாள் பணியின் விளைவாக கோவிட் 19 வைரஸ் பரவல் சங்கிலித் தொடரில் ஒரு முறிவை (break the chain) ஏற்படுத்த உதவியுள்ளது.
10.2015 மே 25 இல் நடைபெற்ற இருதரப்பு பேச்சு வார்த்தையின் போது பாரத மாநில வங்கித் தலைவர் திருமதி.அருந்ததி பட்டச்சார்யா மாதம் இரண்டு சனிக் கிழமைகளில் விடுமுறை என்பதற்கான ஒப்பந்தம் ஏற்பட்டபோது,  ஆறு மாதங்களுக்கு பின்னர் வாரம் ஐந்து நாள் வேலை பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ள படுமென்று வாக்குறுதி அளித்தார்.
11.நோய்த் தொற்றில் இருந்து பாதுகாத்து கொள்ள நோய் எதிர்ப்பு சக்தி தேவை என்பதை கோவிட் 19 உணர்த்தி உள்ளது.இதற்கு வாரம் ஐந்து நாள் வேலை உதவிகரமாக இருக்கும்.
12.வாரம் ஐந்து நாள் வேலை அமலாக் கத்தால் 11 லட்சம் வங்கிப் பணியாளர்கள்,
6 லட்சம் ஆயுள் காப்பீட்டு நிறுவன ஊழியர்கள் பயன் பெறுவர்.
13.புதிதாக அதிக வேலை வாய்ப்புகள் உருவாகும்.
14.சனிக் கிழமைகளில் ஊழியர்கள் வெளியில் இருப்பதால் கூடுதலாக செலவழிப்பார்கள்.
இது பொருளாதாரத் திற்கு உந்துதலாக இருக்கும்.
15.நாடடங்கு காலத்திலும் வங்கிகள் செயல்படுகின்றன. ஊழியர்கள் மிகுந்த சிரமத்திற்கு இடையே பணி புரிகின்றனர். நூற்றுக்கணக்கான ஊழியர்கள் அகால மரணமடைந்துள்ளனர்.
ஆயிரக்கணக்கான ஊழியர்கள் வைரஸ் தொற்றால் பாதிக்கப் பட்டுள்ளனர்.அவர்களுக்கு குறைவான தொகையே காப்பீடு திட்டத்தில் கிடைக்கிறது. 40 கோடி ஜன் தன் கணக்குகளை அவர்கள்தான் ஆரம்பித்துள்ளனர். மத்திய அரசின் ஆத்ம நிர்பார் திட்டத்தில் கணிசமான எண்ணிக்கையில் கடனளித்துள்ளனர். பிஎம் கேர்ஸ் நிவாரண நிதிக்கு தங்கள் ஊதியத்தை வழங்கி உள்ளனர். அர்ப்பணிப்பு உணர்வுடன் நாட்டுக்கு சேவை செய்த அவர்கள் பரிசு பெறத் தகுதியானவர்கள்.அவர்களுக்கு வாரம் ஐந்து நாள் வேலை முறை வழங்கப்பட வேண்டும்.
ஏன் இதுவரை நிறைவேற்றப்பட வில்லை?
Banks prepare blueprint to cater to increased demand
வங்கிப் பணியாளர்களுக்கு அதிகமான விடுமுறை நாட்கள் இருப்பதால், வாரம் ஐந்து நாள் வேலை முறையைக் கொண்டு வர அரசு தயாராக இல்லையென்று அவர்கள் சொல்கின்றனர்.
ரிசர்வ் வங்கி ஊழியர்களுக்கு மட்டும் வாரம் ஐந்து நாள் வேலை அமலில் இருக்கும்போது, வங்கி ஊழியர்களுக்கு பாரபட்சம் காட்ட முடியுமா?
பிரதமர் இதற்கு தயாராக இல்லை என்று அவர்கள் கூறுகின்ற னர். இது குறித்து பிரதமரிடம் இதுவரையில் யாராவது விளக்கி இருக்கிறார் களா? இந்த விசயம் அவர் காதுகளுக்கு போய்ச் சேர்ந்திருக் கிறதா? இதற்கெல்லாம் பிரதமரின் அனுமதி தேவைதானா?
பணியில் திருப்தி அடைந்த ஊழியர்கள் நாட்டுக்கு திரும்பவும் நிறையவே வழங்குவார்கள்.
ஒரு ஆரோக்கியமான தேசத்திற்கு வாரம் ஐந்து நாள் வேலை தேவைப் படுகிறது.
” நீங்கள் இந்த உலகை மாற்ற விரும்பினால், முதலில் உங்கள் வீட்டுக்குச் செல்லுங்கள்! உங்கள் குடும்பத்தை நேசியுங்கள்”.- அன்னை தெரசா
…..          ……..       ….
தாமஸ் ஃப்ராங்கோ, முன்னாள் தலைவர், அகில இந்திய வங்கி அதிகாரிகளின் சம்மேளளனம்.
தமிழில் கதிரேசன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *