Bee Eater: Name Telling Birds Series Article by V Kirubhanandhini. பெயர் சொல்லும் பறவை 17 – காட்டுப் பஞ்சுருட்டான் (Blue-bearded Bee-eater)காட்டுப் பஞ்சுருட்டான்

மலை பகுதிகளுக்கு சுற்றுலா செல்லும் பொழுது ஒவ்வொரு கடைகளிலும் நாம் “சுத்தமான மலை தேன் கிடைக்குமா”? என்று விசாரிக்கிறோம் அல்லது நம் வீட்டில் கை குழந்தைகள் இருந்தாலோ அல்லது ஏதேனும் நோய்க்கு மருந்தாக சுத்தமான தேன் போன்றவை தேவைப்படும் போது மட்டும் தேனை தேடுகின்றோம்.

மனிதர்களின் தேவையை அரைகுறையாக பூர்த்தி செய்ய பல குடிசை தொழில்கள் உள்ளன. அதில் தேனீ வளர்ப்பும் ஒன்று. தேனீக்கள் பூக்களில் இருந்து இயற்கையாக சேகரிக்கும் தேன் மருத்துவத்திற்கு பயன்படுகிறது, ஆனால் வளர்ப்பு தேனீக்களில் கிடைக்கும் தேன் அதுபோன்று கிடையாது. இன்னும் சில நாடுகளில் தேனீக்களையே மக்கள் உணவாகவும் உண்ணுகின்றனர். தேனீக்கள் தாவரங்களின் அயல்மகரந்தச் சேர்க்கையில் முக்கிய பங்கு வகிக்கின்றன. தேனீக்கள் எதிர்களிடமிருந்து தங்களைக் காப்பற்றிக்கொள்ள கொடுக்கில் விஷம் இருக்கும்படி தகவமைப்பு பெற்றுள்ளன. ஆனால் பூச்சிக்கொல்லி, கால நிலை மாற்றம், பூச்சிக்கொல்லி போன்றவைகளால் தேனீக்கள் தற்போது விரைவாக அழிந்து வருகின்றன.

தேனீக்களை வளர்ப்பவர்கள் சர்க்கரை கரைசலை உணவாக கொடுக்கிறார்கள். இதனால் நமக்கு சத்துள்ள தேன் கிடைப்பது அரிதாகிறது. அதனால் தான் சத்துள்ள தேனை நாம் மலைபகுதிகளுக்கு செல்லும்போது தேடுகின்றோம், மேலும் சர்க்கரை கரைசலை கொடுப்பதன் மூலம் மிகவும் முக்கியமாக இயற்கையின் உணவுச்சங்கிலியில் அதனுடைய செயல்பாடுகளான மகரந்த சேர்க்கை தடைபடுகின்றன. இதனால் தாவரங்களில் நோய் எதிர்ப்பு போன்ற வீரியம் குறைந்தும், ஒரு சில தாவர இனங்களையும் இழந்தும் வருகின்றோம்,

இத்தகைய தேனீக்களை உணவாக உண்பதால் இப்பறவைகளுக்கு ஆங்கிலத்தில் Bee Eater என்று பெயரிட்டுள்ளனர்.

Bee Eater: Name Telling Birds Series Article by V Kirubhanandhini. பெயர் சொல்லும் பறவை 17 – காட்டுப் பஞ்சுருட்டான் (Blue-bearded Bee-eater)
Blue-bearded Bee-eater – படம் – https://ebird.org/

இதில் நாம் இன்றைக்கு பார்க்க இருப்பது Blue-bearded Bee-eater. தொண்டையின் இறகுகள் நீண்டுபோகும்போது அவை தாடியுடன் தோற்றமளிப்பதே இப்பெயருக்கு காரணம்.

ஆண் பறவைகளும் பெண் பறவைகளும் ஒரே மாதிரி தோன்றினாலும், ஆண் பறவைகளின் நீல தொண்டை இறகுகளில், பெண் பறவைகளை விட அதிகமான புற ஊதா பிரதிபலிப்பு காட்டப்படுகிறது.

இதன் அறிவியல் பெயர் Nyctyornis athertoni (Jardine & Selby, 1830)

Nyctyornis – Gr. nukti- nocturnal, night-; ornis bird.

Athertoni – Lt. Jeptha Atherton (1797–1827) British Army and naturalist in India (Nyctyornis).

லியூட்டின் ஜான் அதெர்டன் என்பவரின் பெயரை வைத்துள்ளனர். பறவையின் மாதிரியைப் பெற்றவர் திருமதி பி ஜே செல்பியின் மருமகன். சர் வில்லியம் ஜார்டினுடன் இணைந்து 1828-ல் வெளியிடப்பட்ட “பறவையியலின் விளக்கப்படங்கள்” இல் செல்பி இனங்களை விவரித்தார் (Illustrations of Ornithology, Series 1, Volume 2 part 4, November 1828, plate 58).

Bee Eater: Name Telling Birds Series Article by V Kirubhanandhini. பெயர் சொல்லும் பறவை 17 – காட்டுப் பஞ்சுருட்டான் (Blue-bearded Bee-eater) காட்டுப் பஞ்சுருட்டானை பெங்களூர் ஆட்சியாளரின் உதவியுடன் கண்டறிந்தார் எனவும், அடர்ந்த காடுகளில் காணப்படுகிறது, இரவில் உணவு உண்கிறது எனவும், மேலும் இதனுடைய சப்தம் அல்லது அழைப்பு “கர்ர், கர்” அழைப்புகளுடன் சத்தமாக இருந்தது எனவும். இப்பறவை பற்றிய குறிப்புகளில் கடிதமாக எழுதி ஷெல்பி அவர்களுக்கு அனுப்பியுள்ளார் அடெர்டன். லியூட்டின் ஜான் அதெர்டன் அவர்களின் புகைப்படம் கிடைக்கவில்லை என்பது வருத்தமே.

இந்தியாவில் மேற்குத் தொடர்ச்சி மலைகளிலும், பங்களாதேஷ், பூட்டான், கம்போடியா, சீனா, லாவ்ஸ், மியான்மார், நேபால், தாய்லாந்து மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளில் இதனை காணலாம்.

மாலை நேரத்தில் மின் கம்பிகளில் வரிசையாக அமர்ந்து பூச்சிகளின் வருகைக்காக காத்திருக்கும். மறைந்து கொண்டிருக்கும் சூரிய ஒளியில் அவை ரம்மியமாக காட்சியளிப்பதை கண்டு ரசிக்கலாம். ஆனால் தற்போது தேனீக்கள் அழிந்து வருகின்றன, அவற்றிக்கான உணவுகளும் குறைந்து வருகின்றன. பிரச்சனைகள் வரும் பொழுதும், தேவைப்படும் போதும் மட்டும் தேடாமல் எப்பொழுதும் தேவையை உணர்ந்து இயற்கையுடன் ஒன்றி வாழ்ந்தால் இதுபோன்ற பிரச்னைகளையே தடுக்கலாம்.

விவசாய நிலங்களில் பல்வேறு விதமான இரசாயனங்கள் தெளிப்பதையும், பூக்கும் தாவரங்களை பாதுகாத்தலுமே, செயற்கையாக தேனீ வளர்ப்பதும் கட்டுப்படுத்தும். இயற்கையாகவே தரமான தேனும் கிடைக்கும், தேனீக்களை உண்ணும் பஞ்சுருட்டான் போன்ற பாதுகாப்பாக இருக்கும் பறவைகளும் அழியாமல் தொடர்ந்து இதே போல் தக்கவைத்துக்கொள்ளலாம். இதன் மூலம் நமது அடுத்த தலைமுறைகளும் தரமான உணவுகளை பெற்று இயற்கை ரசித்து ஆரோக்கியமாக வாழலாம்.

தரவுகள்
https://www.nwf.org/Educational-Resources/Wildlife-Guide/Invertebrates/Bees
http://datazone.birdlife.org/species/factsheet/blue-bearded-bee-eater-nyctyornis-athertoni
https://en.wikipedia.org/wiki/Jeptha_Atherton

முந்தைய தொடரை வாசிக்க: 

பெயர் சொல்லும் பறவைகள் – முனைவர். வெ. கிருபாநந்தினி

பெயர் சொல்லும் பறவைகள் 2: ரிச்சார்டு நெட்டைக்காலி – முனைவர். வெ. கிருபாநந்தினி

பெயர் சொல்லும் பறவைகள் 3: பச்சைக்கிளி – முனைவர். வெ. கிருபாநந்தினி

பெயர் சொல்லும் பறவைகள் 4 (Green Cheeked Parakeet) – முனைவர். வெ. கிருபாநந்தினி

பெயர் சொல்லும் பறவைகள் 5 – லோட்டன் தேன்சிட்டு (Loten’s Sunbird) | முனைவர். வெ. கிருபாநந்தினி

பெயர் சொல்லும் பறவைகள் 6 – செட்டிகதிர்க்குருவி | முனைவர். வெ. கிருபாநந்தினி

பெயர் சொல்லும் பறவைகள் 7 – Yellow-eyed Pigeon | முனைவர். வெ. கிருபாநந்தினி

பெயர் சொல்லும் பறவைகள் 8 – Jerdon’s Nghtjar (பக்கி) | முனைவர். வெ. கிருபாநந்தினி

பெயர் சொல்லும் பறவைகள் 9 – நீலகிரி காட்டுப்புறா | முனைவர். வெ. கிருபாநந்தினி

பெயர் சொல்லும் பறவைகள் 10 – காட்டுக்கோழி | முனைவர். வெ. கிருபாநந்தினி

பெயர் சொல்லும் பறவைகள் 11 – பல்லாஸ் மீன் கழுகு | முனைவர். வெ. கிருபாநந்தினி

பெயர் சொல்லும் பறவைகள் 12 – காட்டுப் புள்ளிச் சிறு ஆந்தை (Forest owlet) | முனைவர். வெ. கிருபாநந்தினி

பெயர் சொல்லும் பறவைகள் 13 – பூனைப் பருந்து (Harrier) | முனைவர். வெ. கிருபாநந்தினி

பெயர் சொல்லும் பறவைகள் 14 – பழனி சிலம்பன் (Montecincla fairbanki) | முனைவர். வெ. கிருபாநந்தினி

பெயர் சொல்லும் பறவைகள் 15 – நாரை (Ardeola grayii) | முனைவர். வெ. கிருபாநந்தினி

பெயர் சொல்லும் பறவை 16 – ஆற்று ஆள்காட்டி (Vanellus duvaucelii) | முனைவர். வெ. கிருபாநந்தினி

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *