பீம்பாய் பீம்பாய் எனக்கொரு டவுட்டு – நூல் வெளியீட்டு விழா
நாமக்கல் தமிழ்ச்சங்கத்தின் நிலா முற்றம் நிகழ்வில் பாலமுருகன் எழுதிய பீம்பாய் பீம்பாய் எனக்கொரு டவுட்டு புத்தக வெளியீடு மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
முதல் நூலை நாமக்கல் தமிழ்ச்சங்கத்தின் தலைவர் மருத்துவர். இரா. குழந்தைவேல் அவர்கள் வெளியிட, நாமக்கல் மாவட்டத்தின் முதன்மைக்கல்வி அலுவலர் திருமதி. ப. மகேஸ்வரி அவர்கள் பெற்றுக்கொண்டார்கள்.
நூல் ஆய்வுரையை நாமக்கல் தமிழ்ச்சங்கத்தின் செயலரும், நண்பருமான முனைவர். கோ. நாராயணமூர்த்தி அவர்கள் மிகவும் சிறப்பாக எடுத்துக்கூறினார்.
இந்த நிகழ்வில் மாணவர்கள் சிறப்பான முறையில் மரபுக்கலையான தேவராட்டம் நிகழ்வை நடத்தினர்.
நூலைப் பற்றி :
மாணவர்கள் மத்தியில் எந்த ஒன்றையும் அப்படியே ஏற்காமல் அறிவியல் ரீதியாக அறிய முயற்சி செய்வது இன்றைய அரசியல் சூழலில் அவசியமான ஒன்று. அந்த அடிப்படையில், ’பீம்பாய்! பீம்பாய்! எனக்கொரு டவுட்டு’ எனும் இந்நூலின் பங்களிப்பு கவனத்திற்குரியது.
தொடர்ந்து அறிவியல்சார் சிந்தனைகளை மாணவர்களுக்கு அளிக்க இதுபோன்ற ஏராளமான நூல்களை சிறார் இலக்கிய உலகிற்குப் பாலமுருகன் அளிப்பார் என்று நம்புவோம்.
நூலின் தகவல்கள் :
நூல் : பீம்பாய் பீம்பாய் எனக்கொரு டவுட்டு
ஆசிரியர் : ந.பாலமுருகன்
வெளியீடு : புக்ஸ் ஃபார் சில்ரன்
விலை : ₹45.00
நூலைப் பெற : thamizhbooks
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

