பீம்பாய் பீம்பாய் எனக்கொரு டவுட்டு (Beemboy Beemboy Enakoru Doubtu) – நூல் அறிமுகம் (Book Review) - ந.பாலமுருகன் (N.Balamurugan)

பீம்பாய் பீம்பாய் எனக்கொரு டவுட்டு? – நூல் அறிமுகம்

பீம்பாய் பீம்பாய் எனக்கொரு டவுட்டு (Beemboy Beemboy Enakoru Doubtu) என் கைகளுக்கு வந்து 14 நாட்கள் ஆகிவிட்டன. ஓர் இனிய மாலை வேளையில் கைகளுக்கு வந்த நூல் என்னோடு மௌனமாய் ஓர் உரையாடலை செய்து கொண்டே இருந்தது.

நேரம் ஒதுக்க முடியவில்லை என்பதை விட நூல்கள் வாசிக்கும் மனநிலை எனக்குள்ளும் நாடு கடத்தப் பட்டு விட்டது என்று கூறுவதே பொருத்தமானதாக இருக்கும்.

அதிகமாகப் போனால் ஒரு நாற்பது நிமிடங்களில் முடிந்து விடும் நூலைப் படிக்க நேரம் இல்லை என்பது ஏற்புடையதன்று என மனது கூறியதால் இன்று எப்படியும் படித்து விடு என்று மனது சொன்னது.

இன்றைய அழகான மாலையில் என் விரல்களின் முத்தங்களுக்காகக் காத்துகிடந்தது நூல்.

அணிந்துரை என்னுரை கடந்து நூலுக்குள் நுழைந்தேன் நூலிலும் அந்தி மாலையின் பொன் வண்ணம் கோலமிட்டது.

பிரைட் பீமா சக்திமான் போல ஒரு விந்தைப் பாத்திரம் ஆனால் இவன் புத்திமான் அவனை அறிவியலில் ஆழங்கால் பட்ட பாத்திரமாகப் படைத்திருக்கிறார் ஆசிரியர். அவனைச் சூழ்ந்த ஒரு மாணவர் கூட்டம் தங்கள் சந்தேகங்களை எல்லாம் கேட்டு தெளிவு படுத்திக் கொள்வது போல் நூலாக்கம் செய்திருக்கிறார்.

கசப்பு மருந்துகளை தேனுக்குள் கலந்து தருவது போல குழந்தைகளின் விரல் பற்றி உரையாடல் வழியாக அறிவுலகத்திற்கு அழைத்துச் செல்கிறார் குழந்தைகளை நூலைப் படிக்கும் பொழுது காந்தாரி மிளகாயில் செய்த பொடியும் மரவள்ளிக் கிழங்கும் சாப்பிட்ட அந்த பால்யத்தின் வாசல் சென்று திரும்பினேன்.

காரம் அதிகமாகும் போது நீர் அருந்தக் கூடாது பால் அல்லது மோர் அருந்த வேண்டும் என்பது எனக்குப் புதிய கருத்து

ஜெட் விமானங்களில் பயணம் செய்கையில் மாக் என்னும் அலகால் தூரம் அளக்கப்படுகிறது என்னும் அறிவியல் செய்தி புதுசு

ஒற்றுமையாக இருங்கள் ஜாதி மதம் இனம் என்ற பேதமின்றி வாழ அறிவியலோடு அறவுரையையும் விதைத்துச் செல்கிறது நூல்

இரத்த தானம் உறுப்பு தானம் என்று விழிப்புணர்ச்சியையும் ஊட்டுகிறது நூல்

பிரைட் பீமா பாத்திரம்
Pride பீமா என்று பெருமைப்படலாம்

எனக்கும் ஒரு டவுட் தம்பி நீங்களோ தமிழாசிரியர் நூலோ அறிவியல் செய்தி எப்படி?

ஆசிரியச் சொந்தங்களே நூலாசிரியர் நமது பாலமுருகன்

வாசியுங்கள்

நமது வாசிப்பால் ஒரு படைப்பாளி பூஜிக்கப்படுகிறான்.

நூலின் தகவல்கள் :
நூல் : பீம்பாய் பீம்பாய் எனக்கொரு டவுட்டு (Beemboy Beemboy Enakoru Doubtu)
ஆசிரியர் : ந.பாலமுருகன்
வெளியீடு :  புக்ஸ் ஃபார் சில்ரன்
விலை : 45.00
நூலைப் பெற : thamizhbooks 

நூல் அறிமுகம் எழுதியவர்:

ம. பாபு
தமிழ் ஆசிரியர்

Click to Join WhatsApp Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q


இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *