இம்சை அரசன்
சிவனின் தாயகத்தில்
விசித்திரமான விதிகள்.
சத்தியமாய் சாட்சியம் சொல்வேன்.
ஒருவர் தடுக்கி விழுந்தால்
காவலர்கள் கைது செய்வர்.
கொடுமை நீதிமன்றத்திலும் தொடரும்.
பெரும் தொகை தண்டம் விதிக்க
தயாராகும் நீதியரசர்கள்.
21ரூபாய்தான்
நீங்கள் செலுத்தும் தொகை.
என்றாலும்
இருங்கள் இன்னும் இருக்கிறது.
இந்த காலத்தில் அவர்கள் விதிக்கும்
தண்டனைகளைக் கேளுங்கள்.
ஆறு மணிக்கு முன் தும்ம வேண்டுமென்றால்
அனுமதிச் சீட்டு வைத்திருக்க வேண்டும்.
இல்லையென்றால் சித்திரவதைதான்.
மத்தளம் போல் அடி வாங்குவீர்கள்.
மூக்கு நிறைய பொடி திணிக்கப்படும்.
ஒரு முறை அல்ல, 24 முறை வெடிப்பீர்கள்.
பற்கள் தந்தி அடித்தால்
நான்கு ரூபாய் அபராதம்.
சுகுமார் ரேயின் வங்காளிக் கவிதை
மொழியாக்கம் தமிழில் – இரா. இரமணன்
பின் குறிப்பு –
சுகுமார் ரே அவர்களின் ‘ராகரூரேர் சனா’ வங்காளிக் கவிதையை அவரது மகனும் பிரபல இயக்குனருமான சத்யஜித் ரே ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்ததின் தமிழாக்கம். அபத்தக் கவிதைகள் (nonsense poetry) வகைமையை சேர்ந்த இது போன்ற எண்ணற்ற கவிதைகளை சுகுமார் ரே எழுதியுள்ளாராம். லெவிஸ் கரோல், டி.எஸ்.எலியட் போன்றோரும் இவ்வகைமைக் கவிதைகளை எழுதியுள்ளனராம். மேலெழுந்தவாரியாகப் பார்க்கும்போது பொருளற்றதாகத் தெரியும் இவ்வகைக் கவிதைகளை ஆழமாகவும் அந்த காலத்தோடும் பொருத்திப் பார்க்கும்போது மிகுந்த பொருள் நிறைந்தவைகளாகத் தெரியும்.
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.