
Beni Enum Siruvan
ஒரு குழந்தையை, தானாக வெளிப்படுத்த உதவும் ஒரு வழிகாட்டியாகவும், உந்துகோலாகவும் இருப்பவரையே குழந்தைகள் விரும்புகின்றனர் என்பதையும், அந்த உணர்வு மட்டுமே அவர்களை வாழ்க்கையில் தன் சொந்தக்கால்களில் நிற்கும், திடமான மனிதர்களாக மாற்றும் என்பதையும் ஆணித்தரமாக புரியவைக்கிறான் பெனி..ஒரு குழந்தையின் பார்வையில், சிறிய சிறிய கேள்விகளுக்கும், பாவனைகளுக்கும் ஒரு ஆழமான எண்ண ஓட்டமிருக்கும் என்பதை வாழ்ந்து காண்பிக்கிறான் இந்த பெனி – ஸ்ரீரங்கநாத்
சிறுவர்கள் தங்களை சிறுவர்கள் என்று உணர்வதில்லை.ஒரு முழுமையான மனிதனாக/மனுஷியாக தான் உணர்கிறார்கள். அவர்களை அப்படி நடத்தவே விரும்புகிறார்கள்.அவர்களின் ஆளுமை மிகவும் உறுதியானது. இதை எல்லாம் பெனியின் மூலம் ரொம்ப அழகாக சொல்லிச் செல்கிறது நாவல் – சுகிர்தா தண்டபானி