மலையாள எழுத்தாளர் பென்யாமின் எழுதிய நாவல் ஒன்று 2008இல் மலையாள எழுத்து உலகத்தை புரட்டி போட்டது. புத்தக விரும்பிகளை மட்டுமல்லாமல் சாதாரண மக்களையும் திரும்பிப் பார்க்கச் செய்தது. இன்றைக்கும் கேரளாவில் அதிக அளவில் விற்பனையான புத்தகங்களில் இதுவும் ஒன்று.
இந்த நாவல் பென்யாமின் என்ற ஒரு எழுத்தாளனின் கற்பனை படைப்பு அல்ல, நசீப் என்ற ஒரு மனிதனின் நிஜ வாழ்க்கையாகும். மேலும் இது கேரளா அரசின் சிறந்த மலையாள நாவலுக்காக சாகித்ய அகாடமி விருது வாங்கியது இந்த நாவல்..
குடும்பத்தில் மெல்ல மெல்ல மேலெழுந்து ஆழ்த்தும் நிலைக்கு சென்ற வறுமையை விரட்ட, மனதில் பல கனவுகளை சுமந்து சவுதி அரேபியா செல்லும் ஒரு கூலி தொழிலாளியின் வாழ்க்கை. எழுத்து வடிவத்தில் மட்டுமே நின்று விடாமல் இன்று இந்த நாவல் திரை உலகத்தையும் வியப்பில் ஆழ்த்தும் வண்ணம் வெளியாகி உள்ளது… மலையாள இயக்குனர் பிளசியின் இயக்கத்தில் மார்ச் 28 இன்று திரைப்பட வடிவம் பெற்று உலகம் எங்கும் வெளியாகி இருக்கிறது “ஆடு ஜீவிதம்” (The Goat Life).
கேரள மக்கள் தொகையில் ஒரு பங்கு மக்கள் கல்ஃபு நோக்கி செல்கிறார்கள், பிழைப்பு தேடி லட்சக்கணக்கான மலையாளிகள் சவுதி அரேபியாவில் வாழ்ந்து தன் தாய் நாட்டை நோக்கி திரும்பி வருகிறார்கள், இப்படி அன்றாடம் எத்தனை எத்தனை பேர்? இதில் எத்தனை பேர் பாலைவனத்தின் கோர முகத்தை பார்த்திருக்கிறார்கள்? உயிரை கையில் பிடித்துக் கொண்டு பாலைவனத்தின் அதிஉக்கிரமான வெப்பத்தில்,
அனல் பறக்கும் அந்த மணல் பரப்பில் தன் வாழ்நாளை சுட்டுக் கருக்கிய நஜீப் என்ற மனிதனின் சொல்லில் அடங்காத துயரங்களை இந்த நாவல் பேசுகிறது.
நசீப் கேரள மாநிலத்தின் ஹரிப்பாட்டில் உள்ள ஆராட்டுப் புழவை சேர்ந்தவர், புதிதாக திருமணமானவர் குடும்ப சூழல் காரணமாக, வெளிநாடுகளில் நல்ல சம்பளம் கிடைக்கும் வண்ணம் ஏதேனும் வேலைக்கு செல்ல வேண்டும் என்ற ஆசை இருந்தது… வெளிநாடு செல்ல விசா எடுப்பதற்காக தாய்நாட்டிலுள்ள தன் சொத்தை விற்று பணத்தை கொடுக்கிறார்… அதன் பிறகு சவுதி அரேபியாவில் பணி புரியும் வாய்ப்பும் அவருக்கு கிடைக்கிறது. ஏதோ கன்ஸ்ட்ரக்ஷன் கம்பெனியில் வேலை என்று கூறி தான் நசிப்பையும், அவரது ஊரைச் சேர்ந்த ஹக்கீம் என்ற ஒரு இளைஞனையும் விமானம் ஏற்றி விடுகிறார்கள். துரதிர்ஷ்டமா இல்லை நம்பிக்கை துரோகமா தெரியவில்லை! விமான நிலையத்தில் இவர்களை அழைத்துச் செல்ல யாருமே வரவில்லை.
கிங் காலித் சர்வதேச விமான நிலையத்தில் அடுத்து என்ன செய்வதென்று தெரியாமல் இருவரும் பயந்து நின்று கொண்டிருந்தார்கள், அப்பொழுது அங்கு வந்த ஒரு அரபி இவர்களிடம் வந்து ஏதோ புரியாத பாஷையில் ஏதேதோ கேட்டார், நசீப்வும் புரியாமலேயே தலையாட்டினார்.பிறகு அந்த நபர் ஒரு பழைய பிக்கப்பு டிராக் வண்டியில் பயணதை ஆரம்பித்தார். பயணம் செய்த அசதியில் நஜீபம், ஹக்கீமும் வண்டியில் ஏறியதும் உறக்க நிலைக்கு தள்ளப்பட்டனர்.
வண்டி லட்சிய இடத்தை எட்டியதும் நின்றது, இருவரும் விழித்து பார்த்தபொழுது கரு கரு இருட்டும், நிறைய ஆடுகள்! பாலைவனத்தில் இந்த ஆடுகளை மேய்க்கும் பணிக்கு தான் தங்களை கொண்டு வந்திருக்கிறார்கள் என்று நசீபுக்கு புரிந்ததது. அந்த இடத்தில் நசீப்பை மட்டும் இறக்கி விட்டு ஹக்கிமையும் சுமந்து மறுபடியும் அந்த வண்டி பயணித்தது.
பல மணி நேரத்துக்கு பிறகு அந்த அரபி ஹக்கீம் இல்லாமல் தனியாக திரும்ப வந்தான். அவனையும் தன்னைப்போல வேறொரு இடத்தில் விட்டு வந்திருக்க வேண்டும் என்று நசீப் புரிந்து கொண்டான்… இனிமேல் தான் ஆரம்பிக்கிறது நஜிபின் நரக வாழ்க்கை.
நஜீப் ஒரு அடிமைத் தொழிலாளியாகவும், ஆடு மேய்ப்பாளராகவும் பயன்படுத்தப்பட்டார்.. அரபிகளின் கொடிய துன்புறுத்தலுக்கு ஆளாகி மூன்று வருடத்திற்கு மேல் ஆளற்ற அந்த பாலைவனத்தில் தனியாக 700 க்கு மேல் ஆடுகளை மேய்ப்பதில் நிர்பந்திக்கப்பட்டார். சாப்பிட காய்ந்து போன குபுசும் (அரபி நாடுககில் ரொட்டி ), குடிக்க சிறிதளவு தண்ணீர் மட்டுமே கொடுக்கப்பட்டது. குளிப்பது பல்லு தேய்ப்பது ஏன் மலம் கழித்து விட்டு சுத்தம் செய்யக் கூட தண்ணீர் பயன்படுத்தக் கூடாது மீறினால் அடித்து துன்புறுத்தப்பட்டார்கள்.
தலை மயிரும் தாடியும் வளர்ந்து அடையாளம் தெரியாத அளவிற்கு கோர தோற்றத்துடன், அந்த மூணு வருடம் வெளி உலகத்தை பார்க்காமலேயே நசீப் வாழ்ந்திருக்கிறார். ஒரு வார்த்தை பேசவோ அந்த அரபிய தவிர அங்கு ஒருவரும் இல்லை. ஆடுகளின் கூட பேசுகிறான், ஆடுகளுடன் சாப்பிடுகிறான், ஆடுகளுடனே தூங்குகிறான், ஆடுகளோடு ஆடாகவே மாறுகிறான். அந்த நரகத்திலிருந்து எங்கேயும் தப்பிச் செல்ல முடியாது, அப்படி முயன்றால் துப்பாக்கி காட்டி பயமுறுத்துவது கொடூரமாக அடித்து காயப்படுத்துவது போன்ற செயல்களில் ஈடுபட்டிருந்தார்கள் அரேபியர்கள்.
சாப்பாடு தராமல் தண்டிப்பார். தூரத்தில் இருந்தபடியே பைனாகுலர் வழி நசீப்பை கண்காணித்துக் கொண்டிருந்தார்கள். மனைவியையும் குடும்பத்தையும் பற்றிய எந்த விவரங்களும் தெரியாது. நசீப் கிளம்பும்பொழுது தன் மனைவி கர்ப்பமாய் இருந்தால், குழந்தை பிறந்ததா என்று தெரியாது… பிறந்த குழந்தை ஆனா பெண்ணா தெரியாது. இப்படி ஒவ்வொரு நாளும் யோசித்து யோசித்து வாழ்க்கைக்கும் மரணத்திற்கும்இடையில் அல்லாடினான் நஜீப்.
நஜிபின் நண்பரான ஹக்கீமின் நிலமையும் இதே தான்.. எப்பொழுதாவது இருவரும் பார்க்க நேர்ந்தால் தப்பித்து விடுவார்களோ என்ற எண்ணத்திலேயே மேற்பார்வையாளர் அடித்து துன்புறுத்துவார்…
இப்படி நாம் யோசித்து கூட பார்க்காத அளவுக்கு ஒவ்வொரு நாளும் வேதனைப்பட்டாலும் நஜீப் என்றாவது ஒரு நாள் தனக்கு சுதந்திரம் கிடைக்கும், தன் தாய் நாட்டுக்கு சென்று விடுவேன் என்ற நம்பிக்கையோடு, ஏக்கத்தோடு நாட்களை நகர்த்துகிறார்…. இறுதியில் நஜீப் என்ன ஆனார்? அவரும் அவரது நண்பரும் தங்களின் துன்பத்திற்கு முடிவு கட்டினார்களா? என்பது தான் ஆடுஜீவிதாத்தின் முழு கதை.
நஜீபின் மனைவியின் தம்பியின் நண்பர் மூலமாகத்தான் எழுத்தாளர் பென்யாமின் அவருக்கு அறிமுகமாகிறார். பென்யாமின்னும் இது போன்ற புலம்பெயர்ந்து வாழும் மனிதர்களின் வாழ்க்கை எழுத வேண்டும் என்று எதிர் பார்த்து கொண்டிருந்தார்…. நஜீப்பின் இந்த வாழ்க்கை கேட்டதும் உடனே எழுதவும் முடிவு செய்தார்.
ஆடுஜீவிதம் என்ற நாவல் எழுதுவற்காக 2 வருடங்கள் எடுத்துக்கொண்டர்… பாலைவனத்தின் வாழ்க்கையியும்,புவியலும் அற்புதமாக காட்சியாக எழுதிதியது மட்டும் அல்லாமல் அதில் வரும் அனைத்து கதாபாத்திரங்களின் கூடவே வாழ்த்து இருக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும். அந்த அளவிற்கு தனக்கு நேர்ந்தவாறு அனுபவித்து வேதனைகளை வெளிப்படுத்திய இருப்பார்.
இதுதான் இந்த எழுத்தாளனை வெற்றி பெற செய்தது. எல்லா கதைகளும் படிக்கும் போது அந்த கதையின் தாக்கம் இருக்குமா என்று சொல்ல முடியாது ஆனால் ஆடுஜீவிதம் கனத்த இதயங்களையும், ஈரமான கண்களையும் கண்டிப்பாக பரிசாரிக்கும்…….
ஆடுஜீவிதம் ஒரு நஜீப்பின் வாழ்க்கை மட்டுமே.. இன்னும் சொல்ல படாத எழுதப்படாத பல நஜீப்புகளின் கதைகள் இருக்கும் என்பதில் சந்தேகம் வேண்டாம்…
மொழிபெயர்ப்புகள்
தமிழ் : விலாசினி (2020)
தாய் : நவர (2012)
ஓடிய : கௌரஹரி தாமஸ் (2015)
நேப்பாள் : தினேஷ் காஃப்லே (2015)
அரபு : சுஹைல் வஃபி (2015)
நூலின் தகவல்கள்
நூல் : “ஆடு ஜீவிதம்”
நூலாசிரியர் : பென்யாமின்
தமிழில் : விலாசினி
விலை: ரூ.250/-
வெளியீடு: எதிர் வெளியீடு
நூலைப் பெற : 44 2433 2924
எழுதியவர்
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.
அருமை
நெஞ்சை உருக்கும் நாவல். மனத்தை உலுக்கும் நாவல். கல்ஃப் நாடுகளில் வேலைக்குச் செல்பவர்கள் படும் உச்சபட்ச துன்பங்களை துயரங்களை அவலங்களை இந்த நாவல் பேசுவதைவிட யாரும் பேசிவிட்டு முடியாது. நெஞ்சை தனக்கும் நடை.