புதுக்கோட்டை புத்தகத் திருவிழாவையொட்டி சிறந்த புத்தகங்களுக்கான விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து புத்தகத் திருவிழா ஒருங்கிணைப்பாளா்கள் வெளியிட்ட அறிவிப்பு:
தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சாா்பில் கடந்த பிப்.14 -ஆம் தேதி தொடங்கிய 4ஆவது புதுக்கோட்டை புத்தகத் திருவிழா வரும் 23ஆம் தேதி வரை புதுக்கோட்டை நகா்மன்றத்தில் நடைபெறுகிறது. விழாவையொட்டி கடந்த 2018, 2019 ஆம் ஆண்டுகளில் வெளிவந்த சிறந்த நூல்களுக்கான விருதுகள் வழங்கத் திட்டமிடப்பட்டது. அதனடிப்படையில் வரப்பெற்ற புத்தகங்களில் நடுவா் குழுவினரால் தோ்வு செய்யப்பட்ட பட்டியல் வெளியிடப்படுகிறது.
அரசியல், சமூகம், வரலாறு குறித்த கட்டுரைப் பிரிவில் பாரதி புத்தகாலயம் வெளியீட்டில் மு.ஆனந்தன் எழுதிய ’’பூஜ்ஜியநேரம்’’, கலை, இலக்கியம், கல்வி, அரசியல் பிரிவில் எழுத்தாணி வெளியீட்டில் அ. அரிமாப்பாமகன் எழுதிய ’’இயம்பும் எம்மொழி’’, கவிதைப் பிரிவில் காலச்சுவடு பதிப்பகத்தின் எம்.எம்.பைசல் எழுதிய ’’வாப்பாவின் மூச்சு’’, சிறுகதைப் பிரிவில் தூறல் வெளியீட்டகத்தின் சந்தியூா் கோவிந்தன் எழுதிய ’’தாத்தாவின் ஞாபகம்’’, புதினம் பிரிவில் அன்னை ராஜேஸ்வரி பதிப்பகத்தின் புதிய மாதவி எழுதிய ’’பச்சைக்குதிரை ’’ ஆகிய புத்தகங்கள் தோ்வு செய்யப்பட்டுள்ளன.
தோ்வு செய்யப்பட்ட ஒவ்வொரு புத்தகத்துக்கும் விருதுப் பட்டயத்துடன் ரூ.5 ஆயிரம் ரொக்கப் பரிசு வரும் பிப். 23ஆம் தேதி நிறைவு நாள் மேடையில் வழங்கப்பட்டது.
நன்றி – தினமணி நாளிதழ்