உன்னை எதற்காக
தூக்கிலிட்டார்கள் பகத்?
ஏகாதிபத்தியத்தை
எதிர்த்து…
தேசவிடுதலையை
வர்க்க மொழியால்
வழிமொழிந்தால் தோழா.
புரட்சி என்றால் என்ன பகத்?
அநீதியால் கட்டப்பட்ட
சமூக அமைப்பை
அடியோடு மாற்றுவது தோழா.
புரட்சியென்பது
வன்முறையானது இல்லையா பகத்?
இல்லை…அது
மனிதனை மனிதன்
சுரண்டிக்கொழுக்கும்
வர்க்கத்தின் எதிர்ச்சொல் தோழா.
உன் கடைசி நிமிடம் வரை
லெனினை வாசித்தாயே ஏன் பகத்?
எந்த நிலையிலும்
எதிர்கொள்ளும்
மார்க்சிய இயங்கியல்
அவரிடம் கண்டதால் தோழா.
எப்படிப்பட்ட சுதந்திரம்
உனது கனவாயிருந்து பகத்?
அந்நிய ஆதிக்கம் வெளியேறி
ஏகாதிபத்தியம் அழிந்து
பட்டாளி வர்க்க சோசலிசமே
என் கனவு தோழா.
நீ ஜனநாயகவாதியா?
சர்வாதிகாரியா? பகத்.
நான் வர்க்க சார்ப்புடைய
மானுடவாதி தோழா.
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.
Leave a Reply
View Comments