புதிய தமிழ் எழுத்துரு - பாரதி சுதிப்தா | Bharathi 02 Sudeeptha | Bharathi Puthakalayam New Tamil Unicode Font - Free Download | bookday.in

புதிய தமிழ் எழுத்துரு (New Tamil Unicode Font) – பாரதி சுதிப்தா

புதிய தமிழ் எழுத்துரு – பாரதி சுதிப்தா
New Tamil Unicode Font – Free Download
சென்னைப் புத்தகக் காட்சி சிறப்பு வெளியீடு

உங்கள் கையெழுத்து ஓர் எழுத்துருவாக (Font) வடிவமைக்கப்பட்டால் எப்படி இருக்கும்? இரண்டாம் வகுப்பு மாணவி சுதிப்தாவிற்கு இது சாத்தியமாகியுள்ளது! அவரது கையெழுத்து “பாரதி சுதிப்தா” என்ற புதிய தமிழ் எழுத்துருவாக வெளியிடப்பட்டுள்ளது.

சென்னை புத்தகக் காட்சியை முன்னிட்டு, பாரதி புத்தகாலயத்தின் “புக்டே” இணைய இதழ் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான கையெழுத்துப் போட்டியை நடத்தியது. ஐந்து பிரிவுகளாக நடந்த இந்தப் போட்டியில் மாநிலம் முழுவதிலுமிருந்து ஏராளமான மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். ஒவ்வொரு பிரிவிலும், முதல் கட்டமாக ஒரு மாணவரின் கையெழுத்து தேர்வு செய்யப்பட்டு, தமிழ் ஒருங்குறி எழுத்துருவாக வடிவமைக்கப்பட்டு சென்னை புத்தகக் காட்சியில் வெளியிடப்பட்டுள்ளது.

அந்த வகையில், தொடக்க நிலை (வகுப்பு 1-5) பிரிவில் திருவாரூர் மாவட்டம், மாணிக்கமங்கலம், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியின் இரண்டாம் வகுப்பு மாணவி மு. சுதிப்தாவின் கையெழுத்து, “பாரதி சுதிப்தா” என்ற பெயரில் தமிழ் ஒருங்குறி எழுத்துருவாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த எழுத்துரு, பாரதி புத்தகாலயத்தின் “பாரதி – அன்புத்தமிழ்” வரிசையில் வெளியிடப்படும் எழுத்துருக்களில் ஒன்றாகும். “பாரதி அன்புத்தமிழ்” எழுத்துருக்கள், தமிழில் கையெழுத்து எழுத்துருக்களுக்கான ஒரு தனித்துவமான தொகுப்பாக இருக்கும்.

“Bharathi 02 Sudeeptha” என்ற எழுத்துருவின் பெயரில் நடுவில் உள்ள “02” என்ற எண், அந்த மாணவி படிக்கும் வகுப்பினைக் குறிக்கிறது.

புதிய தமிழ் எழுத்துரு - பாரதி சுதிப்தா | Bharathi 02 Sudeeptha | Bharathi Puthakalayam New Tamil Unicode Font - Free Download | bookday.in

சிறப்பம்சங்கள்:

குழந்தையின் கையெழுத்துப் பாணியில், அழகாகவும், இயல்பாகவும் உள்ளது.

தெளிவாகவும் படிக்க எளிதாகவும் உள்ளது.

குழந்தைகளை ஈர்க்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இது தமிழ் ஒருங்குறி (Unicode Font) எழுத்துரு என்பதால், விண்டோஸ், மேக், லினக்ஸ், மொபைல் போன்கள் என அனைத்து கருவிகளிலும் பயன்படுத்தலாம். தட்டச்சு செய்ய ஏற்கனவே உள்ள வசதிகளையே பயன்படுத்தலாம்.

பிரத்யேக மென்பொருள் தேவையில்லை.

பயன்பாடுகள்:

கல்வி: பாடப்புத்தகங்கள், குழந்தைகளுக்கான கதைப்புத்தகங்கள், கற்றல் உபகரணங்கள்.
சிறார் இலக்கியம் மற்றும் படைப்புகள்: கவிதைகள், சிறுகதைகள், கட்டுரைகள்.
வடிவமைப்பு: விளம்பரங்கள், அழைப்பிதழ்கள், வாழ்த்து அட்டைகள், சமூக ஊடக பதிவுகள்.

பாரதி சுதிப்தா எழுத்துருவை இலவசமாகப் பதிவிறக்க:

[இணைப்பு இங்கே]

தொடக்கநிலைப் பிரிவில், ஶ்ரீ ஆர்.எம். ஜெயின் வித்யாஷ்ரமம் மேல்நிலைப்பள்ளியின் ஐந்தாம் வகுப்பு மாணவி ஜி. ஜோயா ஜமன் அவர்களின் கையெழுத்தும் எழுத்துருவாக வடிவமைக்கப்பட்டு வருகிறது. விரைவில் வெளியிடப்படும்.
அடுத்த பதிவில் நடுநிலை வகுப்பு பிரிவிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட கையெழுத்தை நாம் பார்க்கலாம்.

எழுத்துருவினைப் பதிவிறக்கி, பயன்படுத்திப் பாருங்கள். உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள்!

எழுதியவர்:

மின்மினிகளை ஏமாற்றி இரையாக்கும் சிலந்தியின் தந்திரம் - Spiders manipulate and exploit bioluminescent signals of fireflies - Science Article - https://bookday.in/

த. பெருமாள்ராஜ்
Bharathi Puthakalayam
New Tamil Unicode Font Programme – ஒருங்கிணைப்பாளர்

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q


இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.



Show 1 Comment

1 Comment

  1. செல்வகுமார். மீ

    ஒவ்வொருவரும் தங்களது கையெழுத்தினை இந்த முறையில் எடுத்துருவாக மாற்றினால் அவர்களுக்கு தனிப்பட்ட முறையில் பயனுள்ளதாக இருக்கும்.
    ( குறிப்பாக ஆசிரியர்களுக்கு 😆😆😆 )

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *