இரு ஆளுமைகளின் ஒற்றுமை விளங்கும் “பாரதியும், ஷெல்லியும்” – ஸ்ரீ

இன்றைய நூலின் பெயர்: பாரதியும், ஷெல்லியும்

நூல் ஆசிரியர் : தொ.மு.சி. ரகுநாதன்

இது ஒரு ஒப்பீட்டு ஆராய்ச்சி நூல். பாரதிக்கும் ஷெல்லிக்கும் ஏகப்பட்ட ஒற்றுமை உண்டு. ஷெல்லி 8 வயதில் கவிதை எழுத துவங்கியவன் – பாரதியும் இளம்வயதில் கவிபாட துவங்கி 11 வயதில் பாரதி பட்டம் பெற்றவன். ஷெல்லி தன் வாழ்நாளில் பல சம்பிரதாயங்களை மீறினான் – பாரதியும் அப்படியே..

ஷெல்லி பிரெஞ்சு புரட்சியின் குழந்தை – பாரதி இந்திய விடுதலை போராட்டத்தின் குழந்தை. சிரமமான காலங்களில் நேர்மை உணர்ச்சியிலும், மான உணர்ச்சியிலும் இருவருமே ஒத்த மனப்பான்மை. இருவரும் இளவயதிலேயே மரித்து போனவர்கள்..

இத்தகைய ஒற்றுமை கொண்ட இருவரின் படைப்புகளையும் ஒப்பிட்டு ஆய்வு செய்கிறது இந்த நூல். சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம், மன்னர்களும், மதக்குருக்களும், ஷெல்லியின் பொற்காலமும், பாரதியின் கிருதயுகமும், பெண்ணுரிமை, அன்பே ஆயுதம், காதல் அழகும், அழகு காதலும், உருவகங்களும், உவமைகளும் என்ற தலைப்புகளில் இருவரின் படைப்புகளும் ஒப்பிட்டு ஆராயப்பட்டு உள்ளன..

வாசியுங்கள்..

இரு ஆளுமைகளின் ஒற்றுமை விளங்கும்..

பக்கம்: 310
விலை: ரூ 100
வெளியீடு: நியு செஞ்சுரி புக் ஹவுஸ்