கோ. பாரதி மோகனின் தமிழ்க் கவிதையும், தங்கேஸின் ஆங்கில மொழியாக்கமும்

Bharathi Mohan's Two Tamil Poetries And Thanges English Translations. Book Day is Branch of Bharathi Puthakalayam.கவிதை 1

எனது
வெயிலுக்கும் மழைக்குமாய்
உன் கண்களுக்கு மத்தியிலிருந்து
இறங்குகிறது
இன்னும் விரிக்காத குடை.
நீதான் அதை
மூக்கு என்கிறாய்

For all my heat and rain
there comes down from the centre of your eye brows
a folded umbrella
you only
call
this your nose

முகத்திலேந்தி வருகிறாய்
இரட்டைத்துளை கொண்ட
குழலொன்றை.
அதன் உள்ளும் புறமும்
இசைவுறும் காற்று
என்னை
இறக்கவும் பிறக்கவும் செய்கிறது

you are carrying a double holed flute
on your face
and its interior harmonious wind
makes me die and be born

பிடி மண்ணெடுத்து
முகர்ந்து பார்க்கிறாய்
வாசம் பெறுகிறது பூமி

Taking a handful of soil,
you are sniffing
the Earth gets sweet smell…

உன்
திருமூக்கு தரிசித்த நாளில்தான்
எனக்கு
திருமுழுக்கு நடந்தது

on the day I got darshan of your holy nose
my baptism took place fully

Bharathi Mohan's Two Tamil Poetries And Thanges English Translations. Book Day is Branch of Bharathi Puthakalayam.

கவிதை 2

பாறையாக்கிக் கொண்டாலென்ன
இதயத்தை
ஓயாத அலை நான்
நிர்ப்பந்திக்க என்ன இருக்கிறது அன்பிற்கு
வழங்குதல் இயற்கையின் ஒருவழிப்பாதை

மணத்திற்கு மலரோ
சுவைக்கு கனியோ
கேட்பதில்லை கூலி

கட்டாயம் என்ன உண்டு காதலில்

காதல் இல்லையென்றால்
இருந்திருந்திருக்க வாய்ப்பில்லை
இதயமே கூட

வேடிக்கைதான்
விதைத்துவிட்டு காத்திருத்தல்
போகிற வழியின் விளைச்சலுக்கு
பொறுப்பேற்பதில்லை நதி

நதியின் பாதையில் உருளும்
கூழாங்கற்களுக்கு
பதில் இல்லை நதியிடம்

உன் விளக்கை நீ ஏற்றுகிறாய்
ஏன் கோரவேண்டும்
விட்டில்களிடம் மன்னிப்பு

நீ ஒளி
இருள் என் காதல்

Why dont make the heart a rock ?
A relentless wave I am….
what is there to compel in love ?
Giving is a one way path in nature

Flowers and Fruits
Never ask Wages for fragrance and taste
what is there any compulsion in love ?

if no love ,
there might not have been
any heart with us

It is a fun indeed
Waiting for sprout after sowing

The river never takes resposibility for the yielding
of the land in which it moves on…

there is no answer in the river
for the pebbles
rolling in the path of the river

you are lighting your lamp on
Why should ask
Apologies with the moth ?

You are light
But dark is my love

Bharathi Mohan
English by: Thangeshwran

கவிஞர் தங்கேஸ் பற்றிய சிறுகுறிப்பு

தேனிமாவடத்தைச் சேர்ந்தவர். கவிஞர், மொழிபெயர்ப்பாளர், ஆங்கில ஆசிரியர். மேகமலை அரசு மேனிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியரும் கூட.

தங்கேஸ்வரன் அவர்கள், ‘தேனி தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தில் பொறுப்பு வகிப்பவர். இவர், ஆங்கிலக் கவிஞர்களின் கவிதைகள் பலவற்றை தமிழுக்கு மொழிபெயர்த்துத் தந்துள்ளார். இவரின் மொழிபெயற்பில் கலீல் ஜிப்ரானின் ‘முறிந்த சிறகுகள்’ நூலாக்கம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. கவிஞர் பாரதிமோகன் எழுதியுள்ள ‘மூக்கு – 10’ கவிதைகளிலிருந்து சிலவற்றை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார்.

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.