நாகர்கோவிலில் பாரதி புத்தகாலய புத்தக கண்காட்சி துவக்கவிழா——————————————————————–
23.12.2020 மாலை 5.30 மணிக்கு பாரதி புத்தக விற்பனையானது நாகர்கோவிலில் உள்ள கே  பி  ரோடு லின்ஸ் அருகில் நடைபெறும்.
——————————————————————–
தலைமை – எம்.அகமது உசைன்.

ரிப்பன் வெட்டி திறந்து வைத்து சிறப்புரை-மரியாதைக்குரிய நாகர்கோவில் காவல்துறை துணை கண்காணிப்பாளர் திரு இரா. வேணுகோபால். அவர் பேசும்போது, புத்தகம், படிப்பது, பாரதியார், அவரது துணைவியார் கண்ணம்மா, மற்றும் தமிழ் மொழி, அவர்சார்ந்த துறை குறித்து சிறப்பாக பேசியதோடு இளைஞர்கள் படிக்கவேண்டியதேவையை சமூக அக்கரையோடு பேசினார். கிறிஸ்தவ கல்லூரி முதல்வர் ஜே ஆர் வி எட்வர்ட் முதல் விற்பனையை டாக்டர் ஸ்வாகீன் அம்ப்ரோஸிடம் வழங்கி துவக்கி வைத்தார்.

Image

இருவரும் கருத்துரையும் வழங்கினர். நகழ்ச்சியில் டி.எஸ்.பி யின் துணைவியாரும், இதற்கு சிறப்பாக செயல்பட்ட பேராசிரியர்கள் டி.நாகராஜன், டி மனோகர ஜஸ்டஸ், மற்றும் சுந்தரம்,  கே. மோகன், தொழிற்சங்கதலைவர் கே. தங்க மோகன், ஆசிரியர் சங்க தலைவர் எட்வின் பிரகாஷ், சந்திரகாசன், ராஜநாயகம், பரமசிவம்,  ரத்னசிகாமணி, லாரன்ஸ், ஐயப்பன், சுபாகரன், சுரேஷ், உட்பட பலர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சிகளை பொறுப்பாளர் திரு  பழனிச்சாமி தொகுத்து நடத்தினார். நிகழ்ச்சியில் பொறியாளர் அனந்தராமன் எழுதிய ‘நெய்தல்’ புத்தகம் சிறப்பு விருந்தினருக்கு பரிசளிக்கப்பட்டது. அனந்தராமனும் கலந்து கொண்டார்.

Imageபுத்தக கண்காட்சி ஜனவரி 3- ம் தேதி மாலை வரை நடைபெறும். வாங்குகிற விலைக்கு ஈடான புத்தகங்கள் இனாமாக வழங்கப்படும் (50%). தினமும் பொது நிகழ்ச்சிகள் மாலை 5 மணிக்கு நடைபெறும்.

Image