பாரதியார் சரித்திரம் (Bharathiyar Sarithiram) – நூல் அறிமுகம்
💥இன்று பாரதியை கொண்டாடாதவர்கள் இருக்க முடியுமா என்று கேட்டால் அது கேள்வி குறிதான்.
💥எங்கே திரும்பினாலும் எதோ ஒரு வகையில் அவர் பெயரோ இல்லை கவியோ நமக்கு தென்படுகிறது.
💥ஆனால் அவர் வாழ்ந்த போது கொண்டாட மறுத்தது. அவரை மட்டுமா? அவரை கொண்வளுக்கும் இதே நிலைதான்.
💥அவரின் மனைவி செல்லம்மாவின் வார்த்தையில் சொல்ல வேண்டும் என்றால்
💥இன்று மகாகவியின் மனைவியாகப் போற்றப்படும் நான் அன்று பைத்தியக்காரன் மனைவியென்று பலராலும் ஏசப்பட்டேன். விநோதங்கள் என் வாழ்க்கையில் அதிகம். உலகத்தோடொட்டி வாழ வகை அறியாத கணவருடன் அமர வாழ்வு வாழ்ந்தேன் என்றால் உங்களுக்குச் சிரிப்பாகத்தான் இருக்கும். யாருக்கு மனைவியாக வாழ்ந்தாலும் வாழலாம் கவிஞன் மனைவியாயிருப்பது கஷ்டம் என்று சொல்லும் செல்லம்மா தனது கணவரின் வாழ்க்கை வரலாற்றை பெருமிதத்தோடு சொல்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
💥சிறுவயது முதல் கவி வடிப்பதில் சிறந்து விளங்கிய சுப்பிரமணியன் எட்டயபுர மன்னரால் பாரதி பட்டம் கொடுக்கப்பட்டு அன்று முதல் சுப்பிரமணிய பாரதி ஆனார்.
💥வெள்ளைய ஆதிக்கத்திற்கு எதிராக புரட்சிகரமான கவிதைகளை எழுதி தாய் நாட்டிற்கு விடுதலை உணர்வை ஊட்டி தேசிய கவியாகிறார்.
💥செல்லம்மா வீட்டுக்காக வைத்திருக்கும் உணவைக் கூட காக்கைக்கும் குருவிக்கும் இறைத்து அனைத்து உயிர்களிடமும் அன்பை பொழிந்து காக்கை குருவி எங்கள் ஜாதி என்றார்.
💥தன்னை உதாசீனப் படுத்தியவர்களைக்கூட மதித்து பகைவனுக் கருள்வாய்-நன்னெஞ்சே என்று நட்பு பாராட்டினார்.
💥எவ்வளவு கஷ்டம் இருந்தாலும் நேர்த்தியாக உடை அணிவதை விரும்பும் பாரதி இறப்பிற்கு முன்பு கூட கோட்டையும் தலைபாகையையும் ஒழுங்குப் படுத்தி கட்டிக்கொண்டிருக்கிறார்.
💥ஆணும், பெண்ணும் சமமென்று பேசக்கொண்டு இருக்கும் இந்த காலத்திலும் கிராமங்களில் கணவனும் மனைவியும் இப்பவும் கைகோர்த்து நடந்து சென்றால் கேலிப்பேசி சிரிப்பார்கள். ஆனால் பாரதி அந்த காலத்திலேயே தனது மனைவி செல்லமாளை கைகோர்த்து கொண்டு தெருவில் போயிருக்கிறார்.
💥இதை கேலிப்பேசிபவர்களுக்காக பாடியதுதான்
“ஆணும் பெண்ணும் நிகரெனக் கொள்வதால் அறிவி லோங்கியில் வையந் தழைக்குமாம்..
பூணும் நல்லறத் தோடிங்கு பெண்ணுருப் போந்து நிற்பது தாய் சிவ சக்தியாம்
நாணு மச்சமும் நாய்கட்கு வேண்டுமாம்
ஞான நல்லறம் வீர சுதந்திரம் பேணு நற்குடிப் பெண்டிர் ஒழுக்கமாம்”
நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வையும்…
நிலத்தில் யார்க்கு மஞ்சாத நெறிகளும்
திமிர்ந்த ஞானச் செருக்கு மிருப்பதால் செம்மை மாதர் திறம்புவ நில்லையாம் அமிழ்ந்து பேரிருளா மறியாமையில் அவல மெய்திக் கலையின்றி வாழ்வதை உமிழ்ந்து தள்ளுதல் பெண்ணற மாகுமாம்.”
💥அனைத்து உயிர்களையும் சமமாக மதித்து நல்ல மனிதனாக , சிறந்த கவிஞாக தாய் நாட்டிற்கு உழைத்த விடுதலை வீரனாக கடைசிவரை எண்ணற்ற துன்பகளில் உழன்ற பாரதியை இருக்கும் போது பித்தன் என்றே அழைத்தது இந்த பாழ்பட்ட சமுதாயம்.
💥இதை பாரதியார் வரிகளோடு பார்த்தால்
நல்லதோர் வீணைசெய்தே-அதை
நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ?
என்ற பாடல் நினைக்கு வருகிறது.
💥பாரதியாரின் வாழ்க்கையில் நிகழ்ந்த நிகழ்ச்சிகளை உடனிருந்து கண்டு, அவற்றில் இன்ப துன்பங்களை பங்கு கொண்ட மனைவி செல்லமா பாரதியார் வாழ்க்கையில் நிகழ்ந்த உண்மை நிகழ்ச்சிகளை உலகுக்கு எட்டச் செய்ய வேண்டுமென்ற நோக்கத்தோடு எழுதிய இந்நூலில்
💥பாரதியாரின் வாழ்க்கையில் நடந்த அனைத்து நிகழ்வுகளும் இடம்பெற்றிருக்கிறது.
💥பாரதியாரை பற்றி தெரிந்து கொள்ள விரும்புவோர் அனைவரும் வாசிக்க வேண்டிய நூல்.
நூலின் தகவல்கள்;
நூல்: பாரதியார் சரித்திரம்.
ஆசிரியர்: செல்லம்மாள் பாரதி
பதிப்பகம்: பாரதி புத்தகாலயம்
பக்கங்கள்: 112
நூலைப் பெற : https://thamizhbooks.com/product/bharathiyar-sarithiram/
நூல் அறிமுகம் எழுதியவர் :
✍️ ஶ்ரீதேவி சத்தியமூர்த்தி
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.