சைக்கிளும் நானும் (சிறுகதை) | Bicycle and Me (Short story)

என் 6 வயதில் சைக்கிளில் செல்வபர்களைப் பார்த்தால் மலைப்பாக இருக்கும். நானும் ஒரு நாள் இதுமாதிரி போகும் நாள் வெகு தொலைவில் இல்ல என்ற நினைப்பேன்.

ரவிச்சந்திரன் நடித்த அதே கண்கள் சினிமாவில் ,அவர் சைக்கிள் ஒட்டயபடி வரும் போது நடிகை காஞ்சனா தன் தோழிகளுடன் பாட்டுபாடி நடனமாடியும்தண்ணீர் அடிக்க அது ரவிச்சந்திரன் மேல் பட ,அவர்முறைப்பார், அந்த சைக்கிள் எனக்கு ரொம்ப பிடிக்க அது மாதிரிகேட்டேன் என்அப்பாவிடம், திட்டு தான் முதலில் கிடைத்தது.

அதன் பிறகு என் தந்தை நாங்கள் கோடை விடுமுறைக்காக என் தாத்தா வீட்டுக்கு ச்சென்று பிறகு என் தந்தை ஊருக்கு 11ஆம் வகுப்புபடிக்க தயாராக இருந்த போது, நீங்கள் வேலூர் வர வேண்டாம், என்னை ஆரணிக்கு மாற்றி விட்டனர், ஆரணிக்கு பயணம்.

எனு அப்பா ஆரணி தாசில்தாராக இருந்தார். அங்கே இருந்த ஒரு நபரிடம் என்னையும், என் தம்பியையும் அறிமுகப்படுத்தி ,வரும் ஞாயிறன்று இருவருக்கும் சைக்கிள் ஒட்ட கற்றுக் கொடுக்க சொல்லி நாங்களிருவரும்,அந்த நாளை எண்ணி இருக்க,ஞாயிறு மதியம் சுமாராக 2/00மணிக்கு,நான் ஆசைப்பட்ட சைக்கிள் சவாரிக்கான சைக்கிள் அதேகண்கள் சைக்கிள் வர எப்படியும் இன்று குறைந்தபட்சம் குரங்கு பெடல் அடித்து விடலாம் என
எண்ணி சுமாராக மூன்று மணி நேரம் முயற்சி செய்தும் சைக்கிள் ஸ்டாண்டு கூட போட முடியவில்லை.

பிறகு காஞ்சீபுரத்தில் கல்லூர படிக்கும் போது தட்டு தடுமாறி சைக்கிள் கற்றுக்கொண்டு கல்லூரி வரை பயணம். கொஞ்ச நாளிலேயே எதிரில் வந்த சோடா பாட்டில் ஏற்றி வந்த சைக்கிளுடன் டமால், பிறகு அந்த சோடா பாட்டில் கடை ஒனரிடம் பேரம்பேசி ரூபாய் 15 தண்டம்.

1975எமர்ஜென்சி சமயத்தில் நானும் என் சகோதரரும் மேற்கு மாம்பலத்திலிருந்து நந்தனம் வேலைவாய்ப்புத்துறையில் பதிவு செய்ய சைக்கிளில் டபுள்ஸ். அந்த சமயத்தில் சைக்கிளில் டபுள்ஸ் செல்லக்கூடாது ,போலீஸ் கைகாட்ட, வண்டியை நிறுத்தியதும் சைக்கிளை ப்பூட்டிசாவியை போலீஸ் காரர் எடுக்க, நான் அவரிடம் சார் நாங்க வேலை த்தேடி செல்கிறோம் எங்களிடம் பணம் இல்லை, என்று சொல்லி, பிறகு அங்கு சென்றால், அவர் பணம் வாங்கி விடலாம் என நினைக்க, அவரிடம் நான் சார், வண்டி வாடகை சைக்கிள், சம்பந்தப்பட்ட நபர் வருவார அவரிடம் சொல்லுங்க என்ற படியே கிளம்ப, அவர் அப்போது தான் பார்த்து சரி பணம் வேண்டாம் என்ற படியே சைக்கிளில் காற்றை இறக்கி விட்டு அனுப்பினார்.

எனக்கு இருதயத்தில் அயோடிக் வால்வு பழுதான நிலையில் 2010ல் அறுவைச்சிகிச்சை அதன்பின் சைக்கிள் ஒட்ட வில்லை.

அமெரிக்காவிலுள்ள பாஸ்டனில் என்மகள் வீட்டுக்கு வந்த போது ஒரு ரிசார்ட் போனோம். அந்த இடத்தில் இரண்டு நாட்கள் சைக்கிள்
ஒட் டினேன். மறக்க முடியாத நினைவை பகிர்ந்து கொள்கிறேன்.

 

எழுதியவர் 

பாரதிராஜன் என்கிற ரங்கராஜன்

அமெரிக்கா
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம்,   கட்டுரைகள்  (அறிவியல்பொருளாதாரம்இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

  

7 thoughts on “சைக்கிளும் நானும் (சிறுகதை)- ரங்கராஜன்”
  1. சிறகடித்து பறந்தது மலரும் நினைவுகள்.

   1. அந்த நாள் போனதம்மா.. ஆனந்தம் இனி வருமா

   2. அந்த நாள் போனதம்மா.. ஆனந்தம் இனி வருமா

 1. படித்தேன். உண்மை சம்பவம் மிக அழகாக தொகுப்பு. மிக்க நன்றி

  1. I am 67, still struggling with my bicycle….. Sometimes I venture out….. Still hoping to go long distances…. Terrified of traffic…..

 2. ரங்கராஜனின் சைக்கிளும் நானும் – நான் சைக்கிள் ஓட்டப் படித்த நாட்களுக்கே என்னையும் ஓட்டிச்சென்றது. யாருடைய தயவுமின்றி தானாகக்கற்றுக் கொண்டு நீண்ட தூரம் பயணிக்கும் போது விமானத்தையே ஓட்டினாற்போல் ! சூப்பர் ரங்கு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *