முனைவர் பா. ராம் மனோகர் எழுதிய "ஓ,.... பட்டர்பிளை.... ப்ளூ பட்டர்பிளை" கட்டுரை - Blue Butterfly of Armenia | அர்மெனியா நாட்டின் நீல வண்ணத்து பூச்சி | www.bookday.in

ஓ,…. பட்டர்பிளை…. ப்ளூ பட்டர்பிளை – முனைவர். பா. ராம் மனோகர்

ஓ,…. பட்டர்பிளை – ப்ளூ பட்டர்பிளை

– முனைவர். பா. ராம் மனோகர்

*****************************************************************************

இயற்கை பாதுகாப்பு பற்றிய செயல்பாடுகள், உலகம் முழுவதும் மிக முக்கிய பிரச்சனை என்ற பேச்சு, 30 ஆண்டுகளுக்கு மேல் தொடர்ந்து இருந்து வந்து கொண்டு இருப்பதைப்பற்றி நாம் அறிவோம். பன்னாட்டு மாநாடுகள் ஒவ்வொரு ஆண்டும் ஒரு குறிப்பிட்ட நாட்டில் நடப்பது, வழக்கம் ஆன ஒன்று ஆகிவிட்டது. UNEP என்ற ஐக்கிய சுற்றுசூழல் திட்ட அமைப்பு, பல்வேறு இயற்கை,சுற்று சூழல் விஞ்ஞானிகளின் கருத்துக்களை அறிந்து அதற்கு ஏற்ப உலக நாடுகளுக்கு பருவ கால மாற்றம், புவி வெப்ப மயமாதல், உயிரின பல்வகைமை அழிவு பற்றி எச்சரிக் கைகள், மேற்கொள்ள வேண்டிய உடன் நடவடிக்கைகள் பற்றியும் அறிவுறித்திவருகிறது.

குறிப்பாக உயிரின பல்வகைமை(BIO DIVERSITY) அழிவு குறைத்தல், அவற்றை பாதுகாக்க “குழுக்கள் மாநாடு “ CONFERENCE OF PARTIES கடந்த முறை COP-16 கொலம்பியா நாட்டில் நடை பெற்றது. இந்த மாநாடு பல்வேறு தீர்மானங்கள் உருவாக்கி நிறைவு பெற்றது. எதிர்வரும் 2026 ஆம் ஆண்டிலும், உலகின் அரிய உயிரின, தாவர வளங்களை பாதுகாக்க மீண்டும் COP-17 பன்னாட்டு குழுக்கள் மாநாடு மேற்கு ஆசிய நாடுகளில் ஒன்றான அர்மெனியா நாட்டில் நடைபெற உள்ளது. மலைகளால் சூழ்ந்த 29743 sq கிம் பரப்புடைய இந்த நாட்டின் தலை நகர் எரேவேன் என்ற ஊரில் மாநாடு நடைபெற இருக்கிறது.

இந்த அழகிய நாட்டின் எல்லையில் துருக்கி, அஜீர்பைசான், இரான் ஆகிய நாடுகள் உள்ளன.2026 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் துவக்கப்படும் இந்த மாநாடு மூலமாக, உலக உயிரின வேற்றுமை அமைப்பு பாதுகாக்க, உயிரினங்களின் வாழ்விடங்களையும் பாதுகாக்கவும் ஏற்பாடு செய்யப்படும் என நம்பப்படுகிறது. மேலும் உயிரின வேற்றுமை பாதிக்கும் காரணிகளை அறிந்து சீர் செய்யும் நடவடிக்கை மேற்கொள்ள திட்டமிடப்படும். ஒவ்வொரு இயற்கை உயிரினமும், சமீப கால உலகத்தின் அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக, மிக பெரிய அளவு முதல், நுண்ணிய அளவு வரை புவி முழுவதும் பாதிக்கப்படும் நிலையில்
உள்ளன.

இந்நிலையில் உள்ளூர் இனங்கள்பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு தேவையாகும்.ஏனெனில் அந்த உள்ளூர் விலங்கு, தாவர வகைகள், சுற்றுசூழலில் நிகழ்ந்து கொண்டுள்ள மாற்றங்களை உணர்ந்து வெளிப்படுத்தக்கூடியவை ஆகும். சிறு பூச்சிகள் முதல் பெரும் விலங்கு, தாவர வகைகள் அனைத்தும் இத்தகைய பண்புகளை கொண்டு வாழ்ந்து வருகின்ற நிலை நாம் அறியலாம். COP-17 மாநாட்டின் சின்னமாக அர்மெனியா நாட்டின் உள்ளூர் சிற்றின மான நீல வண்ணத்து பூச்சி என்ற ப்ளூ பட்டர்பிளை தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளது.இந்த வண்ணத்துப்பூச்சி இனம், ஒவ்வொரு இயற்கை சுற்றுசூழல் அமைப்பின் நிலையினை, தெளிவாக உணர்த்தக்கூடிய ”உயிர் காட்டிகள் “(BIO INDICATORS) ஆகும். Polyommatus eriwanensis என்ற விலங்கியல் பெயர் கொண்ட இந்த வண்ணத்து பூச்சி “லைக்கனிட” குடும்பத்தினை சேர்ந்தது. 1960 ஆம் ஆண்டு முதலில் இதனை வால்டர் போர்ஸ்ட்ர் என்ற விஞ்ஞானி கண்டு பிடித்தார்.

இவை ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாத மத்தியில் வெளியில் பறக்க துவங்கும். எரிவான் அனோமாலஸ் ப்ளூ, என்றும் அழைக்கப்படும் இந்த பூச்சிகள், கால்சிய மண் நிறைந்த சூழல் கொண்ட புலவெளி பகுதிகளில், மலைகளில் 1200 முதல் 2200 மீட்டர் உயரத்தில் வசிக்கின்றன. இவற்றை கவர்ந்து ஏற்றுக்கொண்டுள்ள தாவர வகைகள் இதுவரை இனம் கண்டறியப்படவில்லை. ஆனால், அர்மெனிய தேசிய அளவில் நீல வண்ணத்து பூச்சிகள் அழி நிலை இனம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அர்மெனியா COP-17 மாநாட்டில் ஐரோப்பிய யூனியன் மற்றும் அர்மெனியா சுற்றுசூழல் அமைச்சகம், ஒருங்கிணைந்து தேசிய, பன்னாட்டு சுற்றுசூழல் பிரச்சினைகள் ஆய்வு செய்ய முடிவு செய்துள்ளனர்.

UNEP நிலைத்த நீடித்த வளர்ச்சிக்கு உரிய பதினெழு குறிக்கோள்களை அனைத்து நாடுகளும்,ஒன்றாக கூடி நடவடிக்கை எடுக்க, தயாராக இருக்கின்றனர். எனினும் வளர்ச்சி, காரணமாக இயற்கை சுற்றுசூழல் பாதுகாப்பு என்பது நெடுங்காலமாக கேள்விக்குறியாக இருப்பதும் உண்மை. இயற்கை, சுகாதாரம், உணவு முறை, பொருளாதார தனிமனித சுய சார்பு நிலை போன்ற குறிக்கோள்களை அடைய உள்ளூர் சமூக செயல் திட்டங்கள் மூலம் தேசிய அளவிலும், உலக அளவிலும் கொள்கை உருவாக்க தீவிர முயற்சியுடன் முனைந்து வருகின்றனர்.

உலகின், நாடுகளில் ஆங்காங்கே உள்ள சிறு கிராம பகுதிகளில் அமைந்துள்ள உள்ளூர் உயிரின, தாவர வளத்தன்மை, பற்றிய உண்மைகளை அங்கு வசிக்கும் பொது மக்கள், மற்றும் கல்வியாளர்கள் அறிந்து வைத்திருப்பது அவசியம் ஆகும். அவற்றை நாம் பாதுகாக்க உரிய முறைகள், உள்ளூர் உயிரின வேற்றுமை பதிவேடு உருவாக்குவதன் மூலம் ஏற்பாடு செய்ய இயலும்.

அர்மெனியா நாட்டின் எரிவான் நகரத்தில் வசிக்கும் “ப்ளூ பட்டர்பிளை “ மூலம் இத்தகைய உள்ளூர் இயற்கை உயிரின கோட்பாடு வெளிப்படுத்தப்படுகிறது. மிக பெரும் காடுகள் அங்கு வாழும் பெரும் விலங்குகள், அவற்றின் ஆய்வு பாதுகாப்பு பற்றி திட்டமிடுதல் ஒரு புறம் இருப்பது தேவை என்றாலும், நுண்ணுயிர்கள், சிறு பூச்சிகள், பறவைகள் அவற்றின் அரிய தன்மை பற்றி உலகம் முழுவதும் அறியவேண்டும். ஏனென்றால் நம் பார்வையில் தவற விடுகின்ற அத்தகைய உள்ளூர் உயிரினங்கள், சுற்றுசூழல் அமைப்புகளில், உணவு சங்கிலியாக, உணவு வலையாக இணைந்து ஆற்றும் பங்கு அளப்பறியது. சாலை அமைத்தல், மாநகர, நகர மயமாக்கம், மனித குடியிருப்புகள், தொழிற் சாலை அமைப்புகள் போன்ற காரணிகளால், உள்ளூர் உயிரின வளம் அமைதியாக அழிவது அனைவராலும் அறியப்படவில்லை.

COP-16 நடந்த கொலம்பிய நாட்டில் கூட “மினிடியா மலர்” அந்த மாநாட்டின் சின்னமாக உருவாக்கப்பட்டது. மேலும், உயிரின பாதுகாப்பு விழிப்புணர்வு என்ற நிலை மட்டுமே இல்லாமல், உள்ளூர் உயிரின காப்பு என்பது கணக்கெடுப்பு பொறுப்புணர்வு நிலைக்கு செல்ல உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.

ப்ளூ பட்டர்பிளை என்பது ஒரு சிறிய நீல வண்ணத்து பூச்சி என்றாலும் அந்த சின்னம் உலகம் முழுவதும் COP-17 மாநாடு சின்னம் என்ற நிலையினை தாண்டி அவற்றை போன்ற சிறு உள்ளூர் உயிரின, தாவர பாதுகாப்பில் அரசுகள் அக்கறை எடுத்துக்கொள்ள ஒரு வழி எனவும் அறிவிக்க ஏதுவாக இருக்கிறது. உயிரின பாதுகாப்பு என்பதை ஏதோ வெற்று ஆர்வம் ஆக எண்ணாமல் அவை இல்லையெனில், மனித வாழ்க்கை பூமியில் இல்லை என்பதை அனைவரும் உணரவேண்டும். அதற்குரிய நடவடிக்கைகள் தொடர , ஒவ்வொரு மனிதனும் அவரவர் நிலையில் இயன்றதை மேற்கொள்ள முயற்சி செய்யவேண்டும்.

******************************************************************************

புக்டே இணையதள எழுத்தாளர்கள் மற்றும் வாசகர்கள் சந்திப்பு நிகழ்வு

2026 ஆம் ஆண்டில் ஜனவரி 8 முதல் 21 வரை  49வது சென்னை புத்தகக்காட்சி நடைபெற உள்ளது.  ஆண்டுதோறும் புத்தக காட்சியில் சிறந்த நூல் அறிமுகம் எழுதுபவர்களுக்கான போட்டி, கதை சொல்லல் போட்டி, சிறுகதை போட்டி என நடத்தி சிறந்த படைப்புகளுக்கு தொடர்ந்து பரிசுகளை வழங்கி வருகிறது பாரதி புத்தகாலயத்தின் புக் டே இணைய இதழ். இந்த ஆண்டும்  ஜனவரி 8 முதல் 18 வரை சென்னை புத்தக கண்காட்சியின் ஏதாவது ஒரு அரங்கிற்கு நேரடியாக வந்து தங்களுக்குப் பிடித்த ஏதாவது ஒரு புத்தகத்தை எடுத்து அதை நூல் அறிமுக கட்டுரையாக bookday24@gmail.com என்ற மெயிலில் அனுப்பி வைக்கவும். அதில் தேர்வாகும் சிறந்த அறிமுக கட்டுரைக்கு ரூ.10,000 மதிப்பிலான பரிசும்,  புத்தக கண்காட்சி அரங்கில் ஜனவரி 20 அன்று மாலை 5.30 மணியளவில் நடக்கும் புக்டே இணையதள எழுத்தாளர்கள் மற்றும் வாசகர்கள் சந்திப்பு நிகழ்வில் பரிசும் வழங்கப்படும்.  இந்நிகழ்வில் திரைப்பட இயக்குனர், கவிஞர் சீனு ராமசாமி, எழுத்தாளர்கள் இந்திரன், ஆயிஷா நடராசன், உமர் பாரூக் மற்றும் அரசியல் செயற்பாட்டாளர் தோழர் ஜி. ராமகிருஷ்ணன், அரசியல் செயற்பாட்டாளர் தோழர் ஜி.செல்வா ஆகியோர் பங்கேற்க இருக்கின்றனர். இதில் பங்கேற்க விரும்பும் தோழர்கள் அனைவரும் தங்கள் விருப்பத்தை  https://forms.gle/ZqZv4x8HCrwkJKs56 இந்த கூகுள் பார்ம்-ல் நிரப்பி தெரிவித்தால் நன்றாக இருக்கும்.

கூகுள் பார்ம்: https://forms.gle/ZqZv4x8HCrwkJKs56

தோழமையுடன்
புக் டே இணையதளம்
பாரதி புத்தகாலயம்

******************************************************************************

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1

Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *