பொக்கை (கள்) கவிதை – சாந்தி சரவணன்

பொக்கை (கள்) கவிதை – சாந்தி சரவணன்




அலாரம் அடித்தது போல்
ஆதவன் உதயமாகிவிடுகிறான்
யுகங்களாய் நகர்கின்றன
நொடிகள்!

எப்படிக் கழிப்பது இந்த
பகற்பொழுதை
என்பதே அவர்களின்
அச்சம்!

இரவுப் பொழுதில்
வராத தூக்கத்தை
ஏமாற்றி
போர்வைக்குள்
கண் முடி ஒளிந்து கொள்கிறார்கள்!

ஆனால்
பகலில்
பேச்சுத் துணையின்றி
பெற்ற மனம் பரிதவிக்கிறது!

கொஞ்சி யானை விளையாட்டு விளையாட
பேரன் பேத்தி அருகில் இல்லை!

சாப்பிடிங்களா என கேட்க
மகனும் மகளும் பக்கத்தில் இல்லை!

உறவுகளின் விழாவில்
கலந்துக்கொண்டு
உறவாட வழியில்லை!

பொக்கைகள் இரண்டும்
அண்ணாந்து விட்டத்தை பார்த்தபடி
பல மணி நேரம்
ஊடகங்கள்
பார்த்தபடி
சில நேரம்
நினைவலைகளில்
வாழந்தபடி
நடைப்பிணமாக
வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்
சிலர்
முதியோர் இல்லங்களிலும்
சிலர்
தனித்துவிடப்பட்டத் தாழ்வாரங்களிலும்!

– திருமதி. சாந்தி சரவணன்

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 



Show 3 Comments

3 Comments

  1. நெய்வேலி பாரதிக்குமார்

    முதுமையின் தனிமை நிலையை உருக்கமாக உணர்த்தும் நேர்த்தியான கவிதை.. அழகான கவித்துவமான நடை.. பொக்கைகள் என்கிற தலைப்பு அர்த்தமுள்ளது நிரப்பப்படாமல் இருக்கும் மனதின் ஆசைகள் நிறைவுறாத வாழ்க்கை இப்படி எல்லாவற்றையும் அர்த்தப்படுத்துகிறது… வாழ்த்துக்கள்.. நெய்வேலி பாரதிக்குமார்

  2. Jayabal

    அன்பும் ஆதரவான பேச்சு துணையும் இன்றி வாடும் அவர்களின் வலி கொடுமையானது. காலமே மாபெரும் வேதனைமிக்க வழியாகி நீளும் கொடுமை.

  3. கவிதை நல்லாருக்கு.வயதானவர்களின் வலியை பதிவு செய்தது சிறப்பு.டைட்டில் பொக்கை னுதான்வைக்கனுமா?இன்னும் சிறப்பா”வெச்சிருக்கலாம்.யானை ரெண்டு”சுழி ன தானே?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *