மொழிபெயர்ப்புக் கவிதை: நான் ஒளிக்காகக் காத்திருக்கிறேன் – ஹிந்தியில் போதி ஸத்வ | தமிழில் வசந்ததீபன்நான் ஒளிக்காகக் காத்திருக்கிறேன்
—————————————————————–

அமாவாசையின் இரவில்
வெளியே திறந்த வெளியில்
உட்கார்ந்து கொண்டிருக்கிறேன்
நிலவிற்காக காத்திருந்தபடி
தெரியவில்லை வைகாசியா அல்லது ஆனியா
ஒரு பஹர் , இரண்டு பஹர் , மூன்றாவது பஹரிலிருந்து எடுத்து நான்காவது பஹர் வரை
நிலா உதிக்கவில்லை , நிற்க மலர்ந்து கொண்டிருக்கிறது அமாவாசையின் கடக்க முடியாத நிழல்.

எவ்வளவு மேகத்தின் துண்டுகள் வானத்தை மேலும் மூடிச் சென்றன
எவ்வளவு இனிய ஒலி செய்கின்றன இரவு – பறவை ஆகாயத்தை
மற்றும் ரீங்காரம் செய்து போயின
எவ்வளவு நட்சத்திரங்கள் உதிர்ந்து போய் சாம்பலாகிவிட்டன
எத்தனை – எத்தனை

துக்கமடைகிறது மனம்
எழுதப்படாமல் அல்லது அனுப்படாமல் கடிதங்களுக்காகக் காத்திருப்பவன் எந்த மாதிரி அறிவுள்ளவனாக இருக்கிறான் ?
பிறக்காத குழந்தைக்கு பெயர் வைப்பது எந்த மாதிரியான புத்திசாலித்தனமாக இருக்கிறது ?
நிறைவேற்றப்படாத வாக்குறுதியைப்
பெறச் செல்வது எந்த மாதிரி விசுவாசமாய் இருக்கிறது ?
பாடாத பாடலுக்கு நாட்டிய முத்திரையில் வருவது கொஞ்சமும் சரியானதல்ல.

நிலாவோ நிலா…நட்சத்திரங்கள் வரை ஒளிந்து இருந்தது
ஆகாய சாம்பலின் பயங்கரமான விசால வீடு மட்டுமே இருந்தது
எந்த பிரகாசமும் இல்லாமல் மின்னுவதோடு மின்னலின் பிரகாசமில்லாததோடு மேகங்கள் அதிகமாக இருக்கின்றென சிறிது நேரம் சிக்கலாக இருக்க ஆரம்பித்தது
மேகமூட்டமாக என்று நினைத்தேன் அவற்றிற்க்குப் பின்னால் அழகான – களங்கமான நிலா இருக்க முடியும் மறைந்து
அவற்றின் பின்னால் தீபங்களுக்குச் சமமான விண்மீன்கள் இருக்கலாம் ஆனால் மேகங்களின் ஏதாவதொரு கூட்டம்  ஏதாவதொரு அடைக்கலம் புகும் இடமாகவோ இல்லை அவை கூடாரம் போடவில்லை ஆகாயத்தில் அவை பக்கிரி போல அலைந்து திரிகின்றன மிதிலாவிலிருந்து மியான்மார் வரை அவை நல்லது எதையோ ஏன் மறைக்கத் தொடங்கின நீர் நிரம்பிய ரவிக்கைக்குள் அவையோ ஒரு ரொட்டி , ஒரு கையளவு மாவு , ஒரு தோலா உப்பு நிறைய

தேடுகின்றனவோ இந்த வீடு அந்த வீடு
இந்த கிராமம் அந்த நகரம்
நான் அவற்றின் மீது அவற்றிற்கு எதிரான வீண்பழியையும் வைக்க முடியவில்லை
நான் ஒரு முழுமையான இரவு ஒளிக்கான காத்திருப்பில் கழித்தேன்
நான் முழுவயது ஒளிக்கான வழியை பார்த்தபடி கழிப்பேன்.
ஒளிக்காக பல -பல ஜன்மம் வரை நிற்க முடியும்
அந்த நம்பிக்கையிலிருந்து நிரம்பிய எதிர்பார்த்தல் செய்ய முடியாது
அவற்றிலிருந்தோ இல்லை நான்.
அந்த அமாவாசையின் இரவு
ஓ..சாம்பல் , ஓ…இருள் , ஓ…திசையின் கோடியை மூடியியுள்ள மேகத்துண்டுகள்.
நான் தனியாக ஆயிரம் இரவுகள் வரை
மற்றும் அடுத்த பல -.பல மழைக்காலங்கள் வரை இங்கே வாழ்வேன்
மற்றும் அடிக்கடி சொல்வேன்
எந்த நம்பிக்கையிலிருந்து நிரம்பிய எதிர்பார்ப்பு செய்ய முடியாதென
அவற்றிலிருந்தோ இல்லை நான்.
நல்லது தெரியாமல் செல்கிறது ஆவணி அல்லது புரட்டாசி ஐப்பசி அல்லது கார்த்திகை
ஆடியின் அமாவாசை மார்கழியின் கறுப்ப சதுர்த்தசி என
நான் ஒளிக்காக காத்திருப்பேன்.

பஹர் : மூன்று மணி நேரம்போதி ஸத்வ

பிறந்த இடம் : பிக்காரிராம்புர் கிராமம் , பதோஹீ , உத்தரப் பிரதேசம்

பிறப்பு வருடம் :  11, டிசம்பர் 1968

நூல்கள் :

(1) ஸிர்ப் கவி நஹீன் 1991)
(2) ஹம் ஜோ நதியாங் கா ஸங்கம் ஹை (2000)
(3) துக்க் தந்த்ர (2004)
(4) கதம் நஹீன் ஹோதீ பாத் (2010)
(5) குரு மஹிமா பர் லக்பக் 400 ஸ்லோகங்களின் தொகுப்பு ” குரவை நமஹ” (2002)
(6) ரச்னா சமய் கா 11 சம்சோர் , அங்க் (2012)

விருது :

(1) பாரத்பூஷன் ஸம்மான் (1999)
(2) ஸம்ஸ்க்ருதி ஸம்மான் (2000)
(3) ஹேமந்த் ஸ்ம்ருதி ஸம்மான் (2001)
(4) பிராக் ஸம்மான் (2013)
(5) சம்சோர் ஸம்மான் (2015)

சினிமாவில் எழுதியது :

( 1)மஹாரதி கர்ண(2002)
(2) க்ராந்தி (2003)
(3) ஆம்ரபாலி (2002)
(4) ஜோதா அக்பர் (2013 – 14)
(5) தேவோங் கே தேவ் மஹா தேவ் (2011-14)
(6) மஹாபலி ஹனுமான் (2015-16)
(7)ஸமேத் அநேக் டிவிதாராவாஹ் கோங் அவுர் சிகர் (2005)
(8) அவுர் தர்ம (2006)