புக் டே சுழல் கவியரங்கம் (Book Day Suzhal Kaviyarangam): மகேஷ் எழுதிய இருபது தமிழ் புதிய கவிதைகள் | சிறந்த கவிதைகள் தொகுப்பு PDF | - www.bookday.in

புக் டே சுழல் கவியரங்கம்: மகேஷ் கவிதைகள்

1) நீ குடித்த
தேநீர் கோப்பையில்
மிச்சம் இருப்பது
என் உதடுகளின் தடயமே.

********

2) நினைவின் சாரல்கள்
மனதை ஈரமாக்கியது
அவள் இல்லாதது
மனதை பாரமாக்கியது.

********

3) கடலும் கட்டு மரமும்
ஆற தழுவி கொள்ளும்
கலங்கரை விளக்கோ
அவ்வப்போது முத்தமிட்டு கொள்ளும்.

********

4) பூக்களை பரிகாதீர்கள்
புத்தக நூல் வெளியீட்டு விழா
எத்தனை பூக்கள் பறித்தார்களோ
ஆளுயற மாலை.

**********

5) அவள் முத்தங்களை
அளவில்லாமல் கொடுக்கிறாள்
நான் கடற்கரையில்
தனியே நின்றபோது.

*********

6) சற்றே நிறுத்து
அந்த மின் விசிறியை
என் கடந்த கால. நினைவுகளை
கலைத்து செல்கிறது.

*********

7) நிலவின் குளிர்ச்சியில்
கருவற்ற பனி துளி
சூரியனின் வெப்பத்தால்
பிரசவிக்கும் நீர்.

*********

8) பாதம் நனைத்து
போகிறது மழை
தலை நனையாமல்
குடை பிடித்த போது.

*********

9) யாசகம் கேட்டு
கடவுளை நாடி வந்தேன்
என்னிடம் யாசகம் கேட்டு
என்னை கடவுளாகினான்.

*********

10) அருகருகே வசிக்கிறோம்
ஒருவரும் பேசிகொள்வதில் லை
மாறாக அனுதினமும்
பேசிக்கொள்கிறது சாதி.

*********

11) நான் மௌனமாக
இருக்கும் போது
ஞானி ஆகிறேன்
அவள் என்னை ஆட்கொள்ளும் போது
நான் நீ ஆகிறேன்.

**********
12) கந்து வட்டிக்காரன்
சுருட்டு கந்தும் தீ
வந்து வெந்து விழும்
சொல் சுடும்.

*********
13) எனக்கு பிடித்த எதுவுமே
அவளுக்கு பிடிக்காது
ஆதலால் அவளை
எனக்கு பிடிக்காது.

*********
15) காம தீயில்
நான் சருகு
ஓம தீயில்
அவள் எண்ணெய்.

**********
16) இரவின் இருளை
கடிந்து கொண்டான்
பகலின் வெளிச்சம்
அறியாத பார்வை யற்றவன்.

*******
17) பூனை குறுக்கே வந்தது
பூக்காரி போகயிலே
வீடு திரும்பினால்
பூக்கள் அனைத்தும் விற்று.

********
18) எல்லோரும் என்னை
படம் பிடித்து கொள்கிறார்கள்
நான் என்ன அத்தனை
அழகா கியூ ர் கோடு.

********
19) பிறந்தநாள் கேக்கில்
அவனது புகைப்படம்
நிஜங்களை கொண்டு
நிழல்களை வெட்டிவிடுங்கள்.

*********
20) மயாணத்தில் பேசியது மனம்
கொட்டி தீர்த்து விடு மனமே
உன் மனமெனும் மயாணத்தில்
புதைத்து விடாதே.

*********

📚 எழுதியவர்:

மகேஷ்

******************************************************************************

புக்டே இணையதள எழுத்தாளர்கள் மற்றும் வாசகர்கள் சந்திப்பு நிகழ்வு

2026 ஆம் ஆண்டில் ஜனவரி 8 முதல் 21 வரை  49வது சென்னை புத்தகக்காட்சி நடைபெற உள்ளது.  ஆண்டுதோறும் புத்தக காட்சியில் சிறந்த நூல் அறிமுகம் எழுதுபவர்களுக்கான போட்டி, கதை சொல்லல் போட்டி, சிறுகதை போட்டி என நடத்தி சிறந்த படைப்புகளுக்கு தொடர்ந்து பரிசுகளை வழங்கி வருகிறது பாரதி புத்தகாலயத்தின் புக் டே இணைய இதழ். இந்த ஆண்டும் சென்னை புத்தக காட்சியை  நேரடியாக வந்து பார்வையிட்டு அதில் தங்களுக்கு பிடித்த புத்தகம் குறித்த நூல் அறிமுக கட்டுரையை ஜனவரி 8 முதல் ஜனவரி 18 வரை www.bookday24@gmail.com என்ற மெயிலில் அனுப்பி வைக்கவும். அதில் தேர்வாகும் சிறந்த அறிமுக கட்டுரைக்கு ரூ.10,000 மதிப்பிலான பரிசும்,  புத்தக்காட்சி அரங்கில் ஜனவரி 20 அன்று நடக்கும் புக்டே இணையதள எழுத்தாளர்கள் மற்றும் வாசகர்கள் சந்திப்பு நிகழ்வில் பரிசும் வழங்கப்படும்.  இந்நிகழ்வில் திரைப்பட இயக்குனர், கவிஞர் சீனு ராமசாமி, எழுத்தாளர்கள் இந்திரன், ஆயிஷா நடராசன் மற்றும் அரசியல் செயற்பாட்டாளர் தோழர் ஜி. ராமகிருஷ்ணன் ஆகியோர் பங்கேற்க இருக்கின்றனர். இதில் பங்கேற்க விரும்பும் தோழர்கள் அனைவரும் தங்கள் விருப்பத்தை  https://forms.gle/ZqZv4x8HCrwkJKs56 இந்த கூகுள் பார்ம்-ல் நிரப்பி தெரிவித்தால் நன்றாக இருக்கும்.

கூகுள் பார்ம்: https://forms.gle/ZqZv4x8HCrwkJKs56

தோழமையுடன்
புக் டே இணையதளம்
பாரதி புத்தகாலயம்

******************************************************************************

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1

Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *