முனைவர் இரா. மஞ்சுளாவின் குறுங்கவிதை
நாகராஜன் கோவில்களில் என்றும்
அருளே ஊற்றெடுக்கிறது
அள்ளிச் செல்ல கவிபக்தர்கள் நாம்
மீண்டும் கொல்லப்பட்டார் தேசத்தந்தை
நூறுநாள் வேலை திட்டத்திற்கு
காந்தியின் பெயர் நீக்கம்
பிரியாணி சலித்துப்போன அல்லா
தயிர் சாதத்திற்கு மாறிக்கொண்டார்
பாவம் முருகன்
ஆட்டுக்கால் பாயாவை சுவிக்கியில்
ஆர்டர் செய்யும் முயற்சியில்…
விடிந்தும் விடியாமலும்
ஆட்டோக்களில் பயணிக்கும் ரோஜாமொட்டுகள்
பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள்
தூய்மைக்கு உத்தரவாதம்
பாலியல் குற்றவாளிகளுக்கு
பாசிச சலவை இயந்திரம்
கரு உருக்கும் ஊர்
கல்லறையாகிப் போனது
தற்குறித் தலைவன் வருகை
தொலைந்து போகாமல் இருக்க
கைபிடிக்கிறேன்
கை பிடித்ததாலேயே தொலைந்து போகிறேன்
கிழக்கு வெளுத்துவிட்டது
இன்னும் விடியவில்லை
சாயம் வெளுக்காத காவிக்கொடி
கருவறைக்குள் பூசனை
பக்தர்களுக்குத் தரிசனம் இல்லை
போலி சாமியர்கள்
வாக்காளர்களை உறுதி செய்தது
பழைய காலம்
வாக்களார்களை இறுதி செய்கிறது
நவீன தேர்தல் ஆணையம்
பாட்டாளி மக்களின்
முதலீடு இல்லாக் காப்பீடு
பொதுவுடைமைச் சித்தாந்தம்
அரைநாற்றாண்டுக் கருவாசம்
தாய்மை சுமந்த சிறைக்கம்பிகள்
பேரறிவாளன் பிரசவம்
துரோணர் உயிர்த்தெழுகிறார்
இந்த நூற்றாண்டுலும்
புதிய கல்விக் கொள்கை
📚 எழுதியவர்:
******************************************************************************
புக்டே இணையதள எழுத்தாளர்கள் மற்றும் வாசகர்கள் சந்திப்பு நிகழ்வு
2026 ஆம் ஆண்டில் ஜனவரி 8 முதல் 21 வரை 49வது சென்னை புத்தகக்காட்சி நடைபெற உள்ளது. ஆண்டுதோறும் புத்தக காட்சியில் சிறந்த நூல் அறிமுகம் எழுதுபவர்களுக்கான போட்டி, கதை சொல்லல் போட்டி, சிறுகதை போட்டி என நடத்தி சிறந்த படைப்புகளுக்கு தொடர்ந்து பரிசுகளை வழங்கி வருகிறது பாரதி புத்தகாலயத்தின் புக் டே இணைய இதழ். இந்த ஆண்டும் ஜனவரி 8 முதல் 18 வரை சென்னை புத்தக கண்காட்சியின் ஏதாவது ஒரு அரங்கிற்கு நேரடியாக வந்து தங்களுக்குப் பிடித்த ஏதாவது ஒரு புத்தகத்தை எடுத்து அதை நூல் அறிமுக கட்டுரையாக bookday24@gmail.com என்ற மெயிலில் அனுப்பி வைக்கவும். அதில் தேர்வாகும் சிறந்த அறிமுக கட்டுரைக்கு ரூ.10,000 மதிப்பிலான பரிசும், புத்தக கண்காட்சி அரங்கில் ஜனவரி 20 அன்று மாலை 5.30 மணியளவில் நடக்கும் புக்டே இணையதள எழுத்தாளர்கள் மற்றும் வாசகர்கள் சந்திப்பு நிகழ்வில் பரிசும் வழங்கப்படும். இந்நிகழ்வில் திரைப்பட இயக்குனர், கவிஞர் சீனு ராமசாமி, எழுத்தாளர்கள் இந்திரன், ஆயிஷா நடராசன், உமர் பாரூக் மற்றும் அரசியல் செயற்பாட்டாளர் தோழர் ஜி. ராமகிருஷ்ணன், அரசியல் செயற்பாட்டாளர் தோழர் ஜி.செல்வா ஆகியோர் பங்கேற்க இருக்கின்றனர். இதில் பங்கேற்க விரும்பும் தோழர்கள் அனைவரும் தங்கள் விருப்பத்தை https://forms.gle/ZqZv4x8HCrwkJKs56 இந்த கூகுள் பார்ம்-ல் நிரப்பி தெரிவித்தால் நன்றாக இருக்கும்.
கூகுள் பார்ம்: https://forms.gle/ZqZv4x8HCrwkJKs56
தோழமையுடன்
புக் டே இணையதளம்
பாரதி புத்தகாலயம்
******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join Facebook: https://www.facebook.com/Book Day – Bharathi Puthakalayam
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

