நூல் : வகுப்பறை மொழி
ஆசிரியர் : மாலினி சீதா
விலை : ரூ.₹80/-
வெளியீடு : பாரதி புத்தகாலயம்
தொடர்புக்கு : 044 – 24332424 /24330024/
விற்பனை : 24332924
புத்தகம் வாங்க : www.thamizhbooks.com
bharathiputhakalayam@gmail.com
வகுப்பறை மனிதநேயம் வளருமிடம், ஆணவத்தை அழிக்குமிடம், ஆளுமையை வளர்க்கும் இடம், தன்னம்பிக்கையே புகுத்துமிடம். எங்கு ஆசிரியர்களும், மாணவர்களும் கற்றுக் கொள்கிறார்களோ அதுவே வகுப்பறை.
வகுப்பறை மொழி என்பது வகுப்பறையில் நிகழ்வது மட்டுமல்ல, மாணவரும் ஆசிரியரும் கலந்துரையாடும் இடமெல்லாம் வகுப்பறை தான்.
புத்தகத்தின் ஆசிரியர் மாலினி அவர்கள் குறிப்பிட்டுள்ள ஒரு புதுமையான விஷயம். வகுப்பறை மொழி என்பது புத்தகமாகவோ, கரும்பலகையாகவோ இல்லாமல் மாணவர்கள் விரும்பும் வகையில் விளையாட்டு மொழியாகவும், நாடக மொழியாகவும் இருக்க வேண்டும், அப்போது தான் மாணவர்களுக்கு ஏற்படும் மன அழுத்தத்தை குறைத்து அவர்கள் விரும்பும் முறையில் கற்பிக்க எளிதாகும்.
குழந்தையின் முதல் கற்றல் தாயிடம் தான் தொடங்குகிறது. குழந்தையின் இரண்டாவது கற்றல் வகுப்பறையில் ஆசிரியர்களிடத்தில் தொடங்குகிறது. தாயிடம் கற்றுக் கொள்ளும் குழந்தையும், ஆசிரியரிடம் கற்றுக் கொள்ளும் குழந்தையும் சமுதாயத்தில் நல்ல முறையில் வளரும் என ஆசிரியர் மாலினி குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அன்பாசிரியராக திகழ சில வழிமுறைகளை பதிவு செய்துள்ளார். வகுப்பறையில் மகிழ்ச்சிகரமான கற்றல் கற்பித்தல் நிகழ்வுகளை நடத்த வேண்டும்.
நன்றாக படிக்கும் மாணவன் படிக்காத மாணவன் என வகைப்படுத்தாமல் இருக்க வேண்டும்.
குழந்தைகள் குழுவாகவும், ஆர்வத்தோடும் செயல்பட கூடிய வகையில் கற்றல் கற்பித்தல் வடிவமைக்க வேண்டும்.
குழந்தைகளுக்கான அங்கீகாரத்தை அவ்வப்போது தோள்தட்டி உற்சாகப்படுத்த வேண்டும்
மாணவர்கள் சவால்களை எதிர்கொள்ளவும், எதிர்கொள்ளும் போது ஏற்படும் தோல்விகளை ஏற்றுக் கொள்ளவும் பக்குவப்படுத்த வேண்டும்.
மதிப்பெண் சார்ந்த ஏற்றத்தாழ்வுகள் பார்க்காமல் அனைத்து மாணவர்களையும் சரிசமமாக பார்க்க வேண்டும்.
மாணவர்கள் படித்த புத்தகம் பற்றியும், அவர்கள் பார்த்த திரைப்படங்கள் குறித்தும் கலந்துரையாட வேண்டும்.
மாணவர்களின் தனிப்பட்ட திறமைகளை மற்ற ஆசிரியர்களிடம் அடையாளப்படுத்தி காண்பிக்க வேண்டும்.
ஆசிரியர்களின் அதி உன்னதமான ஆயுதம் சிவப்பு பேனா.
பெண் என்பவளால் எப்படி ஆக்கவும், அழிக்கவும் முடியுமோ அதே போல ஆசிரியரின் சிவப்பு பேனா மாணவர்களை உருவாக்கவும், அளிக்கவும் செய்துள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
“கற்கத் தொடங்குபவன் மாணவன்,
கற்றுக் கொண்டே இருப்பவர் ஆசிரியர்”
எப்போது மாணவர்களுக்கு கற்றுக் கொடுக்க ஆரம்பித்து விட்டோமோ அன்று முதல் ஆசிரியர் கற்கத் தொடங்க வேண்டும். அதற்கு முன்பு மாணவர்கள் எப்படிப்பட்ட ஆசிரியர்களை எதிர்பார்க்கிறார்கள் என்பதையும், அவர்கள் விரும்பும் கற்றல் முறையையும் தெரிந்து கொள்ள முயற்சிக்க வேண்டும் என ஆசிரியர்களுக்கு அறிவுருத்துகிறார்.
ஒரு ஆசிரியர் நல்ல ஆசிரியராக மட்டும் இல்லாமல், ஒரு நல்ல நண்பனாகவும் இருந்து மாணவர்களின் நிறைகளை பொதுவாகவும், குறைகளை தனியாகவும் எடுத்துக் கூற வேண்டும் என வலியுறுத்துகிறார்.
மாணவர்களின் கற்றல் திறனை அளவீடு செய்வது மட்டும் ஆசிரியர்களின் பணி அல்ல அதனையும் தாண்டி மாணவர்களின் குடும்பம் சார்ந்த சூழல். அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனை, அவர்களை நோக்கி எதிர்காலத்தில் வரக்கூடிய பிரச்சனை என அனைத்தையும் தெரிந்து வைத்துக் கொண்டு அவர்களுக்கு அறிவுரை புகட்ட வேண்டும் என கூறுகிறார்.
– தி. தாஜ்தீன்
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

