ஆசிரியர் இரா.தட்சணாமூர்த்தி 34 ஆண்டு கால ஆசிரியர் பணியில் ஏற்பட்ட அனுபவத்தின் அடிப்படையில் சிலவற்றை நம்முடன் பகிர்ந்து உள்ளார்….
இவை அனைத்தும் உண்மைக் கதைகள்…!
ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரை பணியாற்றிய காலகட்டத்தில் நடந்த அனுபவத்தை ஏழு தலைப்புகளின் கீழ் விவரித்துள்ளார்….
இன்றைய நிலையில் பள்ளி கல்வி என்பதன் வேர் result ஐ நோக்கியே நகர்கிறது…
அதுவும் 100% result கொடுத்தால் தம் பள்ளியின் பெயர் ஊரெல்லாம் பரவும்…கூட்டம் கூட்டமாக மாணவர் சேர்க்கை நடைபெறும்… இவையே இந்த பள்ளிகளின் முதல் யுக்தி….
100% தேர்ச்சியில் 100 க்கு 100 பார்ப்பதில்லை…35 மார்க் வாங்கி பாஸ் ஆனால் போதும் என்ற நிலைமைக்கு ஆசிரியர்களை அதிகாரிகள் தள்ளிவிடுகிறார்கள்….!
வாங்க கதைக்குள் செல்லுவோம்…!
சுமை : இதில் அலமேலு என்ற மாணவி அழுது கொண்டே இருக்க ஆசிரியர் அதை விசாரிக்க, அவள் தந்தையை இழந்தவள், தாய் அட்டை கம்பனிக்கு போய் வேலை செய்து அவளையும்,அவன் தம்பியையும் வளர்கிறாள்…
கொத்தனார் வேலை பார்க்க வந்தவன் தங்கள் வீட்டிலே தங்கிவிட்டான்…
இன்று அவரை அண்ணா என்று கூப்பிட அதே வாயால் அப்பா என்று அழைப்பதா??
என்ற மன சஞ்சலத்தில் இருக்கிறாள்…
சில காலம் கடந்து அவர்களை ஹாஸ்டலே சேர்த்துட்டு அவள் தாய் அந்த கொத்தனாருடன் வாழ தொடங்கிவிட்டாள்..!
தாழ்த்தப்பட்ட சிறுமி என்று ...
இவ்வளவு சுமையுடன் வரும் பிள்ளைகளின் குடும்ப சூழ்நிலை அறியாமல் அவர்களின் கற்றல் பாதிப்புகளில் உள்ள பிரச்சினையை எப்படி அறிவோம்…!
பரமசிவம் இவன் தந்தை வேறு பெண்ணுடன் பழகி ஊரை விட்டு ஓடிவிட்டான்… இவள் தாய் கல்யாண மண்டபத்தில் எச்சில் இலையை தூக்கி போடும் ஒரு துப்புரவு பணியாளர்… அங்கு கிடைக்கும் மீதியை கொண்டு வந்து தன் மகனின் வயிற்றை நிரப்புவாள்…
இவளுக்கும் ஒரு விபத்து ஏற்பட்டு கால் போய்விட்டது… அவன் படிப்பும் போய் விட்டது…
இன்று அவன் சம்மட்டியால் கம்பி வெட்டுவது, பைண்ட் அடிப்பது,எடுபிடி வேலை பார்க்கிறான்…
இவனின் இந்த அவல நிலைக்கு யார் காரணம்…?
வினோத்: பணத்தை ருசி பார்த்தவன்… நன்றாக படிக்கும் மாணவன் தான்..
படித்து வேலைக்கு போய் தான் சம்பாதிக்க முடியுமா ? நான் இப்பொழுதே சம்பாதிக்கிறேன் என்ற எண்ணத்தை அவனிடம் விதைத்தது யார்?
இப்போ பிளாக்கில் டிக்கெட் விற்கிறான்…
படிங்க டா வாழ்க்கை நல்லாயிருக்கும் என்று சொன்னால் இதே பதில் சொல்லும் பிள்ளைகள் என் பள்ளிலேயே பார்த்து இருக்கிறேன். ..
வண்டிக்காரன் : இருசப்பன் குடும்ப சூழ்நிலை காரணமாக படிப்பை பாதியில் நிறுத்திட்டு வேலைக்கு செல்கிறான்….
எனக்கு இங்கிலிஷ் வரல : 100% தேர்ச்சி கொடுத்தால் பரிசும், பாராட்டும்,மற்றும் சான்றிதழ்களும் கிடைக்கும் என்பதால் சுயநலமாக யோசிக்கும் சிலர் தங்கள் பாடங்களில் பின்தங்கியுள்ள மாணவர்களை திட்டி,அடித்து,முட்டி போட செய்து, கடுஞ்சொற்களைப் பேசி துன்புறுத்துகிறார்கள்…. அவர்களை தாமாகவே பள்ளியை விட்டு ஓட விடுகிறார்கள் ….
இடைநிற்றல் ஆன பிள்ளைகள் சிலர் தவறான வழிக்கும் சென்றுவிடுகிறார்கள்…
இதற்கு யார் காரணம்…?
மாணவன் படிக்காமல் போவதற்கு குடும்பமும் பள்ளியும் காரணம்…
குடும்பத்திற்கு பின்னால் சமூகமும்,பள்ளிக்கு பின்னால் அரசு இருப்பது நாம் அறிந்த உண்மை….!
ஆசிரியர்களாகிய நாம் நினைத்தால் முடியாதது எதுவும் இல்லை…. மாணவச் செல்வங்களின் சூழ்நிலையை அறிந்து அவர்களுக்கு தக்க சமயத்தில் நம்மால் முடிந்த உதவியும் புரிந்து,அரவணைத்து, ஆறுதலாய் பேசி அவர்களின் நிலையை மாற்றுவோம்….
அரசு பள்ளிகளில் இடைநிற்றலை முற்றிலுமாக ஒழிப்போம்….
அவர்களை தேடிச்சென்று அழைப்போம்…
மதிப்பெண்களை விட ஒரு நல்ல மனிதனை உருவாக்குவோம்….!
வருங்கால சமுதாயத்தை சிறப்பானதாய் மாற்றுவோம்….!
ஒன்றிணைவோம் செயல்படுவோம்…!
வாசிப்போம்….! பகிருவோம்….!
,,,,,,,,,,
வகுப்பறைக்கு வெளியே
நூல்: வகுப்பறைக்கு வெளியே
ஆசிரியர்: இரா.தட்சணாமூர்த்தி
வெளியீடு: பாரதி புத்தகாலயம்
விலை: ரூ.47.00 
ஆசிரியை.R. சாஹிதா ரஹீம்
காஞ்சிபுரம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *