நூல் : மந்திரக் கோட்
ஆசிரியர் : பூங்கொடி பாலமுருகன்
விலை : ரூ.₹ 80/-
வெளியீடு : பாரதி புத்தகாலயம்
தொடர்புக்கு : 044 – 24332424 /24330024/
விற்பனை : 24332924
புத்தகம் வாங்க : www.thamizhbooks.com
bharathiputhakalayam@gmail.com
சமீபத்திய வாசிப்புக்களில் என்னைக் கவர்ந்தது வளரும் எழுத்தாளர் தங்கை பூங்கொடி பாலமுருகனின் “மந்திரக் கோட்” சிறுவர் நூல்.
சிறார் திரைப்படம் என்றால் என்ன ? சிறுவர்கள் நடித்திருப்பதெல்லாம் சிறார் திரைப்படங்கள் ஆகிவிடுமா? சிறுவர்களின் மனதுக்குள் புதியதோர் உலகை உணர வைத்து, மத்தாப்பாய் மகிழ வைத்து, எல்லையற்ற மாயவெளியில் சஞ்சரிக்க வைத்து வாழ்வியலையும் கூடவே கற்றுத் தரும் திரைப்படங்கள் தான் சிறார் திரைப்படங்கள். அத்தகைய படங்களைத் தேடிப் பார்த்து அவற்றின் சாரத்தை அழகிய பூங்கொத்தாக “மந்திரக் கோட்” என்ற ஓர் ரசனையான நூலாகத் தந்துள்ளார் பூங்கொடி.
பண்பு நலன், அறம், பாட்டி பாசம், நட்பு, இயற்கை, சாதனை, மனிதநேயம் எனப் பல விஷயங்களைப் பேசும் படங்கள்!!
ஜப்பான், கொரியா, ஈரான், குஜராத்தி, ஹிந்தி, ஆங்கிலம் என பலமொழிப் படங்கள்!!
ஒவ்வொருவரும் வாசிக்க வேண்டிய படைப்பு! எல்லா வீடுகளிலும் இருக்க வேண்டிய படைப்பு!
வார இறுதியில் குடும்பத்துடன் குழந்தைகளுடன் அமர்ந்து வீட்டுத் திரையில் ஓடிடி தளங்களில் தரமான படங்களைப் பார்க்க பலரும் விரும்புகிறோம். ஆனால் ரிமோட்டைக் கையிலெடுத்தால் என்ன பார்க்கலாம் எனத் தேடித்தேடியே விரல் தேயும் காலமிது. இந்நூல் ஒரு சுவாரசியமான கையேடாக இருக்கும் வாங்கி வாசித்தால்!
பாரதி புத்தகாலயத்தின் வெளியீடு. அச்சும் அட்டையும் அழகு!
பூங்கொடியின் இரண்டாவது நூல் இது. பொருள் பொதிந்த சரளமான எழுத்து.
மேலும் பல சிறுவர் இலக்கியங்கள் தொடர்ந்து மலரட்டும் பூங்கொடி! வாழ்த்துகள்!!
நன்றி:
மலர் முகநூல் பதிவிலிருந்து
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.