நூல் : பறக்கும் யானைகள் – சிறார் கதைகள்
ஆசிரியர் : பிரசாந்த் வே
விலை : ரூ.₹40/-
வெளியீடு : புக்ஸ் ஃபார் சில்ரன்
தொடர்புக்கு : 044 – 24332424 /24330024/

விற்பனை : 24332924
புத்தகம் வாங்க : www.thamizhbooks.com
[email protected]

கதை ஒவ்வொன்றும் முத்து முத்தாக இருக்கிறது. குழந்தைகளிடம் நற்பண்புகளை விதைக்கும் கதைகள். நல்ல மனிதர்களாக வளர உதவும் கதைகள்.

ஒவ்வொரு கதையையும் குறிப்பிட்டு சொல்லும் அளவு சிறப்பானவை.

மற்றவர்க்கு உதவ வேண்டும் என்ற எண்ணத்தை ஊட்டும் “பறக்கும் யானைகள்” கதை.

யார் எது சொன்னாலும் சிந்தித்துக் கேள்வி எழுப்பக் கற்றுக் கொடுக்கும் “வாய்ப்பூட்டு” கதை.

ஒற்றுமையின் வலிமையை உணர்த்தும் “வானம் தூக்கும் போட்டி” கதை.

காடுகளின் இன்றியமையாத் தேவையையும், அவற்றைப் பாதுகாக்க வேண்டியதன் அவசித்தையும் அழகாய் பேசும் ” டப் டப் டப்” கதை.

சோம்பேறித்தனத்தை சாடும் உழைப்பின் அவசியத்தை சொல்லும் “குரங்கு நண்பர்கள் ” கதை.

எல்லா உயிர்களும் சமம் எனப் புரிய வைக்கும் “கெக்க பெக்க” கதை.

ஒரு விதைக்குள் ஒரு காடே உறங்கிக் கிடக்கும் அறிவியலைப் பேசும் “பாட்டியின் பரிசு ” கதை.

கூடி வாழ்வதன் அவசியத்தை உணர்த்தும் ” சுட்டி முயல்” கதை.

ஒவ்வொருவருக்கும் உள்ள தனித்தன்மைகள் அவரவருக்கு சிறப்பு என்பதை உணர்த்தும் “குண்டு எறும்பு” மற்றும் “றெக்க” கதைகள்.

இந்தப் புத்தகத்தை பிள்ளைகளுக்குப் பரிசாகக் கொடுக்கலாம்.

– சுபா சிபி

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *