நூல் அறிமுகம்: தமிழில் ச.வின்செண்ட்டின் “பண்பாட்டு முகப்பில்” – சுப்ரபாரதிமணீயன்

நூல் அறிமுகம்: தமிழில் ச.வின்செண்ட்டின் “பண்பாட்டு முகப்பில்” – சுப்ரபாரதிமணீயன்




”நான் யாருக்காக எழுதுகிறேன். அணி வகுத்துச் சொல்லும் படைக்கு முன்னணியில் செல்பவர்களுக்காக பன்னாட்டுப் பெரும் போராட்டத்தை நடத்தி வருபவர்களுக்காக எழுதுகிறேன். அதில் பெறும் வெற்றி எல்லைகளற்ற, வகுப்புகளற்ற மனித சமுதாயத்தை அமைப்பதை உறுதி செய்யும் பொதுவுடமைக் கட்சி ஒன்று தான் சமூக செயல்பாட்டிற்கான உலக அளவிலான கட்சி. எந்த விதிவிலக்கும் சமரசமும் இல்லாமல் கொடியை ஏந்தி கவனமான மன உறுதி கொண்டவர்கள். விலைஉயர்ந்த மேலை நாடுகளை வெற்றி கொள்வதை நோக்கிச் சென்று கொண்டிருக்கிற படையின் மீதிப் பகுதி தொலைவில் இருந்தாலும் ஒன்றுக்கு மேற்பட்டோர் விட்டு விட்டுப் போனாலும் பின் வாங்கினாலும் தொடரும். எழுத்தாளர்களாகிய நாம் பின்தங்கி விடுவோரை வேகப்படுத்தித் தூண்டுகிறோம். ஆனால் அவர்களுக்காக நாம் காத்திருக்க வேண்டியதில்லை. நம்மை முந்திச் செல்வது அவர்களது வேலை. முன்னேறி செல்லும் படையணி நிற்பதில்லை- நான் ஓய மாட்டேன் “

இது வங்காள திரைப்பட மேதிஅயும் எழுத்தாளருமான ரித்விக் கட்டக்கின் கடந்து போன பாதையில் ஒரு வசனம். ஓர் பொதுவுடமைக் கட்சிக்காக எழுதிய ஆவணத்தில் ஒரு பகுதி.

நாட்டின் ஆளும் வர்க்கங்களின் கருத்துமுதல்வாத கோட்பாடுகளுக்கும் அழகியல் கோட்பாடுகளுக்கும் எதிராக அப்படிப்பட்ட கோட்பாடு வளரவேண்டும். அப்படிப்பட்ட கோட்பாடுகள்  மிகவும் வலுவாக இருக்கின்றன. இதன் நிழலில் இந்த நாட்டின் பண்பாடும் அழகியலும் வளர்ந்திருக்கின்றன. எனவே பண்பாட்டின் தன்மையையும் சிறப்புகளையும் நாம் புரிந்துகொள்ள வேண்டும். இந்தியாவின் மெய்யியல், மதம் ஆகியவற்றுடன் சலிக்கப்பட்டு மதிப்பிடப்படும் பொழுது அதனை சரியாக ஆராய வேண்டும் ஆராய முடியும் இத்தத்துவமும் மதமும் இந்தியாவின் பொருளாதார வரலாற்றின்  மேற்கட்டங்கள்தான். இந்த நிகழ்வு  நிலை முழுவதையும் புரிந்து கொள்ள  வரலாற்று ஆய்வு செய்வது தேவைப்படுகிறது.

கருத்து முதல் வாதத்தின் ஆதிக்கத்தில் இருந்து மக்களை வெளியில் கொண்டுவர இந்திய புரட்சி வெற்றிபெற தத்துவார்த்த முறையில் நாம் போரிட வேண்டும். மக்கள் தெரிந்த  உலகம் பற்றி தத்துவார்த்தமாக சிந்திக்க வேண்டும் என்றார் அவர்.

அதற்கான சிந்திப்புக்களை அவர் தன் திரைப்படங்கள் மற்றும் இலக்கியப்படைப்புகளில் தந்தவர் .

சாதாரண மக்களைப்பற்றி எழுதிய அவர்,, படமெடுத்த அவர் முதலில் சாமானிய கலைஞர்களை நம் பக்கம் கொண்டு வரமுடியும் என்று நம்பினார் .” அவர்களை நாம் சென்றடைய வேண்டும் இப்போது நம்மை சுற்றி நண்பர்களும் அதிகாரிகளும் இருக்கிறார்கள் அவர்களில் பலர் உண்மையில் கலை ஞானம் உடையவர்கள். ஆனால் இப்போது கவிஞர்களும் கூறிய நேர்மையும் அதோடு மனிதனுக்கு உரிய நேர்மையும் கொண்டிருக்கிறாய் உண்மையான சாமானிய கலைஞர்களை நாம் சென்றடைய வேண்டும் குறைந்தது அவர்கள் மிகுந்த கவனத்துடன் தங்கள் வாழ்க்கையில் கலையை தேடுபவர்களாக இருக்கிறார்கள்.” என்றார்

1993  இல் இந்திய பொதுவுடமைக் கட்சி மார்க்சிஸ்ட் தலைவர் புத்ததேவ் பட்டாச்சாரியா கல்கத்தாவில் பொதுவுடமைக் கட்சியின் அலுவலகத்தில் பழைய கோப்புகளைத் தேடிக்கொண்டிருந்த போது கையெழுத்துப் பிரதியாக இருந்த ரித்விக் கட்டக்கின்  ஆவணம் ஒன்று அவருக்கு கிடைக்கிறது. பொதுவுடமை கட்சியின் பண்பாடுகளைப் பற்றி அவர் ஒரு ஆவணத்தை எழுதி இருந்தார் என்பதுதான் அது. அது அப்போது எழுதப்பட்ட காலத்தில் வெளிவரவேயில்லை 1954ம் ஆண்டு கட்சிக்குச் சமர்ப்பிக்கப்பட்ட  ஆவணம் அது.

இதுபோல் ஆவணத்தை அவர் தயாரித்த பின்னால் 55 இல் அவர் இந்திய பொதுவுடமைக் கட்சியின் உறுப்பினர் இல்லை என்று தெரிவித்து கடிதம் பதிலாக அனுப்பப்படுகிறது

அவருடைய முதலாவது முழு நீளப்படம்  நாகரிக் 1977  வரையில் வெளியிடப்படாது போல இந்த ஆவணமும் இது வரை ஒடுக்கப்பட்டுக் கிடந்த்து.

 இந்த  பிரதிகள் பொதுவுடமைக் கட்சியின் கலை இலக்கிய பண்பாட்டு ஆர்வலர்கள் மத்தியில் உலவிக் கொண்டே இருந்தது.

“ பண்பாடு பற்றி கட்சியின் நிலைப்பாடு குறைவாகவே இருக்கிறது கட்சியை நீ பற்றி கவலைப்படுவதில்லை நாம் இப்போது வேலை செய்வது பற்றி கட்சியை மகிழ்ச்சியாக இருக்கிறது. உங்களுடைய சிக்கல் பற்றி எங்களுக்குத் தெரியாது எங்களுக்கு இன்னும் வேலைகள் இருக்கின்றன இன்னும் பல ஏற்பாடுகளை செய்ய வேண்டியிருக்கிறது பிரச்சனை சம்பந்தமாக வேலைகள் உள்ளன எங்களுக்கு வேலை அதிகம் மக்களை கண்களை கட்டி எழுப்பும் மக்களாட்சி முன்னணி போன்றவற்றில் கட்சியில் தாக்கத்தை விரிவாக்கத்தை சமாளிக்கும் போராட வேண்டியிருக்கிறது .வேறொரு சமயம் பார்ப்போம் தோழர்களை ” என்று பண்பாடு பற்றி ஏதாவது பேச்சு வரும்போது கட்சி  முடிவுகள் வந்திருக்கின்றன”

இது எல்லாக் காலங்களிலும் கலை இலக்கிய பண்பாட்டு குறித்துச் சொல்லப்பட்டிருக்கிறது. அந்தச் சோர்வை தான் இந்த ஆவணத்தில் பதிவு செய்திருக்கிறார். நாம் தனிமையாக தாக்கப்பட்டு நமது சமநிலை இழந்து நமது நோக்கத்தை நாம் தோற்கடித்து விடுவோம். ஆதலால் நடுத்தர வர்க்கத்தினரின் பண்பாடு உடனே முக்கியத்துவம் பெறும் என்பதை ஒத்துக் கொண்டுதான் நாம் செயல்பட வேண்டும் என்றம் சமாதானங்கள் எழுந்திருக்கின்றன புதிய சிந்தனைகளோடு சேர்ந்து முழுமையாக  ஓய்வற்ற முறையில் கண்காணித்து சரியான தளத்தில் தொடர்ந்து வைக்கப்படும்போது அனைத்தும் இணைந்து கடைசியில் மக்களுக்குரிய கலைவடிவங்களில் மக்களாட்சி முன்னணியை கட்டி எழுப்புவதே காணமுடியும் இந்த சிக்கல்களை புரிந்துகொண்டு அவற்றை சந்தித்து வெற்றி காண முடியும் முரண்பாடுகளும் அவை தீர்க்கப்படும் கட்சியிலுள்ள எங்களுடைய நிலைப்பாடு பற்றி  ரித்விக் கடக்  எழுப்பிய கேள்விகளின் ஆதாரமாக இந்த ஆய்வேடு இருக்கிறது

”நான்காம் சுவர் என்பதில் பார்வையாளர்களையும் நடிகர்களையும் ஒரு கண்ணுக்கு தெரியாத பிரிக்கிறது பார்வையாளர் இச்சுவர் வழியாக பார்க்கலாம். ஆனால் நடிகர்கள் அவர்களைப் பார்க்க முடியாது என்பது போல் கற்பனை செய்து கொண்டே இருப்பார்கள். இன்று நான்காவது  சுவர்  என்பது ஒரு உருவகம். நாடக மேடையில் ஒரு அறையில் மூன்று சுவர் இருக்கும் நான்காவது சுவர் ஒரு நாடக மேடை மரபு அது பார்வையாளர்களை பிரிக்கும் கற்பனைச் சுவர். இந்த மரபு மீறப்பட்டு பார்வையாளர்களுக்கு இது நாடகம்தான் என்று நினைவுறுத்தும் யுத்திகள்  பயன்படுத்தப்படும்போது இந்த நான்காவது கற்பனை சுவர் உடைகிறது ”

ரித்விக்கடக் குறிப்பிடும் நான்காம் சுவரில் எழுத்தாளர்கள், கலைஞர்கள், கட்சியினரை அடையாளம் கண்டு கொள்ள முடியும்.

இந்த நிலை இன்றும் எழுத்தாளர்களுக்கும் தொடர்கிறது இந்த கேள்வியை தொடர்ந்து அவர்களும் எழுதிக்கொண்டே இருக்கிறார்கள். கேட்டுக்கொண்டே இருக்கிறார்கள் அவர்களை சமாதானம்  கொள்ளச்செய்யும் பதில்கள் வேறுவகையில் கிடைத்துக் கொண்டிருக்கின்றன..

இதை மொழிபெயர்த்திருக்கும்  ச.வின்செண்ட் ஓய்வு பெற்ற ஆங்கில பேராசிரியர் 30க்கும் மேற்பட்ட நூல்களை ஆங்கிலத்தில் இருந்து தமிழுக்கு மொழி பெயர்த்திருக்கிறார் தமிழில் இருந்து ஆங்கிலத்திற்கும் பல நூல்களைக் கொண்டு வந்திருக்கிறார் அவரின் சிறந்த மொழிபெயர்ப்பிலும் ஊடாக காலத்தின் கட்டாயமான ஒரு ஆவணத்தை தமிழில் கொண்டு வந்திருக்கிறார்.

கட்சிக்கும் எழுத்தாளருக்குமான இடைவெளி நீண்டு கொண்டே இருக்கிறது என்பதை 65 ஆண்டுகளுக்கு முன் வந்த இந்த ஆவணம் வெளிப்படுத்துகிறது

நூல்: பண்பாட்டு முகப்பில்
ஆசிரியர்: தமிழில் ச.வின்செண்ட்
வெளியீடு: கருத்துப்பட்டறை மதுரை
விலை: 130 ரூபாய் )

 சுப்ரபாரதிமணீயன்

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 



Show 1 Comment

1 Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *