நூல் அறிமுகம்: தமிழ்! பிள்ளைத் தமிழ்!! – மெ.சண்முகம்

நூல் அறிமுகம்: தமிழ்! பிள்ளைத் தமிழ்!! – மெ.சண்முகம்




இது தமிழ் மொழியைத் தமிழ் மொழி வரலாற்றிலேயே முதல் முதலாகக் குழந்தையாகப் பாவித்து மரபு இலக்கண முறைப்படி எழுசீர் ஆசிரிய விருத்தத்தில் எழுதப்பெற்ற பிள்ளைத்தமிழ் நூல் ஆகும்.

கண்ணே மணியே என்று வழக்கமாகப் பாடப்பெறும் பெண்பாற் பிள்ளைத்தமிழுக்குரிய 10 பருவங்கள் இந்நூலில் வித்தியாசமான முறையில் உள்ளது.!

இந்த 10 பருவம் போகப் புதிதாக இக்காலத்திற்கேற்ப கணினி, செம்மொழி என்ற 2 புதுப் பருவங்கள் சேர்க்கப்பெற்றுள்ளது.

செம்மொழிப் பருவம் பட்டாபிஷேகம் போல வர்ணிக்கப் பெற்றுள்ளது.

12 பருவங்களும், தமிழ் உயிரெழுத்துகள் 12ஐ நினைவூட்டுவதாக அமைந்து அவ்வுயிரெழுத்தே அந்த 10 பாடல்களின் முதல் எழுத்தாக ஆரம்பிக்கும்படி புதுமையாக உள்ளது.

இந்த நூல் எந்த சாதி, சமய, மத, இன வேறுபாடின்றி தமிழின் சிறப்பையும், தமிழ் நாட்டின் சிறப்பையும், தமிழர்களின் பெருமையையும் போற்றுகிறது. 10 பருவங்களிலும் ஆங்காங்கே தமிழகத்தில் உள்ள10 விதமான மலைகள் , நீர்நிலைகள் கட்டில்கள்,தொட்டில்களில் தமிழைச் சீராட்டி, 10விதமான பறவைகள் மலர்கள் கனிகளாக வர்ணித்து, தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் திரு. வி.திருவள்ளுவன், சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழகத் துணை வேந்தர் திரு. இராம.கதிரேசன், திருவாரூர் மத்தியப் பல்கலைக் கழகத் தமிழ்த் துறைத்தலைவர் திரு.இரவி, அழகப்பாப் பல்கலைக் கழக முன்னாள் தமிழ்த் துறைத் தலைவர் திரு.மா.கண்ணப்பன், திருவாடானை அரசினர் கலைக்கல்லூரி தமிழ்த் துறைத் தலைவர் திரு.பழனியப்பன் போன்றவர்களின் அணிந்துரை, வாழ்த்துரை, வாழ்த்து மடல் மற்றும் மதிப்புரையோடும் மணிவாசகர் பதிப்பகத்தால் பதிப்பிக்கப்பெற்று காரைக்குடி கம்பன் திருவிழாவில் தமிழறிஞர் சோம.லெ. அவர்கள் புதல்வர் சோமசுந்தரம் அவர்களால் 17.03.2022 அன்று வெளியிடப்பெற்றது.

ஆசிரியர்:  மெ. சண்முகம் B.Sc., B.Ed.,
ஓடாப்புலி நிவாஸ் ‘2020’
94. மெ. மெ. வீதி
காரைக்குடி, 630001
சிவகங்கை மாவட்டம்
அலைபேசி : 9976402342, 8248748170)

விலை: ரூ. 50/-
மணிவாசகர் பதிப்பகம்

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *