நூல் : சீமையிலே இல்லாத புத்தகம்
ஆசிரியர் : தேனி சுந்தர்
விலை : ரூ.₹100/-
வெளியீடு : பாரதி புத்தகாலயம்
தொடர்புக்கு : 044 – 24332424 /24330024/
விற்பனை : 24332924
புத்தகம் வாங்க : www.thamizhbooks.com
[email protected]
வணக்கம் நண்பர்களே..
06.10.22 அன்று விடியற்காலை ரயில் பயணம் மற்றும் காலை, பேருந்து பயணத்தின் போது, தேனி சுந்தரின் சீமையிலே இல்லாத புத்தகம் படித்தேன். ஒரே மூச்சில் 112 பக்கத்தையும், அணிந்துரையிலிருந்து, அவர் உரை வரை 9௦ நிமிடத்தில் படித்தாகிவிட்டது. என்ன சின்ன சின்ன கவிதை வரிகள் தான், எனவே படிக்க எளிதாகவும், விரைவாகவும் முடிந்தது, ஆனால் சீமையில் இல்லாத புத்தகம் படு சூப்பராக இருந்தது. ஆனால் வழக்கம்போல பல பணிகளால் அதனைப் பற்றிய பதிவு எழுத தாமதமாகிவிட்டது.

நெசமாகவே இது சீமையிலே இல்லாத புத்தகம்தான்.குழந்தைகளின் மழலை மொழியை பொதுவாக யாரும் பதிவு செய்வதில்லை. மழலை மொழிகளையே பதிவு செய்து இலக்கியம் ஆகிவிட்டார் தோழர் தேனி சுந்தர். படா கில்லாடி தான் இவர். கொஞ்சமும் கற்பனை கலக்காமல், அதற்கான அவசியமே இல்லாமல், நெசமான மழலை மொழியை பேசி மனதை கவர்தல் என்றால், வாழ்க்கை மொழியை குடும்ப மொழியை இலக்கியமாக்கிய முதல் மனிதர் இவராகத்தான் இருக்க முடியும்.

வாழ்த்துக்கள் மகனே…
“வெற்றி மீது வெற்றி வந்து உன்னைச் சேரும்.”

மேலும் சுந்தர் மகன் டார்வினின் கை ஓவியங்கள் அற்புதமாக உள்ளன. ஒரு சிறு பையனா இதனைப் போட்டான் என்று ஆச்சரியமாக இருக்கிறது. ஒரு பெண் எழுதுவது போன்ற பின்பக்க ஓவியம் அதிஅற்புதம்.இந்த கவிதைப் புத்தகத்தில் கவிதையைப் பாராட்டவா, ஓவியத்தை வியக்கவா ? எல்லாமே டாப் டக்கர்தான். எதுவும் மிகையில்லை.

ஏங்க..
பாப்பாவ எங்கக் காணோம்..?

இந்தா..
வெளாண்டுக்ருக்குல..

பாப்பாவுக்கு பாலு வேணுமா..

ஆமா வேணுமாம்..!

பொறுங்க‌.
டம்ளரக் கழுவி
பாலாத்திக்கு வரேன்..

சடி..

ஏங்க உங்களுக்கு
எனக்குநதான் வேணும்

சடி
கொண்டுவாரேன்
………
,,,,
கீத்தி
இப்ப நீ தான் ஏங்க
நாந்தான் அம்மா

எவ்வளவு உன்னிப்பாக அப்பா அம்மாவைக் குழந்தைகள் கவனிக்கிறார்கள்

இந்த “சடி”

இந்த மழலை மொழியை எப்படிதான் பாராட்ட
யாருக்குப்பா இந்த சடிக்கு அர்த்தம் தெரியும்.

அறுபது பக்க புத்தகத்தை
அஞ்சே நிமிஷத்துல
படிக்க முடியுமா?
புகழ்மதி படிச்சுட்டாங்க..

ஒவ்வொரு பக்கமா
புரட்டுவாங்க..

படம் இருக்கும்
பக்கத்த மட்டும் பாப்பாங்க

இது அம்மா
இது அண்ணன்
இது போனு இது வீடு
இது மரம்,
இது குருவி..
…..

நான் படிச்சு முடிச்சுட்டேன்பா
யாராவது இப்படி படிக்க முடியுமா?

சூப்பர் பாப்பா இது

இதனை யாராவது ரசிக்காமல் இருக்கமுடியுமா
குழந்தை எவ்வளவு சமத்தா,, நான் படிச்சு முடிச்சுட்டேன்னு சொல்லுது.

அடுத்த கவிதை
அப்பா கவிதை

கொஞசம்
உயரமான சைக்கிள்தான்

வாடா ஓட்டிப் பழகுவோம்னு
அப்பப்போ கூப்பிடுவேன்
தயங்குவான்,
நைசா தப்பிச்சு ஓடிருவான்

காசுக்குப் புடிச்ச கேடு
வாங்கி வெட்டியா கிடக்கு,
யாருக்காச்சும்
தூக்கிக் கொடுத்து விட்ரனும்

கப்பக்கிழங்கு காரரு வரட்டும்
குடுத்துட்டு கிழங்கு வாங்குறேன்

என்னமோ..
கொஞச நாள் கழிச்சு \சித்தப்பன்
மேலே நம்[பிக்கை வைத்து
ஓட்டிப் பழகிட்டான்.

ரெண்டு கால்களுக்கும்
றெக்கை முளைச்சது போல
தெருவின் ரெண்டு முனைக்கும்
ஒட்டி ஓட்டி
ஓட்டி ரசிக்கிறான்..

இப்ப கேக்குறான்..
இருட்டாக்கிருச்சு
பைக்ல இருக்குற மாரி
இதுலயும்
லைட் வச்சு குடுப்பா

குழந்தைகளின் மனதை எப்படிப் படிக்க ;எப்படி ரசிக்க
எப்படி அங்கு கற்பனை புகுந்து சிறகடிக்கிறது

இதனாலதான் வள்ளுவர் சொல்கிறாரே

“குழல் இனிது யாழ் இனிது என்பார் தம் மக்கள்
மழலைச் சொல் கேளாதவர்” என்று சொன்னாரோ

வாயில ஒன்னு
கையில ஒன்னு
எத்தனை சாக்லட்டு

வேணாம் பாப்பா
பல்லு பூரா
சொத்தையா போகும் ..

சொத்தையா போவாதுப்பா
சாக்லட்டு சாப்பிட்டா
இரும வராது
ஒனக்குத் தெரியாதா

இரும வராதா
யாரு சொன்னது..?

அப்பத்தா ….

அவங்க சொன்னது
ஹால்ஸ் மிட்டாய்
இந்த மேடத்துக்கு மட்டும்
சாக்லட்டுன்னு கேட்டிருக்கு ..!

குழ்நதைகள் எப்படி தனக்கு வசதியாக நம்மை ஏமாற்ற
தனது குழந்தைத்தனமான கற்பனையை
பறக்க விடுகிறார்கள் .
இதையெல்லாம் கேட்டும் மகிழ்ந்தும் நாம் நினைத்து நினைத்து ரசிப்போம் தானே.

கீழே
அப்பத்தாவின் பேச்சொலி கேட்டு
முழிப்பு வந்துருச்சு அவனுக்கு,
நறுக்குன்னு கால மிதிச்சு
கடந்து போனான்

விடியல
இன்னும் இருட்டாத்தான் இருக்கு

போடி போ
கதவ திறக்கணும்
என்னய த்தானே கூப்பிடணும்
தூங்குற மாதிரியே படுத்திருந்தேன் ..

அவன் அங்கன
கெடந்த சேரைத்
தூக்கிப் போட்டான்
கதவ தொறந்தான்
போடா பொக்கன்னு
ஒரு பார்வை பாத்துட்டு
கீழ போயிட்டான்

போன தலைவரு
அங்க போயி தூங்கிட்டாரு

எட்டு மணிக்கு
எந்திரிச்சு வந்தவன்
கேக்குறான்.

உம பக்கத்துல தானப்பா
படுத்து இருந்தேன்
எப்புடி கீழ இருந்து
வந்தேன் பார்த்தியா

அட ஆமா எப்டிடா?
அதெல்லாம் மேஜிக்
ஒனக்கு ஒண்ணும் தெரியாது..

இந்த தந்திர மந்திரத்தை என்னென்று சொல்ல ?எப்படி குழந்தைகள் நமக்குத் தெரியும் என்று \தெரிந்தும் நம்மை விளையாட்டாக ஏமாற்றுகிறார்கள்
இது என்ன கலை? அவர்கள் கற்பனையில்

இதைத்தான் ஆயிஷா தோழர் தனது அணிந்துரையில்,சொல்லி இருக்கிறாரோ…!

மாண்டிசோரியும், நோம்சாம்ஸ்கியும் கைகுலுக்கும்
புள்ளியில் இருந்து
ஊற்றெடுக்கும் கவிதைகள் என்று

ஒவ்வொரு கவிதையும் படு சூப்பர்

சொல்ல சொல்ல இனிக்குதடா
முருகா என கே. பி. சுந்தராம்பாள்
பாடிய பாடல் வரிகள்
சொல்ல சொல்ல இனிக்குதடா சுந்தர் என
இங்கு சிக்கென்று அற்புதமாகவே பொருந்தும்.

அடுத்த இன்னொரு சுவையான கவிதை, கொஞசம் அனுபவம்…..

கடைக்குச் சாப்பிடப் போனோம்.
வேண்டியத ஆர்டர் பண்ணினோம்

பக்கத்து டேபிள்ள
செவப்பா ஒருத்தரு
சுத்தப்படுத்திக்கிருந்தாரு
இன்னொருத்ததர்
இலை எடுத்தாரு

டார்வின் கேட்டான்..
ஏம்ப்பா இவங்கெல்லாம்
நம்ம ஊரா

இல்லடா

அப்ப சீனாவா ?
எனக்குப் பசி வேற

வடகிழக்கு மாநில
விளக்கமெல்லாம் எதுக்குன்னு

ஆமான்னு சொன்னேன்

உடனே கேக்குறான்
அப்ப நம்மளு க்கு
கொரோனா வந்துடாதா

என்னப்பா நீய்யீ
இதைக்கூடப் பாக்காம
உள்ள வந்து
உக்கார வச்சுட்டா ..?

மைக் செட்டுல
பாட்ட போட்டுப் போட்டு
எங்க வரைக்கும்
ரீச் பண்ணியிருக்காங்க

எனக்கு படித்து முடித்ததும் சிரித்து சிரித்தே வயிறு புண்ணாயிடுத்து.
குழந்தைங்க மனசு எப்படி எல்லாம் யோசிக்குது. இதுதான் வாயைக் கொடுத்து வாங்கிக்கட்டிக்கிறது. என்பார்கள் ,..பாவம் சுந்தர்
குழந்தைகள் நம்மை நாம் எதிர்பாராமல் முட்டாளாக்கி விடுவார்கள்
என்ன சுந்தரண்ணே சரியா ?

எப்பா ..
எனக்கு ஒரு ஆம்லட்
போட்டுக் குடுப்பா

எதுக்கு பாப்பா
அந்த மஞ்ச கருவுல
மெளகு போட்டு சாப்பிட்டா
சளி சரியாயிடும் ..

யாரு சொன்னது

அத்தை..

ரசம் சோறு
இருக்கு பாப்பா
போட்டுத் தரவா ..?

வேணாம்ப்பா
எனக்கு ஆம்லட்டுதான்
வேணும்
தோசை கூட சாப்பிடலாம்ப்பா

சரி
தோசை எதுக்கு ?

ஆம்லட்டும் தோசையும்
வட்டமா வட்டமா இருக்குல்ல
அத சாப்பிட்டாலும்
சளி சரியாயிடும்

இது எப்படி இருக்கு..
எப்படி ஒரு ஒப்பீடு அளவில், சைசில்
சூப்பர் பாப்பா நீ.
..
குழந்தைகள் நம்மைவிட படா புத்திசாலிகள்
கொஞ்சம் அங்கு இங்கு யோசனை பண்ணினால் நம்மை ஏமாற்றிவிடுவார்கள்
நாமும் ஏமாந்தது போல பாசாங்கு செய்தால் குழந்தைகளுக்குக் கொள்ளை மகிழ்ச்சி

அம்மா,
என்னா பாப்பா
பேயி ..
ஆ..ண்டு கத்தற சத்தம்
கேக்குதும்மா

உங்க அப்பா வந்தாதான்
பேய அடிக்க முடியும்,

நாம ஒண்ணும் செய்ய முடியாது
பேசாம படு

அம்மா
என்னாடி..

அதான் சொன்னேன்ல
பேசாம படு..

இல்லம்மா
பேய நானே அடிச்சு
விரட்டிட்டேன்
நீ பயப்படாம படு..

எப்படி பாப்பாவின் சாமர்த்தியம் அம்மாவை எப்படி சமாளிக்குது குழந்தைகள் படு சாமர்த்தியசாலிகள்;பாடு சுட்டிகள். அவர்களின் திறமையை, கவித்துவத்தை, கற்பனையை, அறிவினை வியக்க தனி மனமும் தனி உள்ளமும் மூளையும் நமக்கு வேண்டும்,

இந்த சீமையிலே இல்லாத புத்தகத்தில் உள்ள கவிதை வரிகளில் எதைச் சொல்ல எதை விடுக்க..
அப்பறம் நீங்க படிச்சு சிரிக்க வேண்டாமா

முடிவா ஒரு கடைசி கவிதையை நான் ரொம்பவே வாசிச்சு ரசிச்சு சிரித்ததை சொல்கிறேன்.
அப்பத்தான்
வீட்டுக்குள்ள நுழையுறேன்
டார்வின் சொல்றான்

பாப்பா
இனிமே
நம்ம ரெண்டு பேரும்
எதுவுமே பேசக்கூடாது..
அமை…தியா இருக்கணும்

எதுக்குண்ணே ..?
பேசவே கூடாது பாப்பா !

எதுக்குன்னு சொல்லுண்ணே
நம்ம பேசறது எல்லாம்
எழுதி
புக்கு போடுறாய்ங்க
பாப்பா

இது எப்படி இருக்குது? சும்மா அதிருதுல்ல

எவ்வளவு உற்று நோக்கல், எவ்வளவு கூர்மையான அறிவும் விளையாட்டாக எதனையும் அறிந்து கொள்ளலும் ..
இதனைப் பற்றி சொன்னதும், சில பக்கங்களை படித்துக் காட்டியதும், எனது தங்கையின் மருமகள்,/தம்பி பெண் இந்த புத்தகத்தை அவர்கள் படிக்க கேட்கிறார்கள். எப்படி பிடிக்காதவர்களை ஈர்க்க வைக்கும் காந்தமாய் இந்த புத்தகம் “சீமையிலே இல்லாத புத்தகம் ”

சூழலைப் பொறுத்தே வளரும் குழந்தை மனமும், புத்திசாலித்தனமும்..
இதனை ஒவ்வொரு பெற்றோரும் அறிந்து செயல்பட்டால் குழந்தை வளர்ப்பில்
சாதிக்க முடியும்.

சுந்தர் -அருணா தம்பதியர் சாதித்து இருக்கிறீர்கள்.
எவ்வளவு அழகாக குழந்தை மழலையை பதிவு செய்து
பாராட்டுதலுக்கும் வாழ்த்துக்களுக்கும் பொறுப்பாளார் ஆகி “நச்சத்திரம்” போல ஜொலிக்கிறார்
தோழர் சுந்தர்.
குழந்தை மொழி பதிவு வரலாற்றில் தாங்கள்தான் முன்னோடி..
அட்டகாசமான புத்தகம்.
மீண்டும் மீண்டும் வாழ்த்துகளும், அன்பும், மகிழ்ச்சியும் சுந்தர் மகனே.

– சோ.மோகனா

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *