மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமை குழு உறுப்பினர் தோழர் ஜி ராமகிருஷ்ணன் எழுதிய களப்பணியில் கம்யூனிஸ்ட்கள் மூன்றாவது பாகம் வெளியீட்டு விழா 18.12.2022 அன்று எழுத்தாளர் தமிழ்செல்வன் தலைமையில் நடைபெற்றது..

மேனாள் பாராளுமன்ற உறுப்பினர், மார்க்சிஸ்ட் கட்சியின் மூத்த தோழர் டி கே ரங்கராஜன் இந்நூலினை வெளியிட இந்திய மாணவர் சங்கம் மற்றும் இந்திய ஜனநாயக சங்கத்தின் மாநில தலைவர்கள் பாரதி மற்றும் நிரூபன் ஆகியோர் முதல் பிரதியை பெற்றுக் கொண்டனர்.

இந்நிகழ்வில் எழுத்தாளர் மற்றும் மார்க் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தோழர் எஸ் ஏ பெருமாள் மற்றும் எழுத்தாளர் எஸ் ராமகிருஷ்ணன் ஆகியோர் சிறப்புரை நிகழ்த்தினார்கள்.

எழுத்தாளர் எஸ் ராமகிருஷ்ணன் தனது சிறப்புரையில் கேரளாவில் வெளியான பள்ளி ஆசிரியரின் நூல் குறித்து தெரிவித்தார்.

பள்ளி ஆசிரியராக பணியாற்றும் ஒருவர் அந்த கிராமத்தில் உள்ள கம்யூனிஸ்ட் கட்சியின் செயல்பாடுகளில் ஈர்க்கப்பட்டு சிறு சிறு வேலைகளை செய்து வந்தார்.

தொடர்ந்து கட்சியின் அலுவலகத்திற்கு சென்று தன்னுடைய ஆசிரியர் பணி போக மீதம் உள்ள நேரங்களில் கட்சி பணிகளை ஆற்றிக் கொண்டிருந்தார்.

இத்தோடு மர சிற்பம் செய்வதில் மிகுந்த ஆர்வம் உடையவர் பல்வேறு உருவங்களையும் சிற்பங்களாக செதுக்கும் பணியில் ஈடுபட்டிருப்பார்.

கம்யூனிஸ்ட் கட்சியில் உள்ள தலைவர்கள் குறிப்பாக மாவோ, லெனின், ஸ்டாலின் போன்ற ஆளுமைகளின் உருவங்களையும் சிற்பங்களாக செதுக்கியிருந்தார்.

இவரது பணிகள் குறித்து கேரளாவில் உள்ள மூத்த தோழர்கள் அறிந்திருந்தனர்.

ஆனால் உள்ளூரில் உள்ள தோழர்கள் இவரது செயல்பாடுகளுக்கு பெரிய அளவில் ஆதரவு அங்கீகமோ அங்கீகாரமோ வழங்கவில்லை.

ஆனாலும் தொடர்ந்து தனது கட்சிப் பணிகளை செயலாற்றிக் கொண்டிருந்தார்.

பின்பு கட்சி அலுவலகத்திற்கு செல்வதை நிறுத்திக் கொண்டு வீட்டிலேயே சிற்பங்களை செதுக்குவதும் நூல்களை படிப்பதிலும் கவனம் செலுத்தி இயங்கிக் கொண்டிருந்தார் வெளியில் எப்படி அங்கீகாரம் இல்லை அதேபோன்று இவரது குடும்பமும் உறவினர்களும் இவரது பணிகளை ஏற்றுக் கொண்டதில்லை.

இச்சூழலில் கிராமத்தில் உள்ள கட்சி அலுவலகம் புதிதாக கட்டப்பட்டு திறக்கும் பணிகளில் கட்சித் தோழர்கள் ஈடுபட்டிருந்தார்கள்.

கட்சி அலுவலக திறப்பு விழாவிற்கு தோழர் இ எம் எஸ் நம்பூதிரி பாடு வருகை தந்தார்.

கட்சி அலுவலக திறப்பு விழாவை முடித்துக் கொண்டு அங்கிருந்த தோழர்களிடம்
இ. எம். எஸ் இக்கிராமத்தில் பள்ளி ஆசிரியர் நமது கட்சி பணிகளில் ஈடுபடுவாரே அவரை காணோமே. அவரை நான் சந்திக்க வேண்டும் என்று கேட்டுள்ளார்.

இங்கிருந்து தோழர்களுக்கும் அப்போது கட்சியை தலைவர்களுக்கும் தோழர் பள்ளி ஆசிரியர் குறித்து கேட்டது மிகுந்த ஆச்சரியத்தையும், அதிர்ச்சியும் கொடுத்தது.

அனைவரும் பரபரப்பானார்கள் பள்ளி ஆசிரியரின் வீட்டிற்கு சென்று தோழர் இ எம் எஸ் உங்கள் வீட்டிற்கு வருகை தர உள்ளார் என தெரிவித்தனர்.

பள்ளி ஆசிரியரும் வரட்டுமே என்று தெரிவித்துள்ளார்.

அனைவரும் கூட்டமாக பள்ளி ஆசிரியர் வீட்டிற்கு கிளம்பினார்கள்.

ஆனால் இ எம் எஸ் அனைவரையும் தடுத்து என்னோடு நாலு தோழர்கள் மட்டும் வந்தால் போதும் என்று தெரிவித்துள்ளார்.

தோழர் இ எம் எஸ் பள்ளி ஆசிரியரின் வீட்டிற்கு வந்து நீண்ட நேரம் அவரோடு உரையாடிக் கொண்டிருந்தார்.

குறிப்பாக அந்தக் காலத்தில் நடந்த போராட்டங்கள் கட்சி பணிகள் போன்றவற்றை நினைவு கூர்ந்தார்கள்.

இப்போதும் நீங்கள் மர வேலைப்பாடுடைய சிற்பங்கள் செய்து கொண்டுள்ளீர்களா என இ எம் எஸ் கேட்டுள்ளார்.

பள்ளி ஆசிரியர் தொடர்ந்து தான் செய்த சிற்பங்களை அவரிடம் காட்டியுள்ளார்.

இப்போது மாவோவின் மரச் சிற்பம் செய்து கொண்டிருப்பதையும் தோழர் இ எம் எஸ் இடம் பள்ளி ஆசிரியர் காண்பித்துள்ளார்.

தோழர் இ எம் எஸ் மிக்க மகிழ்ந்து இப்பணி தொடரட்டும் என்று பள்ளி ஆசிரியரிடம் தெரிவித்துவிட்டு சென்றுவிட்டார்.

கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்கள் அடித்தட்டு மக்களிடம் எப்படி நேசம் காட்டினார்கள் என்பதை இதன் மூலம் நாம் அறிந்து கொள்ள முடியும்.

குறிப்பாக உலக தலைவராக வலம் வந்தவர் தோழர் இ எம் எஸ்.

அவரது பல்வேறு பணிகளுக்கு மத்தியில் இது போன்ற மிகச் சாதாரணமான ஒரு கட்சி பணி செய்து கொண்டிருந்தவரை நினைவு கூர்ந்து அவரை சந்தித்தது கட்சி தலைவர்களுக்கு மட்டுமல்ல அந்தப் பகுதியில் உள்ள கட்சி ஊழியர்களுக்கு மட்டுமல்ல அந்த கிராமத்து மக்களுக்கு மிகுந்த ஆச்சரியத்தை கொடுத்தது.

அதன் பின்பு அந்த பள்ளி ஆசிரியரின் பணிகள் குறித்து அந்தப் பகுதி கட்சி தோழர்கள் அவரது குடும்பம் மற்றும் அந்தப் பகுதியினர் அனைவரும் போற்றிப் பாராட்டினார்கள் என்ற செய்தியை எழுத்தாளர் தோழர் எஸ். ராமகிருஷ்ணன் தனக்கே உரிய பாணியில் தெரிவித்தார்.

அது போன்று தான் தோழர் ஜி. ராமகிருஷ்ணன் எழுதியுள்ள களப்பணியில் கம்யூனிஸ்டுகள் நூல்கள் ஆகும்.

3 பாகம் வந்துள்ளது. இன்னும் நிறைய தோழர்களை சந்தித்து அவர்கள் கட்சிக்கு ஆற்றிய பணிகளை நூலாக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

அத்தோடு இனிமேல் சந்திக்கும் தோழர்களிடம் வீடியோ மூலம் பதிவு செய்ய வேண்டும். தோழர்களின் குரலோடு இப்பதிவுகள் இருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும் என்று எழுத்தாளர் தோழர் எஸ். ராமகிருஷ்ணன் தெரிவித்தார்

இந்நிகழ்வில் பாரதி புத்தகாலயம் தோழர் நாகராஜன் வரவேற்புரை நிகழ்த்த தோழர் பாலாஜி நன்றி தெரிவித்தார்.

நூல் : களப்பணியில் கம்யூனிஸ்டுகள் (பாகம்-3) பொதுவுடமை இயக்கத்தில் பூத்த மலர்கள்
ஆசிரியர் : ஜி.ராமகிருஷ்ணனின்
விலை : ரூ.₹ 250
வெளியீடு : பாரதி புத்தகாலயம்
தொடர்புக்கு : 044 – 24332424 /24330024/
விற்பனை : 24332924
புத்தகம் வாங்க : www.thamizhbooks.com
[email protected]

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *