வழிப்போக்கனின் முன்னுரையிலிருந்து சில வரிகள்….
#வெளிவரவிருக்கும்_எனது_மூன்றா வது_கவிதை_நூலின்
#என்னுரை
#யசோதரையை_முட்டாளாக்கி
#நண்பன்_புத்தன்_புத்திசாலியானா ன்.
தலைவிரிக் கோலத்தில் தனிமை அதிபயங்கரமாய் என் முன் வந்து என்னை விழுங்கிவிட நின்ற போது இந்த சொற்கள் தான் தனது பல்லாயிரக்கணக்கான அன்புக் கரங்களை நீட்டி என்னை வாரி அணைத்துக்கொண்டது.
அந்த அகோரமான தனிமைத் தருணத்தில் துணையாய் தம்மம் மூலமாய் எனக்கு கடவுளாய் அறிமுகமான புத்தன் பின் ஒரு ஆன்மீக விஞ்ஞானியாய் எனக்குள் உருமாறினான். அதன் பிறகு அவனை எனக்கு பிடித்துப் போனது. சிறிது காலத்திற்கு பிறகு நாங்கள் நல்ல நண்பர்களானோம்,அவன் பால் எப்போதும் எனக்கு பேரன்புண்டு, ஆனாலும் அவ்வப்போது முரணுமுண்டு.
அவனுக்கும் எனக்குமான அந்த முரண்பட்ட அன்பை தான் உங்கள் முன் கவிதைகளாய் சிலவற்றை கொடுத்துள்ளேன். சொற்களால் தொடங்கிய எனக்கும் அவனுக்குமான நட்பும் ,அன்பும், முரணும் சமரசமின்றி தொடர்ந்தபடியே இருக்கும் எழுதுவதைப் போலவே.
சித்தசுத்திக்கு துறத்தல் என்பது தான் ஒரே வழியென்று வாழ்ந்து நிரூபித்த ஒரேயொரு ஆன்மீக விஞ்ஞானி புத்தன் மட்டுமே. தன்னைத் தானே தீயிட்டுக்கொண்டு உலகத்திற்கான பேரொளியாய் விளங்கியவன் தான் புத்தன் என்பதில் எனக்கும் மாற்றுக் கருத்தில்லை. ஆனால் தொலைவில் அவனை நிறுத்திக் கடவுளாகப் பார்க்காமல் அருகில் சென்று அவனை எனது நண்பனாக அணைத்துக் கொள்கிறன். முரண்களோடு சில கருத்துக்களை அவன் முன் வைக்கிறேன், அதை தான் சில கவிதைகளாய் உங்கள் முன் கொடுத்திருக்கிறேன்.
நிறை நேசங்களுடன்
வழிப்போக்கன்.

