புத்தக முன்னோட்டம்: “துருப்பிடித்த ஞாபகக் குறிப்புகள்” கவிதைத் தொகுப்பு – வழிப்போக்கன்

புத்தக முன்னோட்டம்: “துருப்பிடித்த ஞாபகக் குறிப்புகள்” கவிதைத் தொகுப்பு – வழிப்போக்கன்



“அவளின்றி வாழ்வில்லை
*** *** *** *** *** *** *** ***
உங்களுக்கு சற்று அருகிலோ
அல்லது அருகாமையிலோ
ஸ்திரமாய் தன்னை நங்கூரமிட்டு நிலைநிறுத்தி
உங்கள் இதயத்தின் ஒட்டுமொத்த இயக்கத்தையும்
அந்தப் பக்கமாய் ஒருத்தி தீர்மானித்துக் கொண்டிருப்பாள்.
அவள் அன்பில் பரபரப்போடு அல்லது பரபரப்பின்றி
ஒரு வண்ணத்துப் பூச்சியின்
மெல்லிய சிறகசைப்பின் சாயலில்
இந்தப் பக்கமாய் நீங்கள்
நகர்ந்து கொண்டிருப்பீர்கள்.

திடீரென அற்ப காரணங்களுக்காய்
இரவிலோ பகலிலோ பிரிவை அறிவித்து
உங்கள் ஒட்டு மொத்த இயக்கத்தையும்
அங்கிருந்தபடியே அவள் நிறுத்துவாள்.
அந்தக் கணத்தில் நீங்கள்
அறிந்துகொள்வீர்கள் அவளின்றி
(பெண்ணின்றி) இல்லவே இல்லை
இந்த இழவெடுத்த வாழ்வென்று,
காதலில் தொலையுங்கள்
காதலில் கரையுங்கள்
உங்கள் இயக்கம் இன்னும் கொஞ்சம்
இனிதாய் இருக்கும்
உங்கள் மரணம் இன்னும் கொஞ்சம்
அழகாய் இருக்கும்.”

– வழிப்போக்கன் 

  நூலாசிரியர் 


Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *