புத்தக முன்னோட்டம்: கவிஞர் ப்ரியா பாஸ்கரனின் இரண்டு தொகுப்புகள்(1)“நினைவில் துடிக்கும் இதயம்”,
(2) “காற்றின் மீதொரு நடனம்”
***************************************************
Image
நினைவில் துடிக்கும் இதயம்:
RST பதிப்பகத்தின் வெளியீடாக வரும் இந்தத் தொகுப்பு எனது உணர்வுகள், பால்ய கால நினைவுகள், வாசிப்பு ஏற்படுத்திய கற்பனைகள் என எல்லாம் கலந்த கலவையின் தொகுப்பு. ஏதோ ஒரு நம்பிக்கையில் என்னுடைய முதல் கவிதைத் தொகுப்பைப் பிரசவித்து இதோ உங்கள் கரங்களில் கொடுக்க உள்ளேன். என் தந்தைக்கு சமர்ப்பிக்கும் இந்தத் தொகுப்பு, மனதிற்கு மிகவும் நெருக்கமானதொரு தொகுப்பு.
Image
காற்றின் மீதொரு நடனம்:
பொள்ளாச்சி இலக்கிய வட்டத்தின் வெளியீடாக வரும் இக்கவிதையின் வாயிலாக எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் காற்றின் மீது இறகாய்ப் பறந்து தவறவிட்ட அன்பின் அணுக்கங்களை, பொக்கிஷமாய்க் காக்கும் நினைவுகளை, மயில் பீலியாய் வருடும் இதங்களை, என் அன்பைச் சுவாசிக்கும் பிரியத்தின் இதயங்களை, வலிகளை எதிர்த்துப் போராடும் தைரியங்களைச் சந்தித்து ஆசுவாசப்படுகிறேன். இதோ அந்தக் காற்றின் மீதொரு நடனத்தை உங்களது பார்வைக்கு அரங்கேற்ற உள்ளேன்.
~ ப்ரியா பாஸ்கரன்.