பாரதி புத்தகாலயம், புதுச்சேரி கிளை சார்பில் இன்று (13.12.2025) மாலை எழுத்தாளர் இரா.கோமதியின் மூன்று நூல்கள் ஜெயராம் ஹோட்டல் நான்காவது தள அரங்கில் வெளியிடப்பட்டது.
பாரதி புத்தகாலயம் பதிப்பாளர் க.நாகராஜன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் ‘பெண்களுக்கு எதிரான மூடநம்பிக்கைகள் நூலினை புதுச்சேரி, முற்போக்கு எழுத்தாளர் கலை இலக்கிய சங்கத்தின் மதிப்புறு தலைவர் பாவலர் சு.சண்முகசுந்தரம் வெளியிட, புதுச்சேரி அறிவியல் இயக்கத்தின் திருமிகு சேகர் பெற்றுக் கொண்டார்.
விட்டு விடுதலையாகு நூலினை அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் தலைவர் எஸ்.வாலண்டினா வெளியிட மூத்த தலைவர் சுதா சுந்தராமன் பெற்றுக் கொண்டார். *எங்கே போகிறது கல்வி நூலினை புதுச்சேரி அறிவியல் இயக்கத்தின் ஆர்.தஷ்ணாமூர்த்தி வெளியிட தமிழாசிரியர் ஆர்.கருணாகரன் பெற்றுக் கொண்டார்.
நிகழ்வில் பாரதி புத்தகாலயம் புதுச்சேரி கிளை என்.கௌஞ்சியப்பன் வாழ்த்துரை வழங்க நூலாசிரியர் இரா.கோமதி ஏற்புரை வழங்கினார். விழாவில், நூற்றுக்கு மேற்பட்ட வாசகர்கள் கலந்துகொண்டனர்.
******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join Facebook: https://www.facebook.com/Book Day – Bharathi Puthakalayam
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.
