மக்கள்தான் வரலாற்றை படைக்கின்றனர் “உலக மக்களின் வரலாறு” – ஸ்ரீ | நூல் மதிப்புரை

தனிமைக்காலத் தவத்தில் புத்தகங்களே வரங்கள்

இன்றைய நூலின் பெயர்: உலக மக்களின் வரலாறு

நூல் ஆசிரியர் : கிறிஸ் ஹார்மன் [ தமிழில் ச சுப்பாராவ் ]

மிக பிரம்மாண்டமான நூல். உலக வரலாறை வாசித்திருப்பீர்கள். நேரு எழுதிய உலக வரலாறு வாசித்திருந்தால் அதில் நீங்கள் சொக்கி போயிருப்பீர்கள். உலக மக்கள் வரலாறு வாசித்தது உண்டா..

இதுவரை நடைபெற்ற போராட்டம் எல்லாம் வர்க்க போராட்டமே என்ற மார்க்ஸின் பிரகடனத்திற்கு வலு சேர்க்கிறது இந்த நூல். கற்காலம் முதல் 21 நூற்றாண்டு வரையிலான மக்களின் வரலாற்றை மிக பிரம்மாண்டமாக பேசுகிறது..

வர்க்கங்கள் உருவான வரலாறு. அரசுகள் எழுந்த வரலாறு. மத்திய காலக்கட்டத்தில் இஸ்லாம் நிலபிரபுத்துவம் போன்றன உருவான வரலாறு. அறிவொளி மூலம் புதிய ஒழுங்கு முறை உருவான வரலாறு. புரட்சிகளும், மார்க்சியமும் உருவான வரலாறு. 21 ம் நூற்றாண்டு பயங்கர வரலாறு..

இப்படி ஏழு பாகங்களில் 48 தலைப்புகள்..

பழைய கற்காலம் முதல் புத்தாயிரம் வரை பொதுமக்கள் நோக்கில் அவர்களின் வரலாற்றை விவரிக்கிறது. மொழிபெயர்ப்பு செய்த தோழர் சுப்பாராவை எத்தனை பாராட்டினாலும் தகும்..

வாசியுங்கள்..
மக்கள்தான் வரலாற்றை படைக்கின்றனர் என்ற தத்துவத்தை உண்மையாக்குகிறது இந்த நூல்..

பக்கம்: 760
விலை: ரூ 595
வெளியீடு: பாரதி புத்தகாலயம்