விர்ஜினா  வூல்ஃபு எழுதிய “த வேவ்ஸ்” என்ற புத்தகத்தின் தாக்கமாக இதை எழுதுகிறேன். எழுத்தாளர்கள் எப்போதும் எழுத்துகளில் அவர்களின் சொந்த வாழ்க்கை சார்ந்தே எழுதுகின்றனார். இதில் துர்கனேவ் தொடங்கி  டால்ஸ்டாய், தஸ்கவஸ்கி என எல்லோரும் அப்படியே. இதில்  20ம் நூற்றாண்டில்  பெண்ணிய எழுத்தாளரான விர்ஜினா  வுல்ஃப்  தேடலும்  சிந்தனையும் இரு வேறு துருவங்கள் பயணிக்கும் பெண்ணாக விர்ஜினா ஓரு கண்ணாடி பெட்டியில் பூட்டி வைத்த பாட்டாம்பூச்சியாக சிறக்கிறார் .  அவர் காலத்தில் பெண்களுக்கு பள்ளி அனுமதியில்லை. இவரின் தந்தையின் நூலகமே இவரை மேம்படுத்தியது. வூல்பின் தந்தையின் மரணம் அதனை தொடர்ந்த அவரின் தாய் இறக்க அவர் மனஅழுத்தால்  பாதிக்கின்றார்.

அதுவரை மன அழுத்தால் இருந்த வூல்ஃபுக்கு எழுத்து உலகம் வேறு வேறு உலகத்தை அறிமுகப்படுத்தியது. அதில் பூளும்பர்க்ஸ் குழுவிலிருந்த லியான்டிரோ வூல்ஃபின் அறிமுகம் கிடைக்கிறது. இது வரை காதலை பேசியவர்களில் மார்க்ஸ்க்கு பிறகு எனக்கு பிடித்த நெருடாவை  விட வலியில் சிக்கிய பட்டாம்பூச்சியை  சுதந்திர காற்றில் பறக்கவிட்டு பூளும்பர்க்ஸ்  நாயகனாக வூல்ஃபின் கணவர் லியனோ வுல்ஃப் காதல் திருமணம் செய்துக்கொள்கிறார். அவளை அவளாக பார்த்த கண்களாக  அவரின் கணவரை பதிவிட்டுயிருக்கிறார் விர்ஜினா வூல்ஃபு.  தன்னுடன்  மன அழுத்தால் உட்பட்ட ஓருவர் இணையக கரம் கோர்க்கிறார்.இதை அவரின் குறிப்புகளில் பிறர் வலிகளை எப்போதும் உண முடியாது. ஆனால் முடிந்தவரை அவர்களோடு நின்று உணர முயல்வது மனிதம். அவளிடம் காதலை விட மனிதத்தை தான் காட்ட முயல்கிறேன்.
அப்போது ஓரு படத்தின் வரி நினைவிற்கு வந்தது.

Women Who Should Be Pretty Pissed Off: Virginia Woolf Will Kick ...
Virginia woolf

“Life is marriage of elements, death is divorce of the same, nothing else, nothing more” இவையெல்லாம்  பிறப்பும் , இறப்பும் மனிதனுக்கு வேறுபடும் அதை வைத்து மட்டுமே ஒருவரின் வாழ்க்கை முடிவு செய்வது ஓரு பொய். நம்மை ஏமாற்றம் செய்யும் செயல். பிறப்பை பேசும் நாம்  இறப்பை எளிதாக எடுத்து கொள்ள முடிவதில்லை. அதை அப்படி பார்பவர்கள் தான் வாழ்க்கையை புரிந்தவர்கள். அப்படியானவராக லியன்ட்ரோ வூல்ஃபு.  இங்கு யாரும் யாருடைய உதவியின்றி வாழ்ந்து முடிவதுதில்லை. இங்கு எல்லாம் யாரோ ஓருவரின்  துணையுடன் தான் வாழ்க்கை பகிர்ந்து கொள்கின்றனார். இதில் சுமை என்று யாரும் கூற முடியாது. அதே சமயத்தில் காதல் என்ற கொடுக்கல் வாங்கலும் அல்ல. அது ஓர் உணர்வு அதை புரிந்தவர்கள் பிறரை புரிந்துக்கொள்ள முயல்கின்றனார். தன்னுடன்  கடைசி வரை பயணித்த நல்ல மனிதர் லியோன்டரோ என்று எழுதி வைத்துவிட்டு வூல்ஃபு தற்கொலை செய்து கொள்கிறார். அவர் எழுதிய கடைசி கட்டுரையில் காதலை அப்படி எழுதி இருப்பார். அதில் விர்ஜினா வாழ்க்கையை புரிந்த ஓருவர் . இவரின்  The waves  என்ற புத்தகம் உண்மையில் ஓரு அலை.

“It’s not one life that i look back upon:I am not one person, I am many people, I do not altogether, know who I am ”
.அலைகள் ஆறு கதாபாத்திரங்களை அறிமுகப்படுத்துகின்றன-மூன்று ஆண்கள் மற்றும் மூன்று பெண்கள்-அவர்கள் ஒரு அன்பான நண்பர் பெர்சிவலின் மரணத்துடன் பிடிக்கிறார்கள். துயரத்தின் வெளிப்புற வெளிப்பாடுகளை விவரிப்பதற்கு பதிலாக, வர்ஜீனியா வூல்ஃப் தனது கதாபாத்திரங்களை உள்ளே இருந்து ஈர்க்கிறார், அவர்களின் எண்ணங்கள் மற்றும் உள்ளுனர்வுகள் மூலம் அவற்றை வெளிப்படுத்துகிறார். இயற்கையின் சோதனைகளாகப் அவர்களின் புரிதல் வளரும்போது, விவரிப்புக் குரல்களில் அதிசயமான ஒற்றுமையுடன் ஒன்றிணைகிறது, இது தனிநபர்களின் தவிர்க்க முடியாத மரணம் மட்டுமல்ல, அனைவரின் கேள்விகளையும் தொடர்பையும் மறுபரிசீலனை செய்கிறது. வர்ஜீனியா வூல்ஃப் புனைகதை கோட்பாடுகளை தனது எழுத்தின் வடிவத்தில் மிகவும் சுருக்கமாகக் பேசும் நாவல், தி வேவ்ஸ் ஒரு அற்புதமான புத்தகம், அதன் படிக்கும் நேரத்தை விட கேள்விகள் எழ எழ பதில்களாக  விரிகிறது. இது ஒரு கவிதை கனவு காட்சி, காட்சி, சோதனை மற்றும் சுவாரசியமும், பரப்பரப்பும் நிறைந்த நாவல்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *