இன்னசென்ட், மலையாள திரை உலகில் காமெடி ஜாம்பவான். மணிசித்திரதாழ் படத்தில் பேய்க்கு பயப்படும் அந்த ஒரு சீன் போதும் (இங்கே சந்திரமுகியிலும் நம்ம தல வடிவேலு கலக்கி இருப்பார்). அந்த மனிதருக்கு திடீரென்று புற்று நோய் வருகிறது. பின்பும் அவரது மனைவிக்கும் வந்துவிட இருவரும் அதிலிருந்து எப்படி அவர்கள் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பினார்கள் என்பதை தோழர் இன்னசென்ட் வாயிலாக நாம் அறிவதே இந்தப் புத்தகம். மிக இயல்பான மொழிபெயர்ப்பு. எழுத்துப் பிழையும் இல்லை. தொடர்ச்சியாக சங்கிகளின் சதி செயல்கள் குறித்தே புத்தகங்களாக வாசிக்க நேர்ந்துவிட இந்தப் புத்தகம் நிச்சயமாக stress relief. வாசித்து பாருங்கள். பாரதி புத்தகாலயம் சிறப்பாக வெளியிட்டிருக்கிறது.