அயல் நாட்டு கதைகள் என்பதால் இவை பற்றிய பல விமர்சனங்கள் முன்மொழிதல் பலருக்கு உண்டு .ஆனால் அதை பல விதமாய் பெண்களின் மன உணர்வுகளை பிரதிபலிக்கும் இந்த கதைகள் எல்லாமே சிறந்ததாகவும் இலக்கியத்தரம் உள்ளதாகவும் சமகால மலேசியப் பெண்களின் வாழ்வியல் கருத்தோட்டங்களை அலசுகின்றன . மனச்சாட்சி வாக்கும் அமைந்துள்ளன .
பெண்ணியம் குறித்து பேசவும் எழுதவும் ஆண் படைப்பாளிகளுக்கு உரிமையில்லை என்று இங்கே சில பெண்ணிய பெண்கள் உரிமை குரல் எழுப்பும் சூழலில் இதுபோன்ற ஒரு முயற்சி பாராட்டுக்குரியது.முன் மாதிரியானது. பெண் விடுதலை பெண்ணுரிமை பெண் சமத்துவம் மற்றும் பெண் கல்விக்காக குரல் கொடுத்தவர்களும் போராடியவர்களும் ஆண்களே என்பதை பெண்ணியம் பேசும் சில சகோதரிகளும் மறந்து விடுவது தான் வேதனைக்குரியது .ஆணாதிக்க சமுதாயத்தில் நிலவிய பெண்ணடிமைத்தனத்தை ஒழிக்கப் போராடியவர்கள் தந்தை பெரியார் அண்ணல் காந்தி ராஜாராம் மோகன்ராய் மகாகவி பாரதியார் அரவிந்தர் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன். இப்படி பட்டியல் நீளும்
சென்ற இரு நூற்றாண்டுகளுக்கு முன் கேரள பெண்களின் நிலையும் இன்றைய கேரள பெண்களின் நிலையையும் ஒப்பிட்டுப் பார்த்தாலே நவீன பெண்ணியவாதிகள் ஆன பெண்களுக்கு .நிலை விளங்கும். .கடந்தகால சமூக வரலாற்றின் இருண்ட பக்கங்களில் மேல் புதுமை வெளிச்சம் பரவியது. எப்படி யாரால் என்பதை அவர்கள் அறிவது அவசியம். புராணங்களும் இதிகாசங்களும் பக்தி பனுவல்களும் பெண்களுக்கு மட்டுமே பத்தினி தன்மையையும் மற்றும் பலதார மணத்தையும் ஏற்றுக்கொண்டு சகித்திருந்தாலும் என்பதை மட்டுமல்ல பல கணவர்களுடன் ஒரு பெண் வாழ்வதும் பத்திரி தனம் என்று ஓதின. கணவன் தீக்குளித்து பத்தினித் நிரூபிக்க வேண்டும் என்று ராமாயண காலத்தில் வலியுறுத்தி ‘கல்லாக மாறக்கடவது ‘ என்று சபிக்கப்பட்டவளும் பெண்தான் . இதில் தவறு செய்தவர்கள் ஆண்கள் ..தேவேந்திரனும் குற்றவாளிதான் . கோதமமுனிவரும் குற்றவாளியே. அபலைப் பெண்ணான அகலிகைக்கு மட்டும் ஆயுள் தண்டனை ..இது என்ன நியாயம் உடன்கட்டை ஏறுதல்.. ஆண்களுக்கு விதிக்கப்பட வில்லையே.. ஏன்
முலைவரியும் தாய்மார்களுக்குத் தானே கேரளத்தில் விதிக்கப்பட்டிருந்தது .பெண்கள் தானே சிறை எடுக்கப்பட்டனர் .பாஞ்சாலி தானே பணயப் பொருளாக்கப்பட்டாள் . இது மட்டுமா. இன்னும் இது போன்ற எண்ணற்ற புராண அநீதிகள் தான் பெண்ணின் கண்ணியத்தைக் காக்கும் அறமெனப் போதிக்கப்பட்டது காலங்காலமாக பெண்ணுக்கு கல்வி மறுக்கப்பட்டு இருந்தது ஆனால் கல்வி கடவுள் மட்டும் சரஸ்வதி ..
தேவதாசிகளும் தேவர்களும் தலித்களும் விலைமகளிர் வரைவின் மகளிரும் கணிகையினரும் ஆடல் பெண்டிரும் பெண்கள் தானே அன்றியும் கைமை என்பது பெண்களுக்கெல்லாம் விதித்தது அன்றைய சமூகம் .இந்தக் கொடுமைகளுக்கெல்லாம் உச்சமான அறியாமை ’ பால்ய விவாகம் ” என்னும் சிறார் திருமணமுறை .
பெண்களை தோட்டிகளாக, துப்புரவுத் தொழிலாளர்களாக ( மலையாளம் : தூப்புக்காரி ) மனித மலம் சுமப்பவளாக இழிவுபடுத்தி அடிமை செய்தது சாமியா சாதியா . இரண்டுக்கும் அடிப்படையானது மதம் .( சமயம் )

அபலைப் பெண்களுக்கு ஆண் ஆதிக்க சமுதாயம் அநீதியும் கொடுமையும் அளித்தது என்றால் அந்த விலங்குகளை பகுத்தறிவின் துணையுடன் உடைத் தெரிந்ததும் சனாதன மூடத்தனங்களை தகர்த்ததும் அறிவும் அன்பும் போர்க்குணமும் விட ஆண்களே .
மலேசிய பெண் எழுத்தாளர்கள் எழுதிய 12 சிறுகதைகளை – மலேசிய பின்னணி கொண்டவை- ரஞ்சனியின் மாம்பழங்கள் கதை வானளவிய கட்டிடங்கள் மலேசியாவின் செல்வச் செழிப்பினை அடையாளப்படுத்துகிற அதே வேளையில் குடியிருக்க வீடற்று சாக்கடை ஓரங்களில் வாழ்கிற குப்பைப் பொறுக்கி மனிதர்களின் எழ்மை நிலையை நுணுக்கமாகச் சொல்கிறது. மங்கள கவுரியின் பெண்மை, யோகியின் தேங்கும் மழைத்துளிகள் , சனா அதிராஜின் கனவுனா என்ன, உதயகுமாரி கிருஷ்ணனின் கதை போன்றவை உளவியல் சார்ந்தவை. இந்தக் கதைகளின் உத்தி மாயதார்த்த வாதம் அல்லது படிமவியல் என்ற வகைப்பாட்டில் அமைக்கப்பட்டிருக்கின்றன. இவற்றைப் பின்நவீனத்துவம் என்றாலும் தகும்.பன்னெடுங்காலமாக மனித குலம் மரணத்தைப் போலவே கனவுகள் குறித்தும் கவலை கொள்கிறது. விடுபடாத அதன் புதிர்களுக்குள் விடை தேடி அலைகிறது. அது குறித்த அச்சங்களும் மர்மங்களும் மனிதர்களைத் துரத்திக் கொண்டேதான் இருக்கின்றன. இந்தக் கதைகள் வாசகனை பிரமிப்பில் ஆழ்த்துகின்றன. புதுமைப்பித்தனை நினைவுபடுத்துகின்றன. பல கதைகள் வாழ்வியல் பிரச்சினைகள் பற்ரிப் பேசுகின்றன. வாணி ஜெயத்தின் சிறுகதை ஆண் பெண் உறவுகளுக்குள் இருக்கும் முன்மொழிதல்களையும் கட்டமைப்பையும் தகர்க்கிறது .. பாமாவின் சிறுகதை பாலியல், தனிமனித உணர்வுகள் குறித்தும் பெண்களைத்தாக்கும் மார்புப் புற்று நோய் குறித்தும் கருத்துக்களைக் கொண்டிருந்த போதும் விரசங்களோ ஆபாசமோ இல்லாமல் மனித இயல்புக்கு மீறியோ மாறாகவோ உறுத்தவில்லை.. மார்பகப்புற்று நோயாளியான அம்மாவின் ம்ன உறுதி., தைரியமாக நோயை எதிர் கொள்ளும் தன்னம்பிக்கை, மார்க்கச்சு என்ற் குறியீட்டின் மூலம் உணர்த்தப்படுகிறது. கதை சொல்லியான மகளுடன் அந்தத் தாய் கொண்டுள்ள தோழமை மிக்கப் பாசத்தையும் வியந்து பாராட்ட்த் தோன்றுகிறது. இந்தக்கதையைப் படித்து முடிக்கிற போது இனம் புரியாத வலி இதயத்தில் முள்ளாய் தைக்கிறது.
சுப்ரபாரதி மணியன் இந்த நூலினைத் தொகுத்திருக்கிறார் .மலேசியாவில் வாழக்கூடிய தமிழ் பெண்களின் நிலைமை அங்கு சக தொழிலாளியாக இருக்க கூடிய பிற மொழி பேசக்கூடிய பெண்கள் ..தினசரி வாழ்க்கையின் அவதிக்குள் மாட்டிக்கொண்டு தவிக்கிறார்கள் .சின்ன சின்ன விஷயங்களால் மன அவசங்களுக்கு உண்டாக்கி தங்களை சிதைத்துக் கொள்கிற பெண்கள் ..குடும்பத்தின் ஆதாரமாக பெண்கள் இருக்க வேண்டிய கட்டாய நிலை ..தமிழ் பெண்கள் வேறு கலாச்சார பெண்களின் பார்வையில் பார்க்கப்படுகிற பார்வை ..ஒருவகையில் அடித்தளமான குடும்பச் சூழலையும் மீதி வெளியில் அங்கிருக்கிற தமிழ் பெண்கள் செயல்பட வேண்டிய பல்வேறு விஷயங்களை இந்த சிறுகதைத் தொகுப்பு மேலிடுகிறது.. பல கதைகளில் நுணுக்கமான விவரிப்புகள் உள்ளன.. நுணுக்கமான கலாச்சார மோதல்கள் தென்படுகின்றன. சில வகையில் தமிழ் கதைகள் அறிந்து கொள்ள வேண்டிய பல நுணுக்கங்களை இந்த மலேசிய பெண் எழுத்தாளர்களின் கதைகள் கொண்டிருக்கின்றன என்று சொல்லலாம்
இலக்கியத்தின் வகையில் பெண்களின் படைப்பு சார்ந்த சிறு கதைகள் உச்சத்தில் இருக்கிற காலகட்டத்தில் மலேசியாப் பெண்கள் இப்படி தங்கள் படைப்புகளை சிறுகதை மூலம் ஆகியிருப்பது மலேசிய இலக்கியம் குறித்த மதிப்பீட்டை மேலும் உயர்த்துகிறது ( ரூபாய் 100 கவிநிலா பதிப்பகம் திருப்பூர் வெளியீடு )
பொள்ளாச்சி வாமனன்

