நூல் அறிமுகம் : ஒளிவிளக்கு – பெரணமல்லூர் சேகரன்

நூல் அறிமுகம் : ஒளிவிளக்கு – பெரணமல்லூர் சேகரன்

தில்லி விவசாயிகள் இயக்கம்:
வரவிருக்கும் காலத்திற்கான
ஒளிவிளக்கு
12 விவசாய சங்கத் தலைவர்களின் அனுபவச் சித்திரம்
தமிழில்..வீ.பா. கணேசன்
பாரதி புத்தகாலயம்
 2020 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 26 ஆம் நாள் துவங்கி 2021 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 11 ஆம் நாள் வரையிலான வரலாற்றுச் சிறப்புமிக்க தில்லி விவசாயிகள் போராட்ட அனுபவங்களை விவசாயிகள் சங்க அகில இந்திய தலைவர்கள் 12 பேர் பகிர்ந்துகொண்ட முக்கியத்துவம் வாய்ந்த நூல் இது.
இந்நூலின் அறிமுகவுரையில் அகில இந்திய விவசாயிகள் சங்க தமிழ்நாடு மாநிலத் தலைவர் பெ. சண்முகம் “ராமாயணம், மகாபாரதம் போன்ற இதிகாசங்களைத் தலைமுறைகளைத் தாண்டி மனித சமூகத்திற்குள் தொடர்ந்து கடத்திச் செல்லும் அதிசயம்” என வர்ணித்துள்ளார். ஏனெனில் இந்திய வரலாற்றில் இதுவரை விவசாயிகள் இந்தளவிற்கு ஒன்றுபட்டு தலைநகர் தில்லியில் ஓராண்டுக்கும் மேலாக விவசாயத்தைக் காக்கப் போராடி வெற்றி கண்டது கண்டிராதது.
அகில இந்திய விவசாயிகள் சங்க தேசிய நிதிச் செயலாளர் கிருஷ்ணபிரசாத் தமது முன்னுரையில் “எதேச்சாதிகாரத்துக்கு ஏற்பட்ட மரண அடி” எனக் குறிப்பிட்டுள்ளது சாலப் பொருத்தமானதே. ஏனெனில் போராட்டத் துவக்க காலத்தில் ஒன்றிய அரசு, வேளாண் திருத்தச் சட்டங்களில் ஒரு திருத்தத்தைக் கூட செய்ய மாட்டோம் என அடம் பிடித்தது. ஆனால் அதே அரசுதான் இறுதியில் விவசாயிகள் விரோத வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறுவதாக அறிவித்தது.
அகில இந்திய விவசாயிகள் சங்க அகில இந்திய பொதுச் செயலாளர் ஹன்னன் முல்லா,  மகத்தான விவசாயிகள் போராட்டம் துவங்கி வளர்ந்து வீச்சாக நடைபெற்று வெற்றி கண்ட வரலாற்றை விவரித்துள்ளார். சம்யுக்த கிசான் மோர்ச்சா உருவானதையும் அதே நேரத்தில் அவ்வமைப்பின் பலமே அகில இந்திய விவசாயிகள் சங்கம் என்பதை ஆதாரப்பூர்வமாக நிறுவுகிறார். 13 மாத காலப்போராட்டத்தில் வேளாண் விரோத சட்டங்களைத் திரும்பப் பெறுதல்,. விவசாய விளைபொருட்களுக்கு ஆதார விலை, மின்சார சட்டம் ரத்து, விவசாயிகளின் விவசாய எச்சங்களை எரிக்க சுற்றுச்சூழல் விலக்கு என கோரிக்கைகளை இறுதிப்படுத்தி நடைபெற்ற போராட்டங்களினூடே ஒன்றிய அரசு 11 முறை பேச்சுவார்த்தை நடத்தியும் எந்த முடிவும் எட்டப்படவில்லை‌ என்பதை விளக்கும் ஹன்னன்முல்லா அரசு வழங்கிய தண்ணீரைக் கூட குடிக்காமல் சங்கத் தலைவர்கள் உறுதியுடன் இருந்ததைப் பதிவு செய்வதுடன் பேட்டியில் “கோழி அடைகாக்க உட்காரச் செய்தது.  ஆனால் முட்டைதான் கிடைக்கவில்லை” எனத் தெரிவித்ததைக் குறிப்பிடுவது பொருத்தமானதே. 2022 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 22 ஆம் நாள் இறுதிக்கட்ட பேச்சுவார்த்தைக்குப்பின் இனி அரசுடன் பேசுவதில்லை என எஸ்.கே.எம். எடுத்த முடிவு சரியானதே என்பது தலைவர்களின் மௌனம் அரசின் மீதான அழுத்தம் ஏற்படுத்தியதும் அதன் விளைவாக ஒன்றிய அரசு அடி பணிந்ததும் வரலாறானது எனின் மிகையன்று.
அகில இந்திய விவசாயிகள் சங்க அகில இந்திய தலைவர் அசோக் தாவ்லே தமது கட்டுரையில் விவசாயிகள் போராட்டத்தில் எதிர்த்துப் போராடிய அம்சங்களைப் பட்டியலிடுகிறார். அரசு எந்திரத்தின் கண்ணீர்ப்புகை, தண்ணீர் பீச்சியடிப்பு,  பொய் வழக்குகள், தடியடி, அவதூறுகள், கடும் குளிர், வெயில், கொட்டும் மழை, கோவிட் பெருந்தொற்று, எல்லாவற்றுக்கும் மேலாக அம்பான  அதானிக்களிடம் விவசாயத்தை வெள்ளித்தட்டில் கொடுப்பது என இவற்றையெல்லாம் எதிர்த்துத் தான் விவசாயிகள் போராடினர் எனக்குறிப்பிட்டுள்ளது உள்ளங்கை நெல்லிக்கனி.
இந்தப் போராட்டத்தின் மூலமாக மட்டுமே ‘லங்கார் கலாச்சாரத்தை நம்மால் உணர முடிந்துள்ளது. போராட்டக்காலத்தில் எவ்வளவு பேர் வந்தாலும் அவர்களுக்குத் தேவையான உணவு, குடிநீர் உள்ளிட்டவைகளை தங்கு தடையின்றி வழங்கிய அற்புதமான அனுபவமே ‘லங்கார் கலாச்சாரம்’  இதுவரை தான் பார்த்திராத பிரம்மாண்டமான விவசாயிகள் பேரணியை 27.09.2021 பாரத் பந்த் அன்று கண்டதாகப் பதிவு செய்கிறார் அசோக் தாவ்லே.
மக்களின் எதிரிகளின் மனதில் அச்சத்தை விதைத்து வென்றெடுத்த ஒரு வெற்றி என வர்ணிக்கிறார் அகில இந்திய விவசாயிகள் சங்க இணைச் செயலாளர் விஜு கிருஷ்ணன். “எதேச்சதிகார ஆட்சியாளர்கள் குனிந்த தலையோடு போராட்டத்தின் முக்கியக் கோரிக்கைகளை ஏற்றுக் கொள்ள வேண்டியதாயிற்று ” எனப் பெருமையுடன் தமது கட்டுரையில் பகிர்ந்து கொண்டுள்ளார். தேர்தல் வாக்குறுதிகளை அள்ளி வீசிய பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தபின் அவற்றைக் காலில் போட்டு மிதித்து விவசாயிகளை வஞ்சித்து கொடுமைகளைப் பட்டியலிடுகிறார் விஜூ கிருஷ்ணன். விவசாயிகளை பயங்கரவாதிகள், தேச துரோகிகள், காலிஸ்தான் கள், பாக்கிஸ்தான் ஏஜெண்டுகள், சீன ஏஜெண்டுகள், குண்டர்கள், நகர்ப்புற நக்சல்கள் என ஆளும் வர்க்கம் முத்திரை குத்தியது நினைவுகூறும் விஜூ கிருஷ்ணன் விவசாயிகள் இயக்கம் அனைத்துத் தடைகளையும், அனைத்து அவதூறுகளையும் தகர்த்து யுத்தங்களை வென்றதை நிறுவுகிறார்.
இதுவரை கண்டிராத சர்வதேச ஒற்றுமை உலக தொழிற்சங்க அமைப்பு, சர்வதேச தொழிற்சங்க அமைப்பு, பிரேசிலின் நிலமற்ற தொழிலாளர் இயக்கம், அம்பேத்கர் ஸ்டடி சர்க்கிள், முற்போக்கு சர்வதேச அமைப்பு, வர்ஜீனியா முற்போக்கு அமைப்பு மற்றும் சீக்கியர்களின் பல்வேறு அமைப்புகள் என பரந்துபட்ட ஆதரவு பெருகியதையும், பல்வேறு நாடுகளின் இந்தியத் தூதரகங்கள் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றதையும், டிராக்டர் பேரணி நடைபெற்றதையும், பிரிட்டன் பாராளுமன்றத்தில் இப்போராட்டம் குறித்து விவாதித்தையம், கனடா நாடு போராட்ட ஆதரவு அறிக்கை வெளியிட்டதையும் குறிப்பிட்டு வியப்பில் ஆழ்த்துகிறார்.
விவசாயிகள் இயக்கத்தில் காஜிப்பூர் எல்லை, அதன் முக்கியத்துவமும் பங்களிப்பும் என்ற கட்டுரையில் அகில இந்திய விவசாயிகள் சங்க மத்திய கவுன்சில் உறுப்பினர் டி.பி.சிங் காஜிப்பூர் எல்லையில் தங்கள் இருப்பப் பதிவு செய்வதில் இடதுசாரி விவசாய அமைப்புகள் வெற்றி பெற்றதைக் குறிப்பிடுகிறார். 5000 தலித் பெண்கள் குழுவும் 25 மாவட்டங்களிலிருந்து மண்ணைச் சேகரித்துக் கொண்டு உணர்வுப் பூர்வமாக திரண்டதைக் குறிப்பிட்டு மெய்சிலிர்க்க வைக்கிறார்.
பஞ்சாப் விவசாயிகள் சங்கத்தின் சார்பில் மேஜர் சிங் எழுதியுள்ள கட்டுரையில், போராட்டப் பரப்புரையில் மேற்கொண்ட உத்தி ஒன்றைக் குறிப்பிடுகிறார். “அரசு மற்றும் தனியார் பணியில் இருக்கும் மணமகன்களஇடம் கூட நிலம் இருக்கிறதா என கேட்கப்படுகிறது. இந்நிலையில் மூன்று சட்டங்களும் அமுலானால் சொந்த வயலில் விவசாயிகள் அடிமைகளாகத் தள்ளபபடும் அபாயம் உள்ளது” எனப்பேசியபோது இயல்பாகவே ஆவேசமும் கோபமும் எழத்தானே செய்யும்.
காஜிப்பூர், மேவாட், வழியாகப் பல்லால் முதல் ஷாஜஹான்பூர் வரை ஒற்றுமைக்கான கொண்டாட்டமும் மன உறுதிக்காகவம்  எனும் கட்டுரையில்,போராட்டக் காலத்தில் போராட்டக் களத்தில் மத்தியப்பிரதேசம் ரேவாவில் நடைபெற்ற விவசாயிகள் மகாபஞ்சாயத்தைக் குறிப்பிட்டு அதில் சச்சின்-அஸ்மா இளஞ்சோடி காதல் திருமணம் எளிய முறையில் நடத்தப்பட்டதையும் குறிப்பிடுகிறார்.
விவசாயிகள் இயக்கம்:எதிர்காலப் போராட்டங்களுக்குப் பாடம், உத்வேகம் மற்றும் வழிகாட்டி எனும் தமது கட்டுரையில் விக்ரம் சிங் குறிப்பிடுகிறார்
களத்தில் போராடும் விவசாயிகளுள் பெண் விவசாயயைப் பார்த்து ஊடகவியலாளர் ” ஏனிந்தப் போராட்டம்? விவசாய விளைபொருட்களை அரசு கொள்முதல் செய்வதில் தோல்வி கண்ட நிலையில் தனியார் கொள்முதல் நல்லதுதானே? எனக் கேட்கிறார். அதற்குப் பெண் விவசாயி,
” மகனே, எங்களுக்குத் தனியார்மய அனுபவம் உள்ளது. அம்பானி ஜஇயஓவஉடன் சந்தையில் நுழைந்தபோது அனைத்தும் இலவசமாக வழங்கப்பட்டது. அதனால் அனைவரும் ஜியோவிற்கு மாறினர். ஓர் ஆண்டுக்குப் பின் பெரும்பாலான கைபேசி நிறுவனங்களைச் சந்தையிலிருந்து துடைத்தெறிந்தபின் ஜியோ பெருந்தொகையை வாடிக்கையாளர்களிடம் இன்றளவும் வசூலித்து வருகிறது. விவசாயமும் அப்படித்தான் ஆகும். கைபேசி இல்லாமல் வாழ்ந்துவிடலாம்; உணவு இல்லாமல் வாழவே முடியாது.” என்றதும் வாயடைத்துப் போனார் ஊடகவியலாளர்.
2021ஆம் ஆண்டு ஜனவரி 26 அன்று சுதந்திர இந்திய வரலாற்றில் முதன்முறையாக இந்தியக் குடியரசை நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் கொண்டாடினார்கள். தேசியக் கொடியுடன் செங்கோட்டையை நோக்கி நடைபெற்ற டிராக்டர் பேரணியைச் சீர்குலைவு செய்வதற்கு பகீரதப் பிரயத்தனம் செய்தது. அக்களத்தில் சில தவறுகளை ஆளும் வர்க்கமே தமது ஆட்கள் மூலம் செய்து அவற்றை விவசாயிகள் மீது போட்டது‌. அதில் ஒன்றுதான் தில்லி செங்கோட்டையில் தேசியக் கொடியை இறக்கிவிட்டு மத சம்பந்தமான கொடியை ஏற்றியது. அனைத்து நடவடிக்கைகளையும் எஸ்.கே.எம். முறியடித்தது. எல்லாவற்றுக்கும் மேலாக விவசாயிகள் மட்டுமில்லாமல் தொழிலாளர்களும் அங்கு முழக்கமிட்டு வர்க்க ஒற்றுமையைப் பறைசாற்றியதைக் குறிப்பிடுகிறார் கட்டுரையாளர்.
பெண்கள் பங்குபெறாத போராட்டம் எதுவும் வெற்றி பெற்றதாக வரலாற்றில்லை. இப்போராட்டத்தில் பெண்களின் பங்களிப்பை விவரிக்கிறார் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் துணைத்தலைவர் ஜக்மதி சங்வான். பெண்கள் இனி வெறும் பார்வையாளர்கள் அவல். அவர்கள் செயல்வீரர்கள். சட்டம், சுகாதாரம், விளையாட்டுக் குழுக்களின் ஒரு பகுதியாகவும் இருந்தனர் எனக்கூறும் சங்வான், போலீஸ் மோதலில்  சர்க்கிள், முற்போக்கு சர்வதேச அமைப்பு, வர்ஜீனியா முற்போக்கு அமைப்பு மற்றும் சீக்கியர்களின் பல்வேறு அமைப்புகள் என பரந்துபட்ட ஆதரவு பெருகியதையும், பல்வேறு நாடுகளின் இந்தியத் தூதரகங்கள் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றதையும், டிராக்டர் பேரணி நடைபெற்றதையும், பிரிட்டன் பாராளுமன்றத்தில் இப்போராட்டம் குறித்து விவாதித்தையம், கனடா நாடு போராட்ட ஆதரவு அறிக்கை வெளியிட்டதையும் குறிப்பிட்டு வியப்பில் ஆழ்த்துகிறார்.

விவசாயிகள் இயக்கத்தில் காஜிப்பூர் எல்லை, அதன் முக்கியத்துவமும் பங்களிப்பும் என்ற கட்டுரையில் அகில இந்திய விவசாயிகள் சங்க மத்திய கவுன்சில் உறுப்பினர் டி.பி.சிங் காஜிப்பூர் எல்லையில் தங்கள் இருப்பப் பதிவு செய்வதில் இடதுசாரி விவசாய அமைப்புகள் வெற்றி பெற்றதைக் குறிப்பிடுகிறார். 5000 தலித் பெண்கள் குழுவும் 25 மாவட்டங்களிலிருந்து மண்ணைச் சேகரித்துக் கொண்டு உணர்வுப் பூர்வமாக திரண்டதைக் குறிப்பிட்டு மெய்சிலிர்க்க வைக்கிறார்.

பஞ்சாப் விவசாயிகள் சங்கத்தின் சார்பில் மேஜர் சிங் எழுதியுள்ள கட்டுரையில், போராட்டப் பரப்புரையில் மேற்கொண்ட உத்தி ஒன்றைக் குறிப்பிடுகிறார். “அரசு மற்றும் தனியார் பணியில் இருக்கும் மணமகன்களஇடம் கூட நிலம் இருக்கிறதா என கேட்கப்படுகிறது. இந்நிலையில் மூன்று சட்டங்களும் அமுலானால் சொந்த வயலில் விவசாயிகள் அடிமைகளாகத் தள்ளபபடும் அபாயம் உள்ளது” எனப்பேசியபோது இயல்பாகவே ஆவேசமும் கோபமும் எழத்தானே செய்யும்.

காஜிப்பூர், மேவாட், வழியாகப் பல்லால் முதல் ஷாஜஹான்பூர் வரை ஒற்றுமைக்கான கொண்டாட்டமும் மன உறுதிக்காகவம்  எனும் கட்டுரையில்,போராட்டக் காலத்தில் போராட்டக் களத்தில் மத்தியப்பிரதேசம் ரேவாவில் நடைபெற்ற விவசாயிகள் மகாபஞ்சாயத்தைக் குறிப்பிட்டு அதில் சச்சின்-அஸ்மா இளஞ்சோடி காதல் திருமணம் எளிய முறையில் நடத்தப்பட்டதையும் குறிப்பிடுகிறார்.

விவசாயிகள் இயக்கம்:எதிர்காலப் போராட்டங்களுக்குப் பாடம், உத்வேகம் மற்றும் வழிகாட்டி எனும் தமது கட்டுரையில் விக்ரம் சிங் குறிப்பிடுகிறார்.

களத்தில் போராடும் விவசாயிகளுள் பெண் விவசாயயைப் பார்த்து ஊடகவியலாளர் ” ஏனிந்தப் போராட்டம்? விவசாய விளைபொருட்களை அரசு கொள்முதல் செய்வதில் தோல்வி கண்ட நிலையில் தனியார் கொள்முதல் நல்லதுதானே? எனக் கேட்கிறார். அதற்குப் பெண் விவசாயி,
” மகனே, எங்களுக்குத் தனியார்மய அனுபவம் உள்ளது. அம்பானி ஜஇயஓவஉடன் சந்தையில் நுழைந்தபோது அனைத்தும் இலவசமாக வழங்கப்பட்டது. அதனால் அனைவரும் ஜியோவிற்கு மாறினர். ஓர் ஆண்டுக்குப் பின் பெரும்பாலான கைபேசி நிறுவனங்களைச் சந்தையிலிருந்து துடைத்தெறிந்தபின் ஜியோ பெருந்தொகையை வாடிக்கையாளர்களிடம் இன்றளவும் வசூலித்து வருகிறது. விவசாயமும் அப்படித்தான் ஆகும். கைபேசி இல்லாமல் வாழ்ந்துவிடலாம்; உணவு இல்லாமல் வாழவே முடியாது.” என்றதும் வாயடைத்துப் போனார் ஊடகவியலாளர்.

2021ஆம் ஆண்டு ஜனவரி 26 அன்று சுதந்திர இந்திய வரலாற்றில் முதன்முறையாக இந்தியக் குடியரசை நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் கொண்டாடினார்கள். தேசியக் கொடியுடன் செங்கோட்டையை நோக்கி நடைபெற்ற டிராக்டர் பேரணியைச் சீர்குலைவு செய்வதற்கு பகீரதப் பிரயத்தனம் செய்தது. அக்களத்தில் சில தவறுகளை ஆளும் வர்க்கமே தமது ஆட்கள் மூலம் செய்து அவற்றை விவசாயிகள் மீது போட்டது‌. அதில் ஒன்றுதான் தில்லி செங்கோட்டையில் தேசியக் கொடியை இறக்கிவிட்டு மத சம்பந்தமான கொடியை ஏற்றியது. அனைத்து நடவடிக்கைகளையும் எஸ்.கே.எம். முறியடித்தது. எல்லாவற்றுக்கும் மேலாக விவசாயிகள் மட்டுமில்லாமல் தொழிலாளர்களும் அங்கு முழக்கமிட்டு வர்க்க ஒற்றுமையைப் பறைசாற்றியதைக் குறிப்பிடுகிறார் கட்டுரையாளர்.

பெண்கள் பங்குபெறாத போராட்டம் எதுவும் வெற்றி பெற்றதாக வரலாற்றில்லை. இப்போராட்டத்தில் பெண்களின் பங்களிப்பை விவரிக்கிறார் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் துணைத்தலைவர் ஜக்மதி சங்வான். பெண்கள் இனி வெறும் பார்வையாளர்கள் அவல். அவர்கள் செயல்வீரர்கள். சட்டம், சுகாதாரம், விளையாட்டுக் குழுக்களின் ஒரு பகுதியாகவும் இருந்தனர் எனக்கூறும் சங்வான், போலீஸ் மோதலில் ஹரியானா பெண் விவசாயி உயிர்த்தியாகம் செய்ததைப் பதிவு செய்துள்ளது உணர்வுப்பூர்வமானது.

தில்லி விவசாயிகள் இயக்கத்தில் ஷாஜஹான்பூர் கோடா எல்லையில் ராஜஸ்தான் விவசாயிகள் பங்கு மகத்தானது. இதை ராஜஸ்தான் விவசாயிகள் சங்கத் தலைவர் சாகன்லால் சவுத்ரி விவரிக்கிறார். ராஜஸ்தான் விவசாயிகள் உள்ளூர் பிரச்சனைகளுக்குத் தொடர்ந்து போராடி வருபவர்கள். அவர்களது தீரம்மிக்க போராட்டத்தின் மூலம் 50000 ரூபாய் வரையிலான கடன் தள்ளுபடி பெற்றனர் என்பதைக் குறிப்பிடுகிறார் சாகன்லால் சவுத்ரி. ஷாஜஹான்பூர் கோடா எல்லையில் ராஜஸ்தான் விவசாயிகளுடன் ஹரியான, காஷ்மீர், குஜராத், மகாராஷ்டிரா, கேரளா, ஒடிசா, மேற்கு வங்கம், தமிழ்நாடு போன்ற மாநிலங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் பெருமளவிலான அணிதிரட்டலில் சாதனை படைத்தனர் விவசாயிகள். இம்முனையில் விவசாயிகள் ” மூன்று சட்டங்களையும் அகற்றிய பின்னரே நாங்கள் வீட்டிற்கு வருவோம். இல்லையெனில் எங்கள் சடலங்கள்தான் வீட்டுக்கு வரும்” என அறிவித்தது மெய்சிலிர்க்க வைக்கிறது.
பஞ்சாப் அன்றும் இன்றும்-தில்லி நோக்கிய பேரணி குறித்த ஒரு விவரிப்பு தொடர்பாக பஞ்சாப் விவசாயிகள் சங்க மாநிலச் செயலாளர் பல்ஜீத்சிங் கிரேவால் தமது கட்டுரையில் விவரிக்கிறார்.
“நாம் தில்லியில் இருக்க வேண்டியிருந்தால் நீங்கள் என்னுடன் இருப்பீர்களா? நீங்கள் தயாரா? இந்த இயக்கம் நம் உயிரையும் எடுக்கலாம்!” என்று பல்ஜீத்சிங் கிரேவால் விவசாயிகளைப் பார்த்துக் கூறினார். அவர்கள் ஒருமித்த குரலில் “தோழரே..மோர்ச்சா எங்கு நிற்கிறதோ அங்கெல்லாம் நாங்கள் இருப்போம். தங்குவதை நீட்டிப்போம்” என்று கூறியது விவசாயிகளின் ஒருமைப்பாட்டையும் உறுதியையும் உணர்த்துகிறது. இந்த வீரம்மிக்க வீரியம் மிக்க போராட்டத்தால் தான் வெற்றி கிட்டியது. போராட்டத்துக்குப்பின் விளைவுகளான நலிவான பொருளாதார நிலை, போராட்டத்தில் கோடிக்கணக்கில் பணம் செலவானது, மிகப்பெரிய அளவில் டீசல் செலவானது, பல டிராக்டர்கள் பழுதுபார்க்க முடியாத அளவிற்கு உபயோகமற்றுப் போனது என கசப்பான அனுபவங்கள் இருந்தபோதும் மோடி அரசை உழைக்கம் வர்க்கத்துக்கு எதிரான அரசென மதிப்பீடு செய்ததில் விவசாயிகள் வெற்றி கண்டு தெளிவு பெற்றுள்ளனர் என்கிறார் பல்ஜீத்சிங் கிரேவால்.
மத்தியப் பிரதேச விவசாயிகள் நடத்திய போராட்டத்தை நினைவுகூறும் மத்தியப் பிரதேச விவசாயிகள் சங்க துணைத்தலைவர் ராம்நாராயண் குராரியா 2017 ஆம் ஆண்டு ஜுன் மாதம் 6 ஆம் நாள் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் 6 விவசாயிகள் பலியானதைக் குறிப்பிட்டு அந்நிகழ்விற்குப்பின் 212 விவசாய அமைப்புகள் ஒன்றிணைந்து அகில இந்திய விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்புக்குழு உருவானதை விவரிக்கிறார். மகத்தான இந்த ஒற்றுமைக்கு ஆறு தோழர்கள் இன்னுயிர் நீத்தனர் என்பது சாதாரண செய்தியன்று.
தில்லி விவசாயிகள் போராட்டக்காலத்தில் ஒன்றிய உள்துறை இணை அமைச்சர் அஜய்
மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா 2021 அக்டோபர் 3 அன்று தமது காரேற்றிப் படுகொலை செய்யப்பட்ட 4 விவசாயிகளின் அஸ்தி 6000 கிலோமீட்டர் பயணம் செய்து கூட்டங்கள் நடத்தப்பட்டதையும், விவசாயிகளைப் போராட்ட உணர்வு மங்காமல் இருக்க 20 நாட்கள் 835 கிராமங்களில் 92500 உறுப்பினர்கள் வெற்றிப் பரப்புரை மேற்கொண்டதையும் பதிவு செய்துள்ளார்.
இறுதியாக போராட்டத்தின் கதை என்ற தலைப்பில் அகில இந்திய விவசாயிகள் சங்க மைய அலுவலகத் தோழர் மனோஜ்குமார் தமது கட்டுரையில் சிங்கு, திக்ரி, ஜெய்ப்பூர் நெடுஞ்சாலை, ஷாஜஹான்பூர் கோடா, தில்லி ஜஜ்ஜார் தன்சா சாலை என அனைத்து முனைகளிலும் அகில இந்திய விவசாயிகள் சங்கம் நடத்திய உள்ளிருப்பு போராட்டத்தை சிலாகித்துக் குறிப்பிடுகிறார். போராட்டக் காலத்தில் நாட்டுப்புறக் கலைஞர்கள் மற்றும் இசைக்குழுவினர் தங்களது நிகழ்ச்சிகள் மூலம் விவசாயிகுக்கு உத்வேகமூட்டியதைக் குறிப்பிடுகிறார் கட்டுரையாளர். போராட்டக் காலத்தில் அமைக்கப்பட்ட மருத்துவமனைகள், பள்ளிகள், நூலகங்கள் ஆகியவை முன்மாதிரயான கிராமங்களின் தோற்றத்தை அளித்தன என்கிறார் மனோஜ்குமார். மேலும் உலகம் முழுவதிலுமிருந்து வந்த நிதியுதவி, அனைவரையும் உள்ளடக்கிய போராட்டம், தன்னார்வலர்களின் நேர்மை மற்றும் முயற்சிகள், இளைஞர்களின் சுய உந்துதல், வணிகம் உள்ளிட்ட சொந்தப் பணிகளை விட்டுவிட்டு போராட்டங்களில் பங்கேற்றது, விவசாயிகளுக்கு அத்தியாவசியப் பண்டங்களை வழங்கியது போன்ற சிறப்பம்சங்களைப் பட்டியலிட்டுள்ளார் கட்டுரையாளர்‌ எல்லாவற்றுக்கும் மேலாக விவசாயிகளின் கால்களை மசாஜ் செய்வது, காலணிகளை சரிசெய்து தருவது உள்ளிட்ட உணர்வுமயமான பணிகளையும் சேவையாக ஏற்றுக் கொண்டு செய்ததைக் குறிப்பிட்டு நெகிழச் செய்கிறார் மனோஜ்குமார்.
ஒட்டுமொத்த நூலையும் வாசித்து முடிக்கும்போது மிகப்பெரிய நம்பிக்கை நிழலாடுகிறது. எண்ணிப்பார்த்திராத விவசாயிக்ள் தொழிலாளிகள் வர்க்க ஒற்றுமை, ஒன்றுபட்ட நெடிய போராட்டம், ஈட்டிய வெற்றி போன்றவை இந்தியாவிலும சமூக மாற்றம் சாத்தியமே என்னும் நம்பிக்கை நங்கூரமிடுகிறது. அதன் முக்கியமான மைல்கல்லாக தில்லி விவசாயிகள் போராட்டம் வீரவரலாறு படைத்துள்ளது எனின் மிகையன்று.
மனிதகுலம் அழியாமல் பாதுகாக்கப்பட உணவு இன்றியமையாதது. அத்தகைய உணவைப் படைக்கும் விவசாயிகளின் மகத்தான போராட்டம் அடுத்த இலக்கை நோக்கிச் செல்லும் வகையில் தில்லி கோட்டை முற்றுகைப் போரை ஏப்ரல் 4 அன்று நடதத உள்ள நிலையில் அர்த்த அடர்த்தியுடன் அப்போரை நிகழ்த்தவும் வெற்றி காணவும் வழிவகை செய்ய வல்லமை மிக்க இந்நூலை வாங்கிப் படிப்பதும் பரப்பப் செய்வதும் அனைத்து உழைப்பாளிகளின் உன்னதத் கடமை.
..பெரணமல்லூர் சேகரன்
Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *