https://tamil.thehindu.com/general/education/article25598422.ece
கடந்த மூன்று ஆண்டுகால நீட் தேர்வு அனுபவம் நம் மாணவர்களைச் சூறாவளியாகச் சுழற்றி அடித்துள்ளது. நீட் தேர்வை ஏற்பதா எதிர்ப்பதா என்ற நிலையிலிருந்து நீட் தேர்வுக்குத் தங்களைத் தயார்படுத்திக் கொள்வது என்ற கட்டத்துக்கு ஒட்டுமொத்த மாணவ சமூகமும் நகர்த்தப்பட்டிருக்கிறது. பாடத்திட்ட மாற்றம் நீட் தேர்வுக்கான சிறப்புப் பயிற்சி வகுப்புகள்… எனத் தமிழகப் பள்ளிக் கல்வித்துறையும் ஏகப்பட்ட மாற்றங்களைச் செய்துவருகிறது. இந்நிலையில் மருத்துவராகும் கனவைச் சுமந்து நிற்கும் இந்திய மாணவர்களின் முன்னால் விஸ்வரூபம் எடுத்து நிற்கும் சவால் ”நீட்” மட்டுமல்ல; ஒட்டுமொத்த இந்தியாவின் மருத்துவக் கல்வி, மருத்துவ சேவை. சுகாதாரத்துக்கு அச்சாணியாக விளங்கும் இந்திய மருத்துவ கவுன்சில் தற்போது அபாயகரமான நிலைக்குள் அமிழ்த்தப்பட்டிருக்கிறது. இவற்றைப் பல கோணங்களில் அலசி ஆராய்கிறது.
எழுத்தாளர் பு.பா.பிரின்ஸ் கஜேந்திரபாபு அவர்களின் தொகுப்பு நூலான ”மறுக்கப்படும் மருத்துவம்” நேற்று சென்னை பல்கலைக்கழகத்தில் வெளியிடப்பட்டது. அந்நூலைப் பற்றிய விவரம் இன்று இந்து தமிழ் திசை நாளிதழில் வெளியாகியுள்ளது.
இந்த நூலினை பாரதி புத்தகலாயம் வெளியிட்டுள்ளது. நூலினைப் பெற.. 044 2433 2924 என்ற எண்ணைத் தொடர்புக் கொள்ளவும்.
இந்து தமிழ் திசை நாளிதழுக்கு நன்றி!!!