இன்றைய நூலின் பெயர்: முகலாய பேரரசில் பெர்னியரின் பயணங்கள்
நூல் ஆசிரியர் : வின்சென்ட் A ஸ்மித் ( தமிழில் சிவ. முருகேசன் )
பெர்னியர்..
உலகப் புகழ்பெற்ற பிரெஞ்சு பயணி.
கி பி 1656 முதல் கி பி 1668 வரை இந்தியாவில் சுற்றுபயணம் செய்தவர். இவரின் பயணக்குறிப்புகள் இந்தியாவில் ஷாஜகானின் இறுதி நாட்களையும், ஔரங்கசீப்பின் ஆரம்பநாட்களையும் பற்றி பேசுகின்றன. 31 வயதில் இந்தியா வந்த பெர்னியர் ஷாஜகானுடனும், அவரின் பிள்ளைகளுடனும் நேரில் சந்தித்து பழகும் வாய்ப்பை பெற்றவர்.
ஷாஜகானோடு முரண்பட்டு அவரின் ஆட்சியை கைப்பற்றிய ஔரங்கசீப் தன் கைவலிமையை அதிகரித்து ஒரு பேரரசாக நிலைநிறுத்தும் காலம்வரை ஏறத்தாழ 12 ஆண்டுகள் பயணித்திருக்கிறார் பெர்னியர்.
அரசகுடும்பங்கள் மட்டுமில்லாமல் சாமானிய மக்கள் பற்றியும் எழுதுகிறார் பெர்னியர். இவரின் குறிப்புகள் அனைத்தும் பிரெஞ்சு மன்னருக்கு எழுதப்பட்ட கடிதங்களை போல் வடிவமைக்கப்பட்டுள்ளன.
பெர்னியரின் பயணக்குறிப்புகளை வாசிக்கும்போது ஒரு நாவலை வாசிக்கும் உணர்வு. ஷாஜகான் மற்றும் ஔரங்கசீப்பின் மாறுபட்ட எண்ண ஓட்டங்கள், அச்சங்கள், பழிதூற்றல்கள், கொலைகள், தியாகங்கள் என அனைத்தையும் ஒன்று விடாமல் பேசுகிறது.
வாசியுங்கள்..
ஷாஜகான் மற்றும் ஔரங்கசீப்புடன் வாழ்ந்துவிட்டு வாருங்கள்…
பக்கம்: 455
விலை: ரூபாய் 300
வெளியீடு: சந்தியா பதிப்பகம்
_வாசிப்பை சுவாசமாக்குவோம்_