பிரேக்கப் – கவிதை
தள்ளிக்கொள்கிறேன்
உன்னிடமிருந்து
தள்ளி..தள்ளியே இருந்தும் கொள்கிறேன்.
தள்ளியிருந்தால்
தனிமை தான் என்ற போதிலும்
தள்ளியே இருந்தும் கொள்கிறேன்.
உன் நினைவுகளை
தலையணையாகக் கட்டிக்கொள்கிறேன்.
நீ முத்தமிட்ட இடங்களை
ஸ்பரிசித்துக் கொள்கிறேன்.
உனக்காகவும்
எனக்காகவும்
இருவருக்குமானதாய்
பிரிந்தே இருக்கலாம்.
பிரிந்திருந்தால் இருவரின்
நேசத்தின் அழகு பார்க்கலாம்.
பிரிந்திருந்தால் இருவரின்
அன்பின் அளவு பார்க்கலாம்.
பிரிந்திருந்தால் இருவரும்
பரிமாற்றப்படுதலின்
பண்பு பார்க்கலாம்.
பிரிந்திருக்கும் காலங்களில்
நேசித்த நிமிடங்களை
உறவுகளோடு அசைப்போடலாம்
உணர்வுகளை இசையாக்கலாம்.
பிரிந்திருக்கும் காலங்களில்
உன் தொடுகையின்
தோற்றம் அறியலாம்.
பிரிந்திருக்கும் காலங்களில்
உன் பார்வையில் படிந்திருக்கும்
பகலிரவு காணலாம்.
நீ கொடுத்த பரிசுப் பொருட்கள்
நீ செய்த சுட்டித்தனங்கள்
நீ கொடுத்த குதூகலங்கள்
நீ செய்த குறும்புத்தனங்கள்
உன் மௌனங்களில்
உன் சத்தங்களில்
ஏற்ற இறக்கங்கள்
எவை எவை என காணலாம்
உள்ளத்தால் இடறியும்
உடலால் தடுமாறியும் இருந்த
தருணங்களைக் கணக்கிடலாம்.
ஆயினும் — நீ
அன்பில் நிலைப்பவனா?
அழகைப் பருகுபவனா?
நீ என்பது நானா?
நீ என்பது வெறோன்றா ?
எதுவாயினும்
நம் மனங்களைப் பரிசீலிப்போம்
பிரேக்கப்பில் துளிர்க்கட்டும் அன்பு
எழுதியவர் :
கவிவாணன்
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.