மணிச் சத்தம் கேட்கிறது
¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶
ஹைகூ கவிதைகள்
மணிச் சத்தம் கேட்கிறது
நான் மட்டும் தனியே
வண்டி மாடுகள் போன பாதை

இறந்த கோழி
உயிர்த்தெழுகிறது
சுழல் காற்றில் இறகுகள்.
மூக்கின் பிராப்தம்
கண்களுக்கில்லை
எங்கிருக்கிறது அந்த மலர்?

மாடு மேய்கிறது
வெட்டுக்கிளி கத்தரிக்கிறது
புல் வளருகிறது.

நிழல் தராத
பனை மரம்
நுங்கு தருகிறது.
யாருக்கு சொந்தம்?
வேலி தாண்டி
விழும் நிழல்.

ஒரு கவிதை கொடு
ஒரு மீன் தருகிறேன்
வாசம் பிடித்து வந்த பூனையே.

மொட்டைப் பாறை
உப்புக் கடல்
வராமலில்லை சூரியனும் சந்திரனும்.

முற்றும் திறந்து
முழுமையாய்த் தருகிறது பௌர்ணமி
அள்ளிக் குடிக்கும் அலைகள் .

இலை மறைவுக் கனி தெரிகிற
வண்டுக்குத் தெரியவில்லை
பக்கத்தில் மறைந்திருக்கும் பச்சோந்தி.
பிருந்தா சாரதி