பிரிட்டிஷ்- அமெரிக்க விண்வெளி வீரர் வனேசா ஆடி ரைஸ் ஓ'பிரையன் (British-American Astronaut Vanessa Audi Rhys O'Brien Based Article in Tamil) பற்றிய அறிமுக கட்டுரை | ஏற்காடு இளங்கோ | www.bookday.in |

பிரிட்டிஷ்- அமெரிக்க விண்வெளி வீரர் வனேசா ஆடி ரைஸ் ஓ’பிரையன் (Vanessa Audi Rhys O’Brien) – ஏற்காடு இளங்கோ

வனேசா ஆடி ரைஸ் ஓ’பிரையன் (Vanessa Audi Rhys O’Brien) என்பவர் ஓர் பிரிட்டிஷ்- அமெரிக்க மலையேறுபவர், ஆய்வாளர், நீர்வாழ் உயிரின வீரர், எழுத்தாளர் மற்றும் பொது பேச்சாளர் ஆவார். இவர் நிலம், கடல் மற்றும் விண்வெளி என அனைத்தின் உச்சத்தையும் எட்டிய முதல் பெண்மணி என்ற பெருமைக்குப் உரியவர். இவர் ஆறு கின்னஸ் உலக சாதனைகளைப் படைத்துள்ளார். இவர் ஒரு பிரிட்டிஷ் மற்றும் அமெரிக்க விண்வெளி வீரர் ஆவார்.

கல்வி

பிரிட்டிஷ்- அமெரிக்க விண்வெளி வீரர் வனேசா ஆடி ரைஸ் ஓ'பிரையன் (British-American Astronaut Vanessa Audi Rhys O'Brien Based Article in Tamil) பற்றிய அறிமுக கட்டுரை | ஏற்காடு இளங்கோ | www.bookday.in |

இவர் நியூயார்க் பல்கலைக்கழகத்தின் ஸ்டெர்ன் வணிகப் பள்ளியில் பொருளாதாரத்தில் இளங்கலைப் பட்டப் படிப்பை முடித்தார். பிறகு இதே பல்கலைக்கழகத்தில் எம்பிஏ முதுகலைப் பட்டம் பெற்றார். இந்த பல்கலைக்கழகத்தில் எம்பிஏ முடித்த சிறந்த 10 பேரில் ஒருவராக இவர் 2021 ஆம் ஆண்டில் அறிவிக்கப்பட்டார்.

பணி

இவர் அமெரிக்கா மற்றும் பிரிட்டிஷ் ஆகிய இரட்டை குடியுரிமையைப் பெற்றவர் ஆவார். இவர் மோர்கன் ஸ்டான்லி, பார்க்லேஸ் வங்கி மற்றும் பாங்க் ஆஃப் அமெரிக்கா ஆகியவற்றில் நிதி மற்றும் வணிக மேம்பாட்டு இயக்குனராகப் பணியாற்றினார். இவர் ராயல் புவியியல் சங்கத்தின் உறுப்பினராகவும், அறிவியல் ஆய்வு சங்கத்தில் கௌரவ ஆலோசனை உறுப்பினராகவும் உள்ளார். இவர் 2023 ஆம் ஆண்டில் ரோட்ஸ் மற்றும் மால்டாவின் செயிண்ட் ஜான் ஆஃப் ஜெருசலேமின் இறையாண்மை இராணுவ மருத்துவமனை ஆணையின் தலைவர் (Dame) ஆனார்.

மலையேற்றம்

பிரிட்டிஷ்- அமெரிக்க விண்வெளி வீரர் வனேசா ஆடி ரைஸ் ஓ'பிரையன் (British-American Astronaut Vanessa Audi Rhys O'Brien Based Article in Tamil) பற்றிய அறிமுக கட்டுரை | ஏற்காடு இளங்கோ | www.bookday.in |

இவர் பூமியின் மிக உயரமான எவரெஸ்ட் சிகரத்தின் மீது ஏறி சாதனைப் படைத்துள்ளார். இவர் 2017 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் உலகின் இரண்டாவது உயரமான K2 சிகரத்தை அடைந்த முதல் அமெரிக்கப் பெண்மணி மற்றும் முதல் பிரிட்டிஷ் பெண்மணி என்ற பெருமையைப் பெற்றார். மேலும் K2 சிகரத்தில் ஏறிய வயதான பெண்மணி என்ற சாதனையை அவர் தனது 52 ஆவது வயதில் படைத்தார்.

இவர் ஒவ்வொரு கண்டத்திலும் உள்ள மிக உயரமான சிகரத்தை (The Seven Summits) ஏறி உள்ளார். இந்த ஏழு சிகரங்களில் ஐந்து சிகரங்கள் 8000 மீட்டர் உயரம் கொண்டவை ஆகும். இந்த ஏழு உயரமான சிகரத்தை 295 நாட்களில் ஏறினார். இந்த இலக்கை முதன்முதலில் அடைந்த வேகமான பெண்மணி என்ற கின்னஸ் உலக சாதனையைப் பெற்றார். மேலும் இவர் வட மற்றும் தென் துருவங்களுக்கு கடைசி 111 கிலோமீட்டர் தூரத்தை 11 மாதங்களில் பனிச் சறுக்கு (Skiing) செய்துள்ளார்.

மரியானா அகழி

இவர் கடலின் மிக ஆழமானப் பகுதியான மரியானா அகழிக்கு (சேலஞ்சர் டீப்) 2020 ஆம் ஆண்டு ஜூன் 12 அன்று, விக்டர் வெஸ்கோவோ உடன் பயணம் செய்தார். இவர்கள் சேலஞ்சர் டீப்பின் கிழக்கு குளத்தில் இறங்கி மூன்று மணி நேரம் அடி பகுதியை வரைபடம் ஆக்கினர். டைவ் மூலம் தோராயமாக ஒரு மைல் பாழடைந்த அடிப்பகுதியை ஸ்கேன் செய்தனர். மேலும் இவர் 8 டன் அழுத்தத்தைத் தாங்கி, 3 மணி நேரம் 10,000 மீட்டருக்கும் அதிகமான ஆழத்தில் இருந்த முதல் பெண்மணி என்ற சாதனையையும் படைத்தார்.

பிரிட்டிஷ்- அமெரிக்க விண்வெளி வீரர் வனேசா ஆடி ரைஸ் ஓ'பிரையன் (British-American Astronaut Vanessa Audi Rhys O'Brien Based Article in Tamil) பற்றிய அறிமுக கட்டுரை | ஏற்காடு இளங்கோ | www.bookday.in |

விண்வெளிப் பயணம்

இவர் ப்ளூ ஆரிஜின் NS-22 என்ற ராக்கெட் மூலம் 2022 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 4 அன்று விண்வெளிக்குச் சென்றார். இது ப்ளூ ஆரிஜினின் 6 ஆவது மனிதப் பயணமாகும். இதில் சாரா சப்ரி என்ற பெண்ணும் பயணம் செய்தார். இரண்டு பெண் குழு உறுப்பினர்கள் அடங்கிய ப்ளூ ஆர்ஜினின் முதல் விண்வெளிப் பயணம் இதுவாகும். இது மணிக்கு 3,603 கிலோ மீட்டர் வேகத்தில் பறந்தது. இவர் கடல் மட்டத்திலிருந்து 107 கிலோ மீட்டர் உயரத்திற்குச் (3,51,232 அடி) சென்றார்.

இந்தப் பயணம் 10 நிமிடங்கள் 20 வினாடிகள் நீடித்தது. இவர் ஐ.நா. மகளிர் கொடியை விண்வெளியில் ஏந்தினார். இந்தப் பயணத்தின் மூலம் விண்வெளி வீரர் என்ற தகுதியைப் பெற்றார். இவர் விண்வெளியில் கார்மன் கோட்டை கடந்தார். இதன் பிறகு நிலம், கடல் மற்றும் வான்வழிப் பயணங்களில் உச்சத்தை எட்டிய (Explorers Extreme Trifecta) முதல் பெண்மணி என்ற பெருமையைப் பெற்றார்.

எழுதியவர் : 

✍️ – ஏற்காடு இளங்கோ

******************************************************************************

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1

Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q


இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளதிற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *