புத்தனுக்கு மறுபெயர் மாமா கவிதை – க. புனிதன்

Buddhanukku maru peyar mama Poem by k. Punithan புத்தனுக்கு மறுபெயர் மாமா கவிதை - க. புனிதன்

பாப்பா பார்த்தவுடன்
மாமா என்றது
புத்தனுக்கு மறு பெயர்
மாமா
நாய்க் குட்டி
மழைத்துளி
டெடி பொம்மை
மகிழ்ச்சி

ஊர் சுற்றி வந்த நாயை
தெள்ளவேரி என திட்டினாள்
அம்மா
ஏனோ புத்தனின் ஞாபகம் வந்தது

பட்டு நூல் நூற்கும்
சின் கோனா மரம்
போதி மரம் எனக்கு

புத்தன் கண் மூடி அமர்ந்திருந்தார்
பட்டுப் புழுவின்
அமைதியான நூற்பிசை கேட்டு

நூலகம் அருகே
மரக்கிளையில்
அமைதியாய் நூல் நூற்கும்
பட்டு புழு

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.