பட்டாம் பூச்சி கவிதைகள் 3 | தொகுப்பு – புதுகை விஜய் ஆனந்த்1.கண்டேன் கடவுளை…!
****************************

எனக்கு மட்டும் ஏன்
எப்படி..?
இல்லையா? இருக்கா?
தேடினேன் தேடினேன்
அருவம் என்றார்
உருவம் என்றார்
அருஉருவம் என்றார்
எல்லாமே பிரமம் என்றார்
காடேகி மலையேறி
குளமூழ்கி நோன்பிருந்தேன்
காணவில்லை
எங்கேனும்
மயக்கமுற்று வீழ்ந்தேன்
தூக்கியெடுத்து
உணவு உடைதந்தார்
கண்டேன் கண்டேன்
கடவுளை…!!

–ஜா.பா.ரா
2.எத்தனை தைரியம்…..
****************************

மரத்தின்
கிளைகளாய்ப் பாம்புகள்….
விடலை சிறுவனின் கவட்டை…
உறுத்தும் பார்வையுடன்
சுற்றிப் பறக்கும் வல்லூறு ….
சின்ன கூட்டிலே,
“தான் பெற்ற முட்டையை
குஞ்சு பொரிக்கும்”
சிட்டுக்குத்தான்
எத்தனை தைரியம்…..

— ஸ்ரீவாரிமஞ்சு

Image

உலக புத்தக தினத்தையொட்டி பாரதி புத்தகாலயம், புதிய கோணம், இளையோர் இலக்கியம் மற்றும் புக்ஸ் ஃபார் சில்ரன் வெளியிட்டுள்ள அனைத்து நூல்களுக்கு 25% சிறப்புக் கழிவு உண்டு. (23.04.2021 – 05.05.2021 வரை மட்டும்)